மலேசிய அரசாங்கம்

மலேசிய அரசாங்கம் அல்லது மலேசிய மத்திய அரசாங்கம், (மலாய்: Kerajaan Persekutuan Malaysia; ஆங்கிலம்: Federal Government of Malaysia) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான கூட்டாட்சி அரசாங்கம் ஆகும்.

மலேசிய அரசாங்கம்
மலேசிய அரசாங்கத்தின் கொடி
உருவாக்கம்16 செப்டம்பர் 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-09-16)
நாடுமலேசியா மலேசியா
இணையத்தளம்malaysia.gov.my
சட்டம் இயற்றும் பிரிவு
நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றம்
அமர்விடம்டேவான் ராக்யாட்
டேவான் நெகாரா
நிர்வாகப் பிரிவு
தலைவர்மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்
நியமித்தவர்யாங் டி பெர்துவான் அகோங்
தலைமையகம்புத்ராஜெயா
முக்கியப் பொறுப்புமலேசிய அமைச்சரவை
நீதிப்பிரிவு
நீதிமன்றம்மலேசிய பெடரல் நீதிமன்றம்
(Federal Court of Malaysia)
இருக்கைமலேசிய நீதி அரண்மனை

மலேசியாவை நிர்வாகம் செய்யும் இந்த மலேசிய அரசு, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசப் பகுதியில் (Federal Territory of Putrajaya) இருந்து இயங்கி வருகிறது. இருப்பினும் மலேசிய அரசாங்கத்தின் சட்டங்களை இயற்றும் மலேசிய நாடாளுமன்றம் மட்டும் கோலாலம்பூர் மாநகரில் இருந்து இயங்கி வருகிறது.

பொது

மலேசியக் கூட்டமைப்பில் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த 11 மாநிலங்கள்; மேற்கு மலேசியாவைச் சேர்ந்த சபா, சரவாக் மாநிலங்கள்; மற்றும் 3 கூட்டரசு பிரதேசங்கள்; மலேசிய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

வெஸ்ட்மின்ஸ்டர் அரசியலை (Westminster system) முன்மாதிரியாகக் கொண்டு ஓர் அரசியலமைப்பு முடியாட்சிக்குள் செயல்படுகிறது. மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அரசமைப்பு முறைமையில் வகைப் படுத்தப்படுகிறது.

மலேசிய அரசாங்க நிர்வாகம்

மலேசியாவின் கூட்டாட்சி அரசாங்கம், நாட்டின் உச்சநிலைச் சட்டமான மலேசிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே அந்த உச்சநிலைச் சட்டத்திற்கும் மலேசிய அரசாங்க நிர்வாகம் கட்டுப் படுகிறது.

மலேசியாவின் கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 127-இன் (Article 127 of the Federal Constitution of Malaysia) கீழ் அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. மூன்று துறைகள் உள்ளன: நிர்வாகம்; சட்டம் இயற்றும் துறை; நீதித்துறை.

மத்திய அரசு நிர்வாகத் துறை

மலேசியாவின் உச்சக்கட்ட அதிகாரம் மத்திய அரசு அல்லது கூட்டரசு அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டரசின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் புத்ராஜெயாவில் உள்ள அரசு நிர்வாக மையத்தில் நிர்வகிக்கப் படுகின்றன. மலேசிய அரசாங்கத்தின் தலைவர் என்று அழைக்கப்படும் மலேசியப் பிரதமர் தலைமையில் இயங்குகிறது.

சட்டம் இயற்றும் துறை

மலேசிய நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டது. மக்களவை எனும் மக்கள் பிரதிநிதிகள் அவை டேவான் ராக்யாட் (Dewan Rakyat); மற்றும் மேலவை எனும் செனட் சபை டேவான் நெகாரா (Dewan Negara).

மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் நாட்டின் தலைவர் எனும் வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கமாக விளங்குகிறார்.

