பொ. தி. இராசன்

பி.

டி. ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் (18921974) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் போட்டி நீதிக்கட்சியாக ஒரு தனிக் கட்சி செயல்பட்டு வந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் கம்பம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 சட்டமன்றத் தேர்தலில் உத்தமபாளையம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பின்னாளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார்.

சர்
பி. டி. ராஜன்
பொ. தி. இராசன்
பி. டி. ராஜன் (1934)
கம்பம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19521957
ஆளுநர்ஸ்ரீ பிரகாசா
ஏ. ஜே. ஜான் அன்னபரம்பில்
முதல்வர்சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி,
காமராஜர்
சென்னை மாகாண முதல்வர்
பதவியில்
ஏப்ரல் 4, 1936 – ஆகஸ்டு 24, 1936
ஆளுநர்எர்ஸ்கைன் பிரபு
முன்னையவர்பொபிலி அரசர்
பின்னவர்பொபிலி அரசர்
சென்னை மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர்
பதவியில்
1930–1937
பிரதமர்பொபிலி அரசர்
ஆளுநர்எர்ஸ்கைன் பிரபு
பின்னவர்பி. கலீஃபுல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1892
உத்தமபாளையம் , தமிழ்நாடு , இந்தியா இந்தியா
இறப்பு1974
உத்தமபாளையம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிநீதிக்கட்சி
முன்னாள் கல்லூரிலேய்ஸ் பள்ளி, கேம்பிரிச்,
ஜீசஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு
தொழில்வழக்கறிஞர்

பி.டி. இராசனின் நினைவைப் போற்றும் வகையில் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னை கலைஞர் கருணாநிதி நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

18921974ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்உத்தமபாளையம்கம்பம் (சட்டமன்றத் தொகுதி)கேம்பிரிச் பல்கலைக்கழகம்சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920சென்னை மாகாணம்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்தமிழ்நாடு சட்டமன்றம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திராவிடர் கழகம்நீதிக்கட்சிபி. டி. ஆர். பழனிவேல்ராசன்பெரியார்பொபிலி அரசர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூக்கள் பட்டியல்செரால்டு கோட்சீஇனியவை நாற்பதுஅகநானூறுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021புதன் (கோள்)வே. தங்கபாண்டியன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மூன்றாம் பானிபட் போர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மொழிபகத் சிங்பண்ணாரி மாரியம்மன் கோயில்முத்துராஜாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழர் விளையாட்டுகள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இயோசிநாடிபக்தி இலக்கியம்பரிதிமாற் கலைஞர்திருவண்ணாமலைதண்ணீர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிசங்க காலம்அன்புநான்மணிக்கடிகைநான் அவனில்லை (2007 திரைப்படம்)உத்தரகோசமங்கைகடல்முகம்மது நபியின் இறுதிப் பேருரைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருவாசகம்கரிகால் சோழன்பதினெண்மேற்கணக்குதேவநேயப் பாவாணர்இணையம்அகோரிகள்இந்தியத் தேர்தல் ஆணையம்ந. பிச்சமூர்த்திஆற்றுப்படைஅயோத்தி தாசர்சுதேசி இயக்கம்ஆண்டு வட்டம் அட்டவணைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்குடும்பம்மக்களவை (இந்தியா)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019மரணதண்டனைஅளபெடைதிருவோணம் (பஞ்சாங்கம்)ஆகு பெயர்தமிழச்சி தங்கப்பாண்டியன்பங்குனி உத்தரம்சொல்லாட்சிக் கலைமனித மூளைஹிஜ்ரத்வீரப்பன்அறிவியல் தமிழ்வினோஜ் பி. செல்வம்இந்தியக் குடியரசுத் தலைவர்சிங்கப்பூர்முத்தரையர்மார்ச்சு 28தேனி மக்களவைத் தொகுதிதிருவிளையாடல் புராணம்இந்தியன் பிரீமியர் லீக்சட் யிபிடிஆ. ராசாஅகத்தியர்ஐம்பூதங்கள்தனுசு (சோதிடம்)பாண்டியர்வளர்சிதை மாற்றம்செயற்கை நுண்ணறிவுஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஆப்பிள்சிந்துவெளி நாகரிகம்🡆 More