சுலோவேனிய விக்கிப்பீடியா

சுலோவேனிய விக்கிபீடியா (Slovene Wikipedia) என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் சுலோவேனிய மொழி பதிப்பாகும்.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் சுலோவேனிய விக்கிபீடியா செயல்படுகிறது. 2007 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் சுலோவேனிய மொழியில் 50000 கட்டுரைகள் எழுதப்பட்டன. 2021 ஆம் ஆண்டு சனவரி மாத நிலவரப்படி இம்மொழியில் 171000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

சுலோவேனிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய களைக்களஞ்சியத் திட்டம்
கிடைக்கும் மொழி(கள்)சுலோவேனிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்கட்டாயமல்ல
உரலிhttp://sl.wikipedia.org/

சுலோவேனிய விக்கிபீடியா அந்நாட்டில் மேற்கோள் பணிகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சுலோவேனியப் பயனர்கள் அதிகம் பார்வையிடுகின்ற சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றாகவும் இவ்விக்கிப்பீடியா திகழ்கிறது. பொதுவாக இதிலுள்ள அதிகாரப்பூர்வ இணையப் பயன்பாட்டு புள்ளிவிவரங்களுக்கும் விக்கிபீடியா பதிப்புகளுக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதும் இருப்பதில்லை. விக்கிப்பீடியா.ஆர்க் என்ற அடிப்படையான ஆள்களப் பெயரில் மட்டுமே சுலோவேனிய விக்கிப்பீடியா பகுப்பாய்வு செயல்களை மேற்கொள்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சுலோவேனிய மொழி பதிப்பு விக்கிபீடியா பற்றிய ஊடக அறிக்கை பட்டியலில் இதன் பொதுவான இருப்பு இடம்பெறுகிறது. இருப்பினும், கட்டமைக்கப்பட்ட அறிவின் ஒப்பீட்டளவில் ஒரு பெரிய மற்றும் சுதந்திரமாக அணுகக்கூடிய அமைப்பாக, சுலோவேனிய விக்கிப்பீடியா திகழ்கிறது. எடுத்துக்காட்டாக, மொழியியல் மென்பொருளைப் பயிற்றுவிப்பதற்கான மூல மின் நூலகத்தை உருவாக்குவதற்கும், சுலோவேனிய இலக்கிய ஆசிரியர்களின் வலை இருப்பை பகுப்பாய்வு செய்வதற்கும் இவ்விக்கிப்பீடியா அங்கு பயன்படுத்தப்படுகிறது. உலுப்லயானா பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் இணைந்து பல வெற்றிகரமான ஒத்துழைப்பு திட்டங்கள் சுலோவேனிய மொழி விக்கிப்பீடியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுலோவேனிய நாட்டு மாணவர்களைக் கொண்டு உள்ளடக்க உருவாக்கத்தை மேம்படுத்துவது ஒரு கற்பித்தல் முறையாக இங்கு பின்பற்றப்படுகிறது.

சுலோவேனிய தீவிர விக்கிபீடியர்கள் தேசிய ஊடகங்களில் விக்கிபீடியா பற்றிய விவாதங்களில் இடம்பெறுகின்றனர். பொதுவான விக்கிப்பீடியா மேம்பாடு மற்றும் சுலோவேனிய மொழி விக்கிப்பீடியா சார்ந்த விவாதங்கள் இதில் இடம்பெறுகின்றன.

மைல்கற்கள்

  • 100 கட்டுரைகள் - சூன் 18, 2002
  • 1,000 கட்டுரைகள் - செப்டம்பர் 30, 2003
  • 10,000 கட்டுரைகள் - பிப்ரவரி 7, 2005
  • 20000 கட்டுரைகள் - திசம்பர் 17, 2005
  • 30,000 கட்டுரைகள் - சூன் 30, 2006
  • 40,000 கட்டுரைகள் - பிப்ரவரி 15, 2007
  • 50,000 கட்டுரைகள் - சூலை 17, 2007
  • 100,000 கட்டுரைகள் - ஆகத்து 15, 2010

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

சுலோவேனிய விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலோவேனிய விக்கிப்பீடியாப் பதிப்பு
  • Slovene Wiki
  • Vse najboljše, Wikipedija! (in Slovene). [Happy Birthday, Wikipedia!]. Radio interview on Val 202 on the occasion of the 10th anniversary of the Slovene Wiki தமிழ். RTV Slovenija. Accessed on 25 February 2012.

Tags:

சுலோவேனிய மொழிவிக்கிப்பீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்டோசு எக்சு. பி.விஜயநகரப் பேரரசுஇராவணன்திருக்குறள்தொன்மம்மருதமலை முருகன் கோயில்வைணவ சமயம்தமிழர் நிலத்திணைகள்புங்கைமட்பாண்டம்தங்கராசு நடராசன்நாளந்தா பல்கலைக்கழகம்விவேகானந்தர்கல்வெட்டியல்கல்வெட்டுவேலைக்காரி (திரைப்படம்)கம்பராமாயணம்பொது ஊழிஇயற்கைப் பேரழிவுசெப்புஐந்திணைகளும் உரிப்பொருளும்மதுரைக் காஞ்சிமொழிபெயர்ப்புமனித உரிமைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமரகத நாணயம் (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)திருநாவுக்கரசு நாயனார்குணங்குடி மஸ்தான் சாகிபுதொகாநிலைத் தொடர்பில்லா (2007 திரைப்படம்)பூக்கள் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்முத்துராமலிங்கத் தேவர்சுரதாமரபுத்தொடர்பகத் சிங்குண்டிசாக்கிரட்டீசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சிற்பி பாலசுப்ரமணியம்சூரைதூது (பாட்டியல்)தமிழ்ப் பிராமிபிரியா பவானி சங்கர்நிணநீர்க்கணுஜன கண மனமழைபாரதிய ஜனதா கட்சிகாவிரிப்பூம்பட்டினம்பக்தி இலக்கியம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகுமரகுருபரர்திருத்தணி முருகன் கோயில்ஆட்கொணர்வு மனுஉவமையணிதஞ்சாவூர்ஆகு பெயர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)பொன்னகரம் (சிறுகதை)பட்டா (நில உரிமை)அறுவகைப் பெயர்ச்சொற்கள்மெய்ப்பொருள் நாயனார்வெண்பாஅரிப்புத் தோலழற்சிதனுசு (சோதிடம்)மெஹந்தி சர்க்கஸ்திரிகூடராசப்பர்திருட்டுப்பயலே 2திரு. வி. கலியாணசுந்தரனார்மரங்களின் பட்டியல்குறவஞ்சிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சுற்றுச்சூழல் பாதுகாப்பு🡆 More