சுகுமார் ராய்

சுகுமார் ராய் ( Sukumar Ray ) ⓘ;(பிறப்பு:1887 அக்டோபர் 30 -இறப்பு: 1923 செப்டம்பர் 10) இவர் ஒரு பெங்காலி கவிஞரும், கதை எழுத்தாளரும், நாடக ஆசிரியரும் மற்றும் இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பத்திரிகை ஆசிரியரும் ஆவார்.

குழந்தைகளுக்காக இவர் எழுதிய எழுத்துக்களுக்காக முக்கியமாக நினைவுகூரப்படுகிறார். இவரது தந்தை உபேந்திரகிஷோர் ராய் குழந்தைகள் கதை எழுத்தாளர் ஆவார். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ராய் இவரது மகனாவார். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சந்தீப் ராய் இவரது பேரனாவார். இவரது படைப்புகளான அபோல் தபோல் (கிபெரிஷ்),புதினமான ஆஜாபாராலா, சிறுகதைத் தொகுப்பு பக்லா தாஷு (கிரேஸி டாஷு) மற்றும் சாலச்சிட்டாச்சஞ்சரி போன்றவை ஆலிசின் அற்புத உலகம் என்ற படைப்பிற்கு ஒத்ததாக கருதப்படுகின்றன. இவர் இறந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெங்காலி இலக்கியத்தில் குழந்தைகள் எழுத்தாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக ராய் இருக்கிறார்.

சுகுமார் ராய்
சுகுமார் ராய்
இயற்பெயர்
সুকুমার রায়
பிறப்புசுகுமார் ராய்
(1887-10-30)30 அக்டோபர் 1887
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு10 செப்டம்பர் 1923(1923-09-10) (அகவை 35)
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
மொழிபெங்காலி
தேசியம்பிரித்டானிய இந்தியா
கல்வி நிலையம்மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
லண்டன் தொடர்பு கல்லூரி
காலம்வங்காள மறுமலர்ச்சி
வகைஇலக்கிய கேலிகள், உண்மைகள் கட்டுரைகள் அறிவியல் மற்றும் மெய்யியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அபோல் தபோல், பக்லா தாஷு, ஹாஜாபராலா
துணைவர்சுப்ரதா ராய்
பிள்ளைகள்சத்யஜித் ராய் (மகன்)
குடும்பத்தினர்உபேந்திரகிஷோர் ராய் (தந்தை) மற்ரும் பிதுமுகி தேவி (தாயார்)

ஆரம்ப ஆண்டுகளில்

சுகுமார் ராய் 1887 அக்டோபர் 30 அன்று பிரிட்டிசு இந்தியாவின் கொல்கத்தாவில் (இன்றைய மேற்கு வங்காளம் ) ஒரு பிரம்மோ குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் கிழக்கு வங்காளத்தின் மைமென்சிங் பிரிவின் மசூவா கிராமம் மற்றும் பிரிட்டிசு இந்தியாவில் அசாமில், (தற்போது வங்காள தேசம்) இருந்தது. இரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய நண்பரான சுகுமாரின் தந்தை உபேந்திரகிஷோர் ராய் பிரபல வங்காள எழுத்தாளரும், ஓவியரும், வயலின் வாசிப்பாளரும் மற்றும் இசையமைப்பாளரும், தொழில்நுட்பவியலாளரும், தொழில் முறை வானியலாளர் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். சுகுமாரின் தாய் பிதுமுகி தேவி துவாரகநாத் கங்குலிஎன்பவரின் மகளாவார்.

சுகுமார் ராய் 
சுகுமார் ராய் தனது தந்தை உபேந்திரகிஷோர் ராய், தாய் பிதுமுகி மற்றும் ஐந்து உடன்பிறப்புகளுடன்.

வங்காள மறுமலர்ச்சியின் உச்சம் என்று அழைக்கப்படும் சகாப்தத்தில் பிறந்த இவர், தனது இலக்கிய திறமைகளை வளர்த்த சூழலில் வளர்ந்தார். ஜகதீஷ் சந்திரபோஸ், பிரபுல்லா சந்திர ராய், அதுல் பிரசாத் சென் போன்றவர்களும் இவரது குடும்ப நண்பர்களாக இருந்தனர். தனது தந்தையைப் போலவே, இவரும் இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

