சினான்

சினான் என்று பரவலாக அறியப்படும் கோக்கா மிமார் சினான் ஆகா, ஓட்டோமான் காலத்துக் கட்டிடக் கலைஞரும், குடிசார் பொறியாளரும் ஆவார்.

இவர் முதலாம் சுலைமான், இரண்டாம் சலீம், மூன்றாம் முராட் ஆகிய சுல்தான்களின் கீழ் ஓட்டாமான் பேரரசின் தலைமைக் கட்டிடக் கலைஞராகவும் குடிசார் பொறியாளராகவும் பணிபுரிந்தார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்காலம் ஓட்டோமான் பேரரசில் கட்டப்பட்ட ஒவ்வொரு முக்கியமான கட்டிடத்தினதும் கட்டுமானத்துக்கு அல்லது அதனை மேற்பார்வை செய்வதற்கு இவர் பொறுப்பாக இருந்தார். நடுத்தர அளவுள்ள கட்டிடங்களைத் தவிர்த்து முந்நூறுக்கு மேற்பட்ட முக்கிய கட்டிடங்களின் கட்டுமானங்களுக்கு இவர் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சினான்
முதலாம் சுலைமானின் சமாதிக் கட்டிடத்தில் இடப்புறம் காணப்படுபவர் சினானாக இருக்கலாம். 1566

இவரது கட்டிடங்களுள் மிகப் புகழ் பெற்ற கட்டிடமாக விளங்குவது இசுத்தான்புல்லில் உள்ள சுலைமான் மசூதியே எனினும், இவரது மிகச் சிறந்த கட்டிடமாகக் கருதப்படுவது எடிர்னே என்னும் இடத்தில் அமைந்துள்ள செலிமியே மசூதி ஆகும். இவருக்குக் கீழ் மிக விரிவான ஒரு அரச திணைக்களம் இயங்கியது. இவரிடம் பணிபுரிந்த இவரது உதவியாளர்களில் பலர் பின்னர் புகழ் பெற்று விளங்கினர். இவர்களுள், சுல்தான் அகமது மசூதியின் கட்டிடக்கலைஞரான செடெஃபார் மெகுமெத் ஆகா போன்றவர்களும் அடங்குவர். ஓட்டோமான் கட்டிடக்கலையின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த கட்டிடக்கலைஞராகக் கருதப்படும் சினான், மேற்குலகில் இவருக்குச் சமகாலத்தவரான மைக்கலாஞ்சலோவுடன் ஒப்பிட்டுக் கூறப்படுபவர்.

Tags:

ஓட்டோமான் பேரரசுகட்டிடக் கலைஞர்குடிசார் பொறியாளர்முதலாம் சுலைமான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அபூபக்கர்கர்ணன் (மகாபாரதம்)நவரத்தினங்கள்எனை நோக்கி பாயும் தோட்டாஅழகிய தமிழ்மகன்லோகேஷ் கனகராஜ்ராதாரவிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராபி. காளியம்மாள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசிறுநீரகம்கருக்காலம்திருப்பாவைஆழ்வார்கள்கலித்தொகைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்காதல் கொண்டேன்உன்னாலே உன்னாலேஇந்திய மக்களவைத் தொகுதிகள்பந்தலூர்தமிழர் நெசவுக்கலைஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபழமொழி நானூறுபுறநானூறுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்பாஸ்காஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்விஜயநகரப் பேரரசுதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)கரும்புற்றுநோய்மகேந்திரசிங் தோனிதிருக்குறள்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசீறாப் புராணம்இரவு விடுதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்மாலைத்தீவுகள்நான்மணிக்கடிகைசோழர்புகாரி (நூல்)கட்டபொம்மன்விந்துமெய்யெழுத்துவெள்ளியங்கிரி மலைஆண் தமிழ்ப் பெயர்கள்பறையர்ஸ்ரீலீலாகுற்றியலுகரம்பேரூராட்சிபிரேமலதா விஜயகாந்த்இந்தோனேசியா2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஊராட்சி ஒன்றியம்சேரர்அணி இலக்கணம்முக்கூடற் பள்ளுநாடாளுமன்றம்காரைக்கால் அம்மையார்தமிழ் எண்கள்திருப்போரூர் கந்தசாமி கோயில்சுலைமான் நபிவட சென்னை மக்களவைத் தொகுதிமுதுமொழிக்காஞ்சி (நூல்)பர்வத மலைதாய்ப்பாலூட்டல்ஆத்திரேலியாவிளையாட்டுஹோலிடைட்டன் (துணைக்கோள்)இந்திய வரலாறுதென்காசி மக்களவைத் தொகுதிலியோதமிழ் எண் கணித சோதிடம்ஸ்ருதி ராஜ்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்🡆 More