டேவான் நெகாரா

டேவான் நெகாரா அல்லது மேலவை (மலாய்: Dewan Negara; ஆங்கிலம்: Senate); என்பது 70 உறுப்பினர்களைக் கொண்டது. மலேசிய மாநிலங்கள் 13-இல் இருந்து ஒவ்வொன்றிலும் இருவராக 26 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப் படுகின்றனர். மேலும் 44 பேர் மாமன்னரால் நியமிக்கப் படுகின்றனர்.

அனைத்து எழுபது மேலவை உறுப்பினர்களும் மூன்று வருட காலத்திற்கு அமர்கின்றனர். அதிகபட்சம் இரண்டு முறை மேலவை உறுப்பினராக பொறுப்பு வகிக்கலாம்.

மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப் படுகின்றன. இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமூலங்கள் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர் அந்தச் சட்ட மூலங்கள் சட்டமாக்கப் படுகின்றன.

டேவான் ராக்யாட்

டேவான் ராக்யாட் அல்லது கீழவை (மலாய்: Dewan Rakyat; ஆங்கிலம்: House of Representatives); என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஆகும். மக்களவையில் 222 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். மலேசியாவின் அனைத்துச் சட்ட மசோதக்களும் இங்குதான் விவாதிக்கப் படுகின்றன.

அவ்வாறு இயற்றப்படும் சட்ட மசோதாக்கள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் சம்மதத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றன. அதன் பின்னர், மலேசியப் பேரரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த மசோதாக்கள் சட்டங்களாகின்றன.

நாடாளுமன்றம் சட்டப்படி அதிகப் பட்சமாக ஐந்து ஆண்டுகள் இயங்கலாம். நாடாளுமன்றத்தை மலேசியப் பேரரசர் எந்த நேரத்திலும் கலைக்கலாம். இருப்பினும் வழக்கமாகப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவ்வாறு செய்யப் படுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

மலேசிய அரசாங்கம் பொதுமலேசிய அரசாங்கம் மத்திய அரசு நிர்வாகத் துறைமலேசிய அரசாங்கம் சட்டம் இயற்றும் துறைமலேசிய அரசாங்கம் மேலும் காண்கமலேசிய அரசாங்கம் மேற்கோள்கள்மலேசிய அரசாங்கம்ஆங்கிலம்மலாய் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவம்காரைக்கால் அம்மையார்ஜலியான்வாலா பாக் படுகொலைஎட்டுத்தொகைதாயுமானவர்ஆத்திசூடிஇன்ஸ்ட்டாகிராம்போகர்அகழ்ப்போர்மரபுச்சொற்கள்முல்லை (திணை)சின்னம்மைகிளிநயன்தாராவெற்றிமாறன்காதலும் கடந்து போகும்ராம் சரண்108 வைணவத் திருத்தலங்கள்பெரியம்மைதமிழ் நீதி நூல்கள்குறுந்தொகைதொகைச்சொல்இயேசுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கதீஜாமக்காதெருக்கூத்துஇந்திய தேசிய சின்னங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்காளமேகம்பூலித்தேவன்ஆய்த எழுத்துவிஜயநகரப் பேரரசுபனிக்குட நீர்போக்குவரத்துபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்யூடியூப்இந்திய வரலாறுகு. ப. ராஜகோபாலன்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்கல்லணைநாழிகைதிருவாசகம்அர்ஜூன் தாஸ்பைரவர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்விநாயகர் அகவல்யானைவிருந்தோம்பல்சே குவேராமனித எலும்புகளின் பட்டியல்இந்திய அரசியலமைப்புஆறுமுக நாவலர்சிந்துவெளி நாகரிகம்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்நான் சிரித்தால்அயோத்தி தாசர்சனீஸ்வரன்இலங்கையின் வரலாறுகிரியாட்டினைன்முடக்கு வாதம்ரேஷ்மா பசுபுலேட்டிகுறிஞ்சிப் பாட்டுகே. அண்ணாமலைநீரிழிவு நோய்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)அக்பர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கண்ணாடி விரியன்சமுதாய சேவை பதிவேடுஉமறு இப்னு அல்-கத்தாப்பக்கவாதம்காப்பியம்சிவனின் 108 திருநாமங்கள்நீர்தற்கொலை முறைகள்ஆற்றுப்படை🡆 More