கல்வி மற்றும் தொழில்

1906 ஆம் ஆண்டில், ராய் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இரட்டை பட்டங்களை பெற்றார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு இவர் சிட்டி கல்லூரி பள்ளியில் படித்தார். சூர்யா சென் வீதி தனது வகுப்பு தோழருடன், பிரபலமான வேடிக்கையான கதாபாத்திரமான "பக்லா தாஷு" இவரது பல கதைகளில் தோன்றினார். இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கல்லச்சுக்கலை பள்ளியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் அச்சிடும் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றார். மேலும், இந்தியாவில் புகைப்படம் எடுத்தல் மற்றும் கல்லச்சுக்கலை ஆகியவற்றின் முன்னோடியாக இருந்தார். இங்கிலாந்தில் இருந்தபோது, தாகூர் நோபல் பரிசை வெல்வதற்கு முன்பு இரவீந்திரநாத்தின் பாடல்கள் பற்றியும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இதற்கிடையில், சுகுமார் ஒரு எடுத்து காட்டுக்கு படங்கள் வரைபவராக பாராட்டுகளைப் பெற்றார். ஒரு தொழில்நுட்பவியலாளராக, அவர் ஹால்ஃபோன் தடுப்பு தயாரிப்பின் புதிய முறைகளையும் உருவாக்கினார். மேலும் இது குறித்த தொழில்நுட்ப கட்டுரைகள் இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. பென்ரோஸ் என்ற இதழ் ராய் எழுதிய இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது. ஐக்கிய இராச்சியத்தில் இருந்தபோது இவர் 1912 இல் ராயல் புகைப்படகலைஞர்கள் அமைப்பில் சேர்ந்தார். அதில் தான் இறக்கும் வரை உறுப்பினராக இருந்தார். 1922 இல் தனது பெல்லோஷிப்பையும் பெற்றார்.

சுகுமார் ராய் 
சுகுமார் ராய் தனது மனைவி சுப்ரபா ராயுடன் (1914)

இவரது தந்தை உபேந்திரகிஷோர் யு. ராய் அண்ட் சன்ஸ் என்ற வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இது சுகுமார் மற்றும் சுபினே ஆகியோருக்கு உதவியது. அச்சிடும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள சுகுமார் இங்கிலாந்து சென்றபோது, உபேந்திரகிஷோர் நிலம் வாங்கி ஒரு கட்டிடம் கட்டினார். உயர்தர தொழில்நுட்பத்துடன் அச்சிடுவதற்கான வசதிகளுடன் ஒரு அச்சகத்தை அமைத்தார். 1913 மே மாதம் அவர் சந்தேஷ் என்ற குழந்தைகள் பத்திரிகையைத் தொடங்கினார். சுகுமார் இங்கிலாந்திலிருந்து திரும்பியவுடனேயே இவரது எழுத்துக்களும் ஓவியங்களும் சந்தேஷில் வெளிவரத் தொடங்கின. 1915 திசம்பர் 20 அன்று உபேந்திரகிஷோர் இறந்த பிறகு, சுகுமார் அச்சிடுதல் மற்றும் வெளியீட்டுத் தொழில்களையும் சந்தேஷையும் சுமார் எட்டு ஆண்டுகள் நடத்தினார். இவரது தம்பி சுபினாய் இவருக்கு உதவினார். மேலும் பல உறவினர்கள் "சந்தேஷ்" பத்திரிக்கைக்காக எழுதினர்.

சுகுமார் ராய் 
சுகுமார் ராய் வீடு, 100 ஏ, கார்பர் சாலை, கொல்கத்தா - பாரம்பரிய கட்டிடக் குறிச்சொல் கே.எம்.சி.

சுகுமார் ரே "திங்கள் விடுதி" இன் ஒருங்கிணைப்பாளர் என்றும் அழைக்கப்பட்டார். ராய் இல்லத்தில் வாரந்தோறும் ஒத்த எண்ணம் கொண்ட மக்கள் கூட்டம், அங்கு உறுப்பினர்கள் உலகத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை பெருமளவில் வெளிப்படுத்த சுதந்திரமாக இருந்தனர். "திங்கள் விடுதி" தொடர்பான விஷயங்கள், முதன்மையாக வருகையை கோருதல், முக்கியமான கூட்டங்களை அறிவித்தல் போன்ற விஷயங்கள் தொடர்பாக சுகுமார் ராய் பல கவிதைகள் எழுதினார்.

