மெர்லயன்

மெர்லயன் என்பது சிங்கத் தலையும் மீனின் உடலையும் கொண்ட ஒரு விலங்குச் சின்னம்.

மேனாட்டு மரபுச்சின்னவியலில் இவ்விலங்குச் சின்னம் காணப்படுவது உண்டு. சிங்கப்பூரின் நாட்டார் இலக்கியங்களிலோ, தொன்மங்களிலோ இவ்விலங்கு பற்றிய குறிப்புக்கள் கிடையா. எனினும் சிங்கப்பூரை விளம்பரம் செய்வதற்கான ஒரு அடையாளச் சின்னமாக இன்று இது பயன்பட்டு வருகிறது. முதன் முதலில் சிங்கப்பூர் சுற்றுலாச் சபையின் அடையாளமாகவே இது பயன்பட்டது.

மெர்லயன்
சிங்கப்பூர் மெர்லயன் பூங்காவில் உள்ள மெர்லயனின் சிலை

பெயர்

மெர்லயன் என்பது கடற்சிங்கம் என்னும் பொருள் தரும் ஆங்கிலச் சொல். மெர் (=கடல்), லயன் (= சிங்கம்) என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. சிங்கப்பூரில் பெயர்ப்பலகைகளில் எல்லா மொழிகளிலும் இச்சொல் பயன்படுவதால் சிங்கப்பூரின் அடையாளமான கடற்சிங்கத்தைக் குறிக்க மெர்லயன் என்ற சொல்லே இக்கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூர் மெர்லயன்

மெர்லயன் 
சிங்கப்பூரின் மெர்லயன்

இதன் உடற்பகுதியாகிய மீன், இக்குடியிருப்பு ஒரு மீனவக் குடியிருப்பாகத் தொடங்கியதைக் குறிக்கப் பயன்படுகிறது. அக்காலத்தில் இக்குடியிருப்புக்கு தெமாசேக் என்னும் யாவா மொழிப் பெயர் வழங்கியது. சிங்கத்தலை அதன் முதற் பெயரான சிங்கபுரம் என்பதைக் குறிக்கிறது.

சிங்கப்பூர் சுற்றுலாச் சபையின் பயன்பாட்டுக்காக, நினைவுக் குழுவின் உறுப்பினரும், வான் கிளீஃப் கடல்வாழிகள் காட்சியகத்தின் பொறுப்பாளருமான அலெக் பிரேசர்-புரூணர் என்பார் இச்சின்னத்தை வடிவமைத்தார். இது 26 மார்ச் 1964 இலிருந்து 1997 வரை பயன்பாட்டில் இருந்தது. 1997ல் சிங்கப்பூர் சுற்றுலாச் சபை அதன் சின்னத்தை மாற்றிவிட்ட போதும், சுற்றுலாச் சபையின் சட்டம் அச்சின்னத்தைப் பாதுகாத்து வருகிறது. இதனால், அச் சின்னத்தைப் பயன்படுத்துவதற்குச் சுற்றுலாச் சபையின் அனுமதி பெறப்படவேண்டும். சுற்றுலாச் சபையின் அனுமதி பெற்ற நினைவுப் பொருட்களில் மெர்லயன் இடம்பெறுவதைக் காணலாம்.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

மெர்லயன் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெர்லயன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

மெர்லயன் பெயர்மெர்லயன் சிங்கப்பூர் மெர்லயன் குறிப்புகள்மெர்லயன் இவற்றையும் பார்க்கவும்மெர்லயன்சிங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெண்குருதியணுகற்பித்தல் முறைமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)ஆதி திராவிடர்பிள்ளைத்தமிழ்செங்குந்தர்புறாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஸ்டீவன் ஹாக்கிங்தொலைக்காட்சிதேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாட்டின் அடையாளங்கள்யோகக் கலைபாத்திமாசிந்துவெளி நாகரிகம்சங்க இலக்கியம்ஆய்த எழுத்துசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பரிபாடல்சனகராஜ்இந்தியப் பிரதமர்மேற்கு வங்காளம்உலக நாடக அரங்க நாள்வேளாண்மைமைக்கல் ஜாக்சன்பழமொழி நானூறுகாயத்ரி மந்திரம்சப்ஜா விதைஇந்திய தண்டனைச் சட்டம்திருச்சிராப்பள்ளிஇந்திய அரசியல் கட்சிகள்சே குவேராதமிழ் எழுத்து முறைஅகத்திணைகொல்லி மலைஇந்து சமய அறநிலையத் துறைடெலிகிராம், மென்பொருள்இலக்கியம்சீமான் (அரசியல்வாதி)காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்புறநானூறுஔவையார் (சங்ககாலப் புலவர்)இராமலிங்க அடிகள்சிதம்பரம் நடராசர் கோயில்நாச்சியார் திருமொழிமாதவிடாய்இரைப்பை அழற்சிபிச்சைக்காரன் (திரைப்படம்)கணினிஎடப்பாடி க. பழனிசாமிவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தெலுங்கு மொழிகுறுந்தொகைசீனாஇலங்கையின் வரலாறுஉயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கட்டுவிரியன்சேவல் சண்டைஆனைக்கொய்யாஇந்திய தேசிய காங்கிரசுபராக் ஒபாமாதமிழ் நாடக வரலாறுதமிழ் இலக்கியம்இயற்கைதுணிவு (2023 திரைப்படம்)மு. க. ஸ்டாலின்தமிழ் மன்னர்களின் பட்டியல்குறிஞ்சி (திணை)பார்த்திபன் கனவு (புதினம்)இட்லர்விளையாட்டுஇந்திய ரிசர்வ் வங்கிகா. ந. அண்ணாதுரைமுதுமொழிக்காஞ்சி (நூல்)இந்திய தேசியக் கொடிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857🡆 More