தமிழ் அகரமுதலி

அகரமுதலி அல்லது அகராதி என்பது அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும்.

இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் விவரங்களைத் தரும் நூல் தமிழ் அகராதி ஆகும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). அகராதி அகரமுதலி எனவும் வழங்கப்படும்.

தமிழ் அகரமுதலி
1909ல் வெளியிடப்பட்ட அகரமுதலியினுடைய, முதல் தாளின் இருபக்கங்கள்.

இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.

வரலாறு

தமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன.

16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே அகராதி என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும் 1824ஆம் ஆண்டில்தான் சதுரகராதி முழுவது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பகுதியை 1819இல் எல்லிஸ் என்பவர் அச்சில் வழங்க முனைந்தார். திருச்சிற்றம்பல ஐயர் என்பவர் இதனைச் சீர்திருத்தி உதவினார். கி.பி. 1824இல்தான் சதுரகராதி முழுவதும் சென்னையிலிருந்த கல்லூரியின் இயக்குநர் ரிச்சர்டு கிளார்க்கின் ஆணைப்படி அச்சேறி வெளியாயிற்று. தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திர கவிராயரும் அப்போது அதனை மேற்பார்வையிட்டனர். பிற பதிப்புகள் 1835, 1860, 1928, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின .

பட்டியல்

மின்னகராதி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ் அகரமுதலி வரலாறுதமிழ் அகரமுதலி பட்டியல்தமிழ் அகரமுதலி மின்னகராதிதமிழ் அகரமுதலி இவற்றையும் பார்க்கதமிழ் அகரமுதலி மேற்கோள்கள்தமிழ் அகரமுதலி வெளி இணைப்புகள்தமிழ் அகரமுதலிஅகரவரிசைஅகராதிமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாமல்லபுரம்விரை வீக்கம்நிர்மலா சீதாராமன்நாம் தமிழர் கட்சிநயினார் நாகேந்திரன்காவிரி ஆறுடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சுரதாசித்திரைபூலித்தேவன்ஊராட்சி ஒன்றியம்பழமுதிர்சோலை முருகன் கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருமணம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிபாரிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வ. உ. சிதம்பரம்பிள்ளைமுத்துராமலிங்கத் தேவர்விண்டோசு எக்சு. பி.பாட்டாளி மக்கள் கட்சிஇராவணன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇடைச்சொல்நான்மணிக்கடிகைஅருங்காட்சியகம்பக்தி இலக்கியம்வினையெச்சம்மருதம் (திணை)மக்களவை (இந்தியா)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஈகைஆறுமுக நாவலர்நெல்குருதி வகைபூரான்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇந்தியாஓ. பன்னீர்செல்வம்இசுலாமிய நாட்காட்டிவாணிதாசன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நுரையீரல் அழற்சிதேவநேயப் பாவாணர்காதல் மன்னன் (திரைப்படம்)காமராசர்உரிச்சொல்யானைஉவமைத்தொகைசித்த மருத்துவம்பழனி முருகன் கோவில்இலங்கையின் மாகாணங்கள்ஜெயகாந்தன்சவ்வாது மலைரமலான்பாரதிய ஜனதா கட்சிசுவாதி (பஞ்சாங்கம்)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமார்ச்சு 28இயேசுவின் இறுதி இராவுணவுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வேற்றுமையுருபுபோயர்வே. செந்தில்பாலாஜிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)சுந்தர காண்டம்மு. வரதராசன்உயிர்ப்பு ஞாயிறுபொதியம்உலக நாடக அரங்க நாள்இளங்கோவடிகள்அ. கணேசமூர்த்திகே. என். நேருமு. க. ஸ்டாலின்ஈ. வெ. இராமசாமிபர்வத மலைவீரப்பன்சுந்தரமூர்த்தி நாயனார்🡆 More