வள்ளுவர் கோட்டம்: திருக்குறள் நினைவகம்

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம் ஆகும்.

இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம்: சிற்பத் தேர், அரங்கம், வேயாமாடம்
வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு
பொதுவான தகவல்கள்
வகைநினைவாலயம்
நகரம்சென்னை
நாடுஇந்தியா
ஆள்கூற்று13°3′15.88″N 80°14′30.3″E / 13.0544111°N 80.241750°E / 13.0544111; 80.241750
நிறைவுற்றது1976
உயரம்39 மீட்டர்கள் (128 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கணபதி (சிற்பி)

சிற்பத் தேர்

வள்ளுவர் கோட்டம்: சிற்பத் தேர், அரங்கம், வேயாமாடம் 
தேரின் சக்கரங்கள். அவற்றில் அளவை அருகில் நிற்கும் மனிதர்களின் உயரத்துடன் ஒப்பிட்டுக் காண்க.

இங்கு திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் சிற்பத் தேர் அமைப்பு கட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப்பட்டுள்ளது.

அரங்கம்

வள்ளுவர் கோட்டம்: சிற்பத் தேர், அரங்கம், வேயாமாடம் 
அரங்கத்தின் வாயில். வேயாமாடம் என அழைக்கப்படும் கூரைக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மேற்பகுதியை வாயிலின் இரு புறமும் காணலாம்

220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

வேயாமாடம்

வள்ளுவர் கோட்டம்: சிற்பத் தேர், அரங்கம், வேயாமாடம் 
வேயாமாடத்திலிருந்து கருவறை, கோபுரம், கலசம் ஆகியவற்றின் தோற்றம்

அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத்தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.

சுற்றாடல்

வள்ளுவர் கோட்டம்: சிற்பத் தேர், அரங்கம், வேயாமாடம் 
கேட்போர் கூடக் கூரையிலிருந்து பிரதான வாயில் நோக்கிய தோற்றம்

இக்கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வள்ளுவர் கோட்டம்: சிற்பத் தேர், அரங்கம், வேயாமாடம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Valluvar Kottam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வள்ளுவர் கோட்டம் சிற்பத் தேர்வள்ளுவர் கோட்டம் அரங்கம்வள்ளுவர் கோட்டம் வேயாமாடம்வள்ளுவர் கோட்டம் சுற்றாடல்வள்ளுவர் கோட்டம் இவற்றையும் பார்க்கவும்வள்ளுவர் கோட்டம் மேற்கோள்கள்வள்ளுவர் கோட்டம் வெளி இணைப்புகள்வள்ளுவர் கோட்டம்சென்னைதிருவள்ளுவர்மு. கருணாநிதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னி பெசண்ட்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்நாழிகைசாத்துகுடிகாடுபறையர்கருச்சிதைவுதனுசு (சோதிடம்)சங்ககால மலர்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்விலங்குவேளாண்மைநுரையீரல் அழற்சிபதினெண்மேற்கணக்குநெய்தல் (திணை)அம்பேத்கர்சஞ்சு சாம்சன்இராமாயணம்சிங்கம்காந்தலூர்இதயத்தை திருடாதேஇந்தியாசெயற்கை நுண்ணறிவுவாரன் பபெட்அரச மரம்தமிழர் அணிகலன்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)எல் நீனோ-தெற்கத்திய அலைவுகரிகால் சோழன்காற்றுகட்டுவிரியன்இந்திய மக்களவைத் தொகுதிகள்அறுபது ஆண்டுகள்விஜய் (நடிகர்)சிப்பாய்க் கிளர்ச்சி, 1857குற்றாலக் குறவஞ்சிதிருமந்திரம்திணைபதிற்றுப்பத்துசிலம்பரசன்பெரும்பாணாற்றுப்படைஅநீதிஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்மியா காலிஃபாமரங்களின் பட்டியல்நீரிழிவு நோய்கா. ந. அண்ணாதுரைதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தீனா (திரைப்படம்)சீமைக் கருவேலம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பழமொழி நானூறுதமிழ்நாடு சட்டப் பேரவைஎலான் மசுக்கம்பராமாயணம்வராகிஅஜித் குமார்பாசிப் பயறுகுருதிச் சிறுதட்டுக்கள்சவூதி அரேபியாயோசேப்பு (யாக்கோபுவின் மகன்)தினமலர்பெண் தமிழ்ப் பெயர்கள்கொன்றை வேந்தன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபிரேமம் (திரைப்படம்)மே நாள்கொடைக்கானல்இலக்கியம்மு. மேத்தாநஞ்சுக்கொடி தகர்வுஆறுமுக நாவலர்புணர்ச்சி (இலக்கணம்)🡆 More