முங்காரு மலே: 2006 கன்னடப் படம்

முங்காரு மலே (Mungaru Male கன்னடத்தில் பருவமழைக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பெய்யும் மழையைக் குறிப்பிடும் சொல்) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட காதல் திரைப்படமாகும்.

யோகராஜ் பட் இணைந்து எழுதி இயக்கிய இப்படத்தை ஈ. கிருஷ்ணப்பா தயாரித்ததார். இதில் கணேஷ், பூஜா காந்தி, அனந்த் நாக் ஆகியோர் நடித்தனர். இந்த படமானது கணேஷ், பூஜா காந்தி, இயக்குனர் யோகராஜ் பட், பாடலாசிரியர் ஜெயந்த் கைகினி, நடன இயக்குனர்கள் ஏ. ஹர்ஷா, இம்ரான் சர்தாரியா, இசையமைப்பாளர் மனோ மூர்த்தி ஆகியோரை கன்னடத் திரைப்படத் துறையில் புகழ்பெறவைத்து பலப்படுத்தியதாக நம்பப்படுகிறது. மேலும் பாலிவுட் பின்னணிப் பாடகர்கள் சோனு நிகம், குணால் காஞ்சாவாலா, உதித் நாராயண், சுனிதி சௌஹான், சிரேயா கோசல் ஆகியோர் கர்நாடகத்தில் பிரபலமாக காரணமாயிற்று.

முங்காரு மலே
இயக்கம்யோகராஜ் பட்
தயாரிப்புஈ. கிருஷ்ணா
கதை
  • யோகராஜ் பட்
  • பிரீதம் குப்பி
இசைமனோ மூர்த்தி
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். கிருஷ்ணா
படத்தொகுப்புதீபு எஸ். குமார்
கலையகம்ஈ. கே. எண்டர்பிரைசஸ்
விநியோகம்
  • ஜெயண்ணா
  • போகேந்திரா
வெளியீடுதிசம்பர் 29, 2006 (2006-12-29)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு70 இலட்சம்
மொத்த வருவாய்மதிப்பீடு.50–75 கோடி

இந்தியாவில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து ஓடிய இந்தியாவின் முதல் திரைப்படம் (அனைத்து மொழிகளிலும்), மேலும் மல்டிப்ளெக்ஸில் அதிக நேரம் ஓடிய திரைப்படம், கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது. பெங்களூரு மிரர் கூற்றின்படி, 50 கோடி வசூலை தாண்டிய முதல் தென்னிந்திய படம் .இது ஆகும். தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் 865 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் இதுவாகும். மேலும் இப்படம் ₹ 50– 75 கோடி ( ₹ 500-750 மில்லியன்). ₹67.5 கோடி (US$8.85 மில்லியன்) வசூலித்ததாக வருமான வரித்துறை குறிப்பிட்டு அந்த தொகைக்கு வரி கோரியது. இது பிவிஆர் மல்டிப்ளெக்ஸில் 460 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. மேலும் பிவிஆரில் ஓராண்டுக்கு மேல் ஓடிய படமாக இந்திய திரைப்படத் துறையில் தேசிய சாதனை படைத்தது.

இது 2008 இல் தெலுங்கில் வானா என்ற பெயரிலும், 2008 இல் வங்காளியில் பிரீமர் கஹினி என்ற பெயரிலும், ஒடியாவில் ரோமியோ - தி லவர் பாய் ஆகவும், 2017 இல் மராத்தியில் பிரேமய் நமஹா என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது . இப்படத்தின் தொடர்ச்சியாக 2016இல் முங்காரு மலே 2 வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

பெங்களூரில் ஒரு வணிக வளாகத்தில் நந்தினியை (பூஜா காந்தி) சந்திக்கிறான் பிரீதம் (கணேஷ்). அவளது அழகில் மயங்கிய அவன் ஒரு பள்ளத்தில் விழ இருக்கும்போது நந்தினி அனுக்கு கை கொடுத்து காப்பாற்றுகிறாள். அப்போது அவளது இதய வடிவிலான கைக்கடிகாரம் அவனிடம் வந்துவிடுகிறது.

தொடர்ந்த சில சந்திப்புகளில் அவள்மீது காதல் கொள்கிறான். ஆனால் அவளுக்கு கௌதம் (திக்னத்) என்பவனுடன் ஏற்கனவே நிச்சயம் நடந்துள்ளது. மேலும் நந்தினியை ஜானு என்பவனும் பின்தொடர்ந்து வருகிறான். இவற்றை எல்லாம் கடந்து பிரீதமின் காதல் வென்றதா இல்லையா என்பதே கதையின் முடிவு.

நடிப்பு

  • கணேஷ் பிரீதமாக
  • பூஜா காந்தி நந்தினியாக
  • அனந்த் நாக் நந்தினியின் தந்தை கர்னல் சுப்பையாவாக
  • சுதா பெலவாடி பிரீதமின் தாய் கமலாவாக
  • பத்மஜா ராவ் நந்தினியின் தாய் "பப்ளி" பபிதாவாக,
  • நீலசம் அஸ்வத் ஜாலியாக
  • திக்ந்த் நந்தினியின் வருங்கால கணவர் கௌதமாக
  • ஜெய் ஜெகதீஷ் பிரீதமின் தந்தையாக
  • சஞ்சிதா ஷெட்டி நந்தினியின் தோழியாக

தயாரிப்பு

வளர்ச்சி

முன்னதாக விளம்பரப் படங்களில் அறிமுகமான இயக்குநர் யோகராஜ் பட் , முங்காரு மலே கதைப் பணியில் பணிபுரியத் தொடங்கினார். அவர் இந்தக் கதையை புனீத் ராஜ்குமார் மற்றும் ரம்யாவிடம் கூற அவர்கள் அதை நிராகரித்தனர். நடிகர் கணேஷ் தயாரிப்பாளர் இ. கிருஷ்ணப்பாவுக்கு யோகராஜ் பட்டை அறிமுகப்படுத்தினார். அவர் படத்திற்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பீட்டளவில் பிரபலமில்லாத நடிகை பூஜா காந்தி நடித்தார்.

