சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735

சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 (China Eastern Airlines Flight 5735) சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு இயக்கப்படும் திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானமாகும்.

2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 அன்று இவ்விமானம் குவாங்சியில் உள்ள வுயோ மாகாணத்தின் டெங் மாவட்டத்தில் செங்குத்தாக கீழே இறங்கி தரையில் மோதி விபத்திற்கு உள்ளானது. விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்ததாக சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

சீன கிழக்கத்திய வான்வழி விமானம் 5735
China Eastern Airlines Flight 5735
மயில் கருப்பொருள் கொண்ட வெள்ளை விமானம்
பி-1791, விபத்தில் சிக்கிய விமானம், ஆங்காங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகில் 2015 புகைப்படம்.
Incident சுருக்கம்
நாள்மார்ச்சு 21, 2022 (2022-03-21)
சுருக்கம்நிலத்தில் மோதி விபத்து. விசாரணையில் உள்ளது
இடம்செண்ட்டாங்பியோ, மொலாங்கு கிராமம், தெங் மாகாணம், உசௌ, குவாங்சி, சீனா
23°17′10″N 111°07′30″E / 23.286°N 111.125°E / 23.286; 111.125
பயணிகள்123
ஊழியர்9
உயிரிழப்புகள்132
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங்கு 737
இயக்கம்சீன கிழக்கத்திய யுனான் வான்வழி நிறுவனம்
வானூர்தி பதிவுB-1791
பறப்பு புறப்பாடுகுன்மிங் சாங்சுய் பன்னாட்டு விமான நிலையம்
சேருமிடம்குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735
5735 விமானத்தின் பாதை

விமானம்

குன்மிங் சாங்சுய் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து குவாங்சூ பையுன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி 13:15 மணிக்கு விமானம் புறப்பட்டது. 15:05 மணிக்கு விமானம் தரையிறங்க வேண்டும்.

விபத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, உயோ வானிலை சேவைகள் நிறுவனம் வலுவான வெப்பச்சலன காற்றுக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 
விபத்தான வானூர்தியின் பாதை

பொதுவாக வானூர்தி விரைவு எடுத்து பின் திடீரென்று குப்புற பாய்வது நடக்காது என்று கூறப்படுகிறது. வானூர்தியின் பின்புறத்தில் உள்ள வானூர்தியை நிலைநிறுத்தும் கிடைமட்ட வால் சரியாக வேலை செய்யாததாலோ நாச வேலை காரணமாகவோ விபத்து நடந்திருக்கலாம் என இருக்கலாம் ஊகிக்கப்படுகிறது. அனைத்து எந்திரங்களும் வேலை செய்யாவிட்டாலும் வானூர்தி காற்றில் வழுவி பறப்பது போல வடிவமைக்கப்படுகிறதே அன்றி குப்புற பாய்வது போன்று வடிவமைக்கப்படுவதில்லை என்று முனைவர் பிரௌன் கூறினார். விபத்துக்குள்ளான போயிங் 737NG அதாவது 737 அடுத்த தலைமுறை வானூர்தி மற்ற வானூர்திகளை விட பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. 1997இல் இருந்து 7,000 வானூர்திகள் விற்பனையானதில் 11 வானூர்திகளே விபத்துத்தை சந்தித்துள்ளன. விபத்துக்குள்ளான வானூர்தி தன் முதல் பறப்பை யூன் 2015இல் சீனாவில் மேற்கொண்டது. வானூர்தி 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது பின் 2.20 மணிக்கு பின் திடீரென பெருமளவு உயரத்தை இழந்துள்ளது, தொடர்பு துண்டிக்கப்படும் முன் உடனடியாக இழந்த உயரத்தில் 1,000 அடியை மீட்டு மேலெலுந்து பின் மீண்டும் குப்புற பாய்ந்துள்ளது. இரண்டு நிமிடத்திற்குள் 25,000 அடிக்கும் அதிகமான உயரத்தை இழந்துள்ளது.

சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 
விபத்தான சீன வானூர்தி பறப்பு உயரம்

கருப்புப் பெட்டி

ஆறு நாள் தேடலுக்குப் பின் ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஆராய அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க வல்லுநர்கள் குழு வாசிங்டன் டி.சி அருகேயுள்ள சோதனைச்சாலையில் இதை ஆராய உள்ளார்கள். விபத்து நடந்த மலைப்பகுதியில் வானூர்தி மோதியதில் 20 அடி ஆழ பள்ளம் உருவாகியுள்ளது.

இந்த விபத்து வானோடிகள் அறையிலிருந்த சிலரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

சீனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கங்கைகொண்ட சோழபுரம்கிறிஸ்தவம்ராஜா ராணி (1956 திரைப்படம்)பெண்சயாம் மரண இரயில்பாதைகடல்நற்கருணைமலையாளம்எயிட்சுகட்டபொம்மன்புணர்ச்சி (இலக்கணம்)வெள்ளியங்கிரி மலைசெப்புபுதுமைப்பித்தன்பனைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திருச்சிராப்பள்ளிஆளி (செடி)அதிமதுரம்குகேஷ்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தமிழ் எண்கள்மகேந்திரசிங் தோனிவிலங்குசுற்றுலாஆப்பிள்வேலுப்பிள்ளை பிரபாகரன்வெட்சித் திணைஅவதாரம்உலகம் சுற்றும் வாலிபன்திருமுருகாற்றுப்படைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்பெரியபுராணம்காளமேகம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நேர்பாலீர்ப்பு பெண்கபிலர்நுரையீரல் அழற்சிசீரகம்டி. என். ஏ.ஆசிரியர்அரச மரம்இயேசு காவியம்தமிழ்த் தேசியம்வெ. இறையன்புஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சிற்பி பாலசுப்ரமணியம்விளம்பரம்விழுமியம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மூவேந்தர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பட்டினப் பாலைமுக்குலத்தோர்காந்தள்அளபெடைஇணையம்பெண்களுக்கு எதிரான வன்முறைஅழகர் கோவில்தமிழர் தொழில்நுட்பம்வெப்பம் குளிர் மழைசங்க இலக்கியம்ஐங்குறுநூறுதமிழர் உலோகத் தொழில்நுட்பம்நாயன்மார்பொது ஊழிநயினார் நாகேந்திரன்திருவண்ணாமலைநிணநீர்க் குழியம்சின்னம்மைபாலின விகிதம்காம சூத்திரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)புதுக்கவிதைதமிழர் பண்பாடுவேளாண்மைஇராவணன்தினமலர்தொடை (யாப்பிலக்கணம்)🡆 More