நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் (Districts under Central Government Jurisdiction, தாஜிக் மொழி : Ноҳияҳои тобеи ҷумҳурӣ ) என்பது தஜிகிஸ்தானில் உள்ள ஒரு பிராந்தியம் ஆகும்.

இதில் 9 மாவட்டங்கள் மற்றும் 4 மாவட்ட அளவிலான நகரங்கள் உள்ளன. இவை நேரடியாக நடுவண் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. தஜிகிஸ்தானின் தலைநகரான துசான்பே, நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அதன் ஒரு பகுதியாக இல்லை. இப்பகுதி 28,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, மொத்த மக்கள் தொகை 2,165,900 (2020) ஆகும். 2010 ஆம் ஆண்டில் மாவட்டங்களின் இன அமைப்பானது 85% தாஜிக்குகள் மற்றும் 11.7% உஸ்பெக்கியர் ஆகும்.

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்
Ноҳияҳои тобеи ҷумҳурӣ
ناحیه های تابع جمهوری
பிராந்தியம்
தஜிகிஸ்தானில் நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்
தஜிகிஸ்தானில் நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்
ஆள்கூறுகள்: 39°0′N 70°0′E / 39.000°N 70.000°E / 39.000; 70.000
நாடுநடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் Tajikistan
தலைநகரம்துசான்பே
பரப்பளவு
 • மொத்தம்28,500 km2 (11,000 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்2,165,900
 • அடர்த்தி76/km2 (200/sq mi)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுTJ-RA
ம.மே.சு. (2017)0.641
medium

வரலாறு

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் 1955 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட முன்னாள் மாகாணமான கர்ம் ஒப்லாஸ்ட்டின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. இவை முன்பு கரோடெஜின் பிராந்தியம் என்று அழைக்கப்பட்டது.

நிர்வாக பிரிவுகள்

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் 9 மாவட்டங்களையும் 4 மாவட்ட அளவிலான நகரங்களையும் உள்ளடக்கியது. அவை வஹதத், துர்சுன்சோடா, ஹிசோர் மற்றும் ரோகுன் . மாவட்டங்கள் ஆகும்.

  • பைசோபோட் மாவட்டம்
  • லக்ஷ் மாவட்டம் (முன்னர் ஜிர்கடோல் மாவட்டம்)
  • நியூரோபோட் மாவட்டம் (முன்னர் தர்பாண்ட் மாவட்டம் )
  • ராஷ்ட் மாவட்டம் (முன்னர் கர்ம் மாவட்டம்)
  • ருடாக்கி மாவட்டம் (முன்னர் லெனின்ஸ்கி மாவட்டம்)
  • சாங்வோர் மாவட்டம் (முன்னர் தவில்தாரா மாவட்டம் )
  • ஷாஹ்ரினவ் மாவட்டம்
  • டோஜிகோபோட் மாவட்டம்
  • வர்சோப் மாவட்டம்

நிலவியல்

இந்த பீடபூமியில் ஆமூ தாரியாவின் வலது கை துணை ஆறான வக்ஷ் ஆறு பாய்கிறது. வடக்கு எல்லையில் கிஸ்ஸர் மற்றும் ஜெராவ்ஷன் மலைகள் உள்ளன. தெற்கு எல்லையில் தர்வாஸ் 7,600 மீட்டர் (24,900 அடி) மலை உள்ளது. பிராந்தியத்தின் குளிர்கால காலநிலையானது மிகவும் மோசமானதாக இருக்கும். அக்டோபரில் பனி பெய்யத் தொடங்குகிறது, அது மறைவதற்கு மே மாதமாகும். இருப்பினும், வெப்பமான மாதங்களில், மலைச்சரிவுகளில் மேப்பிள், மலை சாம்பல், ஆப்பிள், பேரிக்காய், வாதுமை மரங்கள் பசுமையாக நிறைந்திருக்கின்றன; பழத் தோட்டங்களில் ஆப்பிள், பேரீச்சம்பழங்கள் மட்டுமல்லாமல், பீச், செர்ரி, முசுக்கொட்டை, பாதாமி பழங்களும் விளைகின்றன. இங்கு உள்ள மாடுகளும், குதிரைகளும் குட்டையானவை என்றாலும், இவை திடமான இனத்தைச் சேர்ந்தவையாகும்.

குறிப்புகள்

Tags:

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் வரலாறுநடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் நிர்வாக பிரிவுகள்நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் நிலவியல்நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் குறிப்புகள்நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்தஜிகிஸ்தானின் பிராந்தியங்கள்தஜிகிஸ்தான்தாஜிக் மொழிதுசான்பே

🔥 Trending searches on Wiki தமிழ்:

வணிகம்பெயர்ச்சொல்ஆத்திசூடிசமுத்திரக்கனிஅவுரி (தாவரம்)சைவ சமயம்உடன்கட்டை ஏறல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பக்தி இலக்கியம்உலக சுகாதார அமைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழ் விக்கிப்பீடியாசிவன்சீவக சிந்தாமணிசுகன்யா (நடிகை)செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)கல்லணைபாரத ரத்னாவேலைக்காரி (திரைப்படம்)கண்ணப்ப நாயனார்காரைக்கால் அம்மையார்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சேமிப்புக் கணக்குஜி. யு. போப்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழ் எழுத்து முறைசித்த மருத்துவம்விசயகாந்துதிருநாவுக்கரசு நாயனார்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தேவாரம்அஜித் குமார்முன்னின்பம்தமிழ்நாடு காவல்துறைபள்ளுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அளபெடைஇலட்சம்பாண்டவர்ஐம்பெருங் காப்பியங்கள்கன்னி (சோதிடம்)பெரியாழ்வார்கில்லி (திரைப்படம்)கழுகுதிருப்பூர் குமரன்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஜோதிகாகள்ளர் (இனக் குழுமம்)மருதம் (திணை)குகேஷ்திராவிடர்தமிழ்விடு தூது69 (பாலியல் நிலை)விளக்கெண்ணெய்தனுஷ் (நடிகர்)ஐங்குறுநூறுகபிலர் (சங்ககாலம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்குறிஞ்சிப் பாட்டுமுன்மார்பு குத்தல்சுற்றுச்சூழல் மாசுபாடுகண்ணதாசன்தமிழ்நாடுஸ்ரீலீலாதடம் (திரைப்படம்)கணியன் பூங்குன்றனார்இணையம்மூலம் (நோய்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிறுபாணாற்றுப்படைபாண்டி கோயில்முதல் மரியாதைஉலா (இலக்கியம்)பகவத் கீதைகள்ளழகர் கோயில், மதுரைபுறாசிறுகதைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005🡆 More