படப்பிடிப்பு

படத்தில் தோராயமாக 80% காட்சிகள் மழையில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பானது சக்லேஷ்பூர், மடிகேரி, ஜோக் அருவி சாகரா, கதக் ஆகிய இடங்களில் நடந்தது. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா, படத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார்.

இசை

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஒந்து ஒந்து சாரி"  குணால் காஞ்சாவாலா, பிரியா ஹிமேஷ் 4:32
2. "முங்காரு மலே"  சோனு நிகம் 4:49
3. "குனிது குனிது பாரே"  உதித் நாராயண், சுனிதி சௌஹான், ஸ்டீபன் 4:30
4. "அனிசுத்திதே"  சோனு நிகம் 4:36
5. "சுவ்வி சுவ்வாலி"  ஹேமந்த் குமார் 4:38
6. "இவனு கெலியானல்லா"  சிரேயா கோசல் 3:47
7. "ஆரலுத்திரு ஜீவாத கெளேயா"  சிரேயா கோசல் 4:38
மொத்த நீளம்:
31:30

வணிக வெற்றி

இப்படமானது ₹70 லட்சம் (US$91,800) செலவில் தயாரிக்கப்பட்டது. படமானது 300 நாட்கள் ₹ 50 கோடி (500 மில்லியன்) வசூலித்தது. அதன்பிறகு படம் 865 நாட்கள் திரையரங்கில் ஒடியதன் முடிவில் ₹ 50-75 கோடிக்கு (₹ 500-750 மில்லியன்) வசூல் ஈட்டியது. இந்த படம் கர்நாடகத்தில் 150 பிரதிகளுடன் வெளியிடப்பட்டது. பெங்களூர் பிவிஆர் திரையரங்கில் ஓடி மல்டிப்ளெக்சில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. கன்னடத் திரையுலக வரலாற்றில் 50 கோடி வசூலைத் தொட்ட முதல் கன்னடப் படம் இதுவாகும்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

முங்காரு மலே கதைச்சுருக்கம்முங்காரு மலே நடிப்புமுங்காரு மலே தயாரிப்புமுங்காரு மலே படப்பிடிப்புமுங்காரு மலே இசைமுங்காரு மலே வணிக வெற்றிமுங்காரு மலே குறிப்புகள்முங்காரு மலே மேற்கோள்கள்முங்காரு மலேஅனந்த் நாக்உதித் நாராயண்கணேஷ் (நடிகர்)கன்னடத் திரைப்படத்துறைகர்நாடகம்காதல் திரைப்படம்குணால் காஞ்சாவாலாசிரேயா கோசல்சுனிதி சௌஹான்சோனு நிகம்ஜெயந்த் கைகினிபின்னணிப் பாடகர்பூஜா காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா (தமிழ்த் திரைப்படம்)பணம்வெ. இறையன்புகாடுவெட்டி குருநெல்நரேந்திர மோதிசமூகம்கும்பம் (இராசி)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ரேஷ்மா பசுபுலேட்டிசிலேடைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ்நாடு அமைச்சரவைடி. எம். சௌந்தரராஜன்முதற் பக்கம்பெரியம்மைகருப்பை வாய்தமிழ் நாடக வரலாறுஇன்னா நாற்பதுஅகத்திணைகுடமுழுக்குநாடார்வேதம்விருத்தாச்சலம்பெரியபுராணம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குசிலம்பரசன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நந்தி திருமண விழாதிருவாதிரை (நட்சத்திரம்)விஜய் வர்மாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்தியாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஏக்கர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)அண்டர் தி டோம்போகர்சீறாப் புராணம்பார்க்கவகுலம்எஸ். ஜானகிபெரியாழ்வார்தொகைச்சொல்வாலி (கவிஞர்)குதிரைபூலித்தேவன்ஆதி திராவிடர்நாம் தமிழர் கட்சிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சிறுகதைசாதிவல்லம்பர்கோயம்புத்தூர்மருதமலை முருகன் கோயில்மகேந்திரசிங் தோனிஆண்குறிபகவத் கீதைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இரவுக்கு ஆயிரம் கண்கள்ஜெயம் ரவிஅறம்உடனுறை துணைமலைபடுகடாம்கூகுள்வாணிதாசன்பெண்வேலைகொள்வோர்உலக நாடக அரங்க நாள்இந்திய ரிசர்வ் வங்கிதிருப்பூர் குமரன்கார்ல் மார்க்சுஇந்திய தேசியக் கொடிமுல்லைப்பாட்டுசிறுநீரகம்ஆறுமுக நாவலர்ரோசாப்பூ ரவிக்கைக்காரிஎடுத்துக்காட்டு உவமையணி🡆 More