சுகுமார் ராய் பிரம்ம சமாஜத்தில் சீர்திருத்தவாத பிரிவின் தலைவராகவும் இருந்தார். சுகுமார் ராய் "அதிதர் கதா" என்ற ஒரு (பெங்காலி: অতীতের wrote) ஒரு நீண்ட கவிதையை எழுதினார். இது பிரம்ம சமாஜத்தின் வரலாற்றின் பிரபலமான விளக்கக்காட்சியாகும் - இது பிரம்ம சமாஜத்தின் பகுத்தறிவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த ஒரு சிறிய கையேடாக வெளியிடப்பட்டது. தனது காலத்தின் மிகவும் பிரபலமான பிரம்மாவான இரவீந்திரநாத் தாகூரை சமாஜத்தின் தலைவராக அழைத்து வரவும் சுகுமார் பிரச்சாரம் செய்தார்.

சுகுமார் திசம்பர் 13, 1919 அன்று காளி நாராயண் குப்தாவின் ( அதுல் பிரசாத் செனின் தாய்வழி தந்தை) பேத்தி சுப்ரபா தாஸை மணந்தார். இதனால் சுகுமாருக்கும் அதுல் பிரசாத்துக்கும் இடையே ஒரு குடும்ப உறவு உருவானது.

இலக்கியத்தில் பங்களிப்பு

நயாரா படிமம்:Hajabarala3.gif| ஹாஜாபராலாவில் உடோ படிமம்:Hajabarala7.gif| ஹாஜாபராலாவில் அரசசபை படிமம்:Hajabarala2.gif| ஹஜாபாராலாவில் சிறீ ககேஸ்வர் குச்சுச்சே ' படிமம்:Hajabarala1.gif| ஹஜாபராலாவில் உள்ள கதவு

இறப்பு

லெஷ்மேனியாசிஸ் என்ற நோய் தொற்று காரணமாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை ஏதுமில்லாததால் சுகுமார் ராய் கொல்கத்தாவில் உள்ள தனது கார்ப்பர் இல்லத்தில் 1923 செப்டம்பர் 10 அன்று அன்று தனது 35ஆவது வயதில் இறந்தார். இவரது மகன் சத்யஜித் ராய் பின்னர் தனது மரணத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 1987 இல் சுகுமார் ராய் குறித்த ஆவணப்படத்தை படமாக்கினார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

சுகுமார் ராய் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sukumar Ray
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சுகுமார் ராய் ஆரம்ப ஆண்டுகளில்சுகுமார் ராய் கல்வி மற்றும் தொழில்சுகுமார் ராய் இலக்கியத்தில் பங்களிப்புசுகுமார் ராய் இறப்புசுகுமார் ராய் குறிப்புகள்சுகுமார் ராய் வெளி இணைப்புகள்சுகுமார் ராய்ஆலிசின் அற்புத உலகம்இந்தியத் துணைக்கண்டம்சத்யஜித் ராய்படிமம்:Bn-সুকুমার রায়.oga

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க காலம்கண்டேன் காதலைஆசாரக்கோவைபங்குனி உத்தரம்சிறுகதைசட்டவியல்உத்தராகண்டம்மனித மூளைஅர்ஜுன்முத்தரையர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பக்கவாதம்நன்னூல்கா. ந. அண்ணாதுரைகல்விஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆதம் (இசுலாம்)செஞ்சிக் கோட்டைவேதம்யோகக் கலைபறையர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பெரியபுராணம்நம்ம வீட்டு பிள்ளைபிரம்மம்தனுசு (சோதிடம்)பெயர்ச்சொல்தெருக்கூத்துஎகிப்துநுரையீரல் அழற்சிஅரிப்புத் தோலழற்சிவேலுப்பிள்ளை பிரபாகரன்ஆங்கிலம்பொருளாதாரம்கழுகுமலைநிணநீர்க்கணுதமிழ்ப் புத்தாண்டுபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்இலக்கியம்முக்கூடற் பள்ளுவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கழுகுமலை வெட்டுவான் கோயில்ஹஜ்ஸ்ரீகோயம்புத்தூர்வாட்சப்புதுச்சேரிஅப்துல் ரகுமான்மதுரைமுதலுதவிவிளையாட்டுசுயமரியாதை இயக்கம்முல்லை (திணை)கிறிஸ்தவம்கர்மாவைரமுத்துரமலான் நோன்புஏ. வி. எம். ராஜன்இரவுக்கு ஆயிரம் கண்கள்பட்டினத்தார் (புலவர்)சங்கர் குருபிள்ளைத்தமிழ்எடுத்துக்காட்டு உவமையணிஐக்கிய நாடுகள் அவைபால் (இலக்கணம்)குதுப் நினைவுச்சின்னங்கள்இந்திய ரிசர்வ் வங்கிபாண்டி கோயில்டொயோட்டாதமிழ்விடு தூதுசின்னம்மைபொன்னியின் செல்வன்தமிழர் கலைகள்திருமணம்பாலை (திணை)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்🡆 More