பென்சா மாகாணம்

பென்சா மாகாணம் (Penza Oblast, உருசியம்: Пе́нзенская о́бласть, பென்சென்ஸ்கயா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும்.

மக்கள்தொகையாக 1,386,186 (2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பு) பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பென்சா நகரம் ஆகும்.

பென்சா மாகாணம்
Penza Oblast
மாகாணம்
Пензенская область
பென்சா மாகாணம் Penza Oblast-இன் கொடி
கொடி
பென்சா மாகாணம் Penza Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்:
பென்சா மாகாணம்
நாடுபென்சா மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா
பொருளாதாரப் பகுதிவோல்கா
நிர்வாக மையம்பென்சா
அரசு
 • நிர்வாகம்பென்சா சட்டமன்றம்
 • ஆளுநர்இவான் பெலோசெர்த்செவ்
பரப்பளவு
 • மொத்தம்43,200 km2 (16,700 sq mi)
பரப்பளவு தரவரிசை59வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்13,86,186
 • Estimate (2018)13,31,655 (−3.9%)
 • தரவரிசை32வது
 • அடர்த்தி32/km2 (83/sq mi)
 • நகர்ப்புறம்67.1%
 • நாட்டுப்புறம்32.9%
நேர வலயம் (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-PNZ
அனுமதி இலக்கத்தகடு58
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://pnzreg.ru

புவியியல்

முதன்மை ஆறுகள்

பென்சா மாகாணத்தில் சுமார் 3000 ஆறுகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த நீளம் 15,458 கி.மீ ஆகும். இதில் கீழ்கண்டவை பெரிய ஆறுகள்:

  • சுரா ஆறு
  • மோக்சா ஆறு
  • கபியோர் அல்லது ஹஃப்யோர் ஆறு
  • பென்சா ஆறு. இந்த ஆற்றின் பெயராலேயே பென்சா நகரம் அமைந்துள்ளது.

விலங்குகள்

இந்த பிராந்தியத்தில் முதுகெலும்புள்ள விலங்கினங்கள் 316 வகையான இனங்கள் உள்ளன. இதில்

  • நீர்நில வாழ்வன சுமார் பத்து இனங்கள்
  • பறவைகள் 200 இனங்கள்
  • ஊர்வன சுமார் எட்டு இனங்கள்
  • பாலூட்டிகள் 68 இனங்கள்
  • நீர்நிலைப் பகுதிகளில் சுமார் 50 மீன் இனங்கள் உள்ளன.

பொருளாதாரம்

பென்சா மாகாணம் வோல்கா பொருளாதாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உருசியாவின் முன்னணி தயாரிப்புகளான கோதுமை, கம்பு, ஓட்ஸ், தினை ஆகிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கடுகு, மற்றும் இறைச்சி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

மக்கள் வகைப்பாடு

மாகாண மக்கள் தொகை: 1,386,186 (2010 கணக்கெடுப்பு); 1,452,941 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 1,504,309 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

முதன்மைப் புள்ளிவிவரங்கள்

2012ம் ஆண்டு

  • பிறப்பு: 14,777 (1000 பேருக்கு 10.8)
  • இறப்பு: 20,419 (1000 பேருக்கு 14.9)

2008ம் ஆண்டு

  • பிறப்பு: 7,962 (2008 ஜனவரி-சூலை)
  • இறப்பு: 13,608 (2008 ஜனவரி-சூலை)

மொத்தக் கருத்தரிப்பு விகிதம்

  • 2009 - 1.38
  • 2010 - 1.37
  • 2011 - 1.36
  • 2012 - 1.48
  • 2013 - 1.49
  • 2014 - 1.54 (கணிப்பு)

இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010)

  • ரஷ்யர்கள் - 86,8%
  • தடார்கள் - 6.4%
  • மால்டோவியர்கள் - 4.1%
  • உக்ரைனியர்கள் - 0.7%
  • சுவாஷ் மக்கள் - 0.4%
  • ஆர்மேனியர்கள் - 0.3%
  • மற்றவர்கள் - 1.3%
  • 43,283 பேர் கணக்கெடுப்பில் தங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.

சமயம்

2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி, இந்த மாகாண மக்கள்தொகையில் 42.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 7% முஸ்லீம்கள், 15% சமயநாட்டமற்ற ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள், 9% நாத்திகர்கள், 3.1% மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

பென்சா மாகாணம் புவியியல்பென்சா மாகாணம் விலங்குகள்பென்சா மாகாணம் பொருளாதாரம்பென்சா மாகாணம் மக்கள் வகைப்பாடுபென்சா மாகாணம் சமயம்பென்சா மாகாணம் மேற்கோள்கள்பென்சா மாகாணம்உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்உருசியாவின் மாகாணங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஏ. ஆர். ரகுமான்தி டோர்ஸ்இந்தியாவின் செம்மொழிகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅன்புமணி ராமதாஸ்அபுல் கலாம் ஆசாத்அறுசுவைஆரணி மக்களவைத் தொகுதிமொழிபெயர்ப்புமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கேபிபாராகம்பர்கரும்புற்றுநோய்முத்தொள்ளாயிரம்சடுகுடுசு. வெங்கடேசன்வரைகதைகாச நோய்ஹஜ்மலக்குகள்சுடலை மாடன்மூதுரைதமிழர் பருவ காலங்கள்இந்தியப் பொதுத் தேர்தல்கள்கந்த புராணம்சப்ஜா விதைமுடக்கு வாதம்அஜித் குமார்தமிழர் அளவை முறைகள்ஆழ்வார்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்முன்னின்பம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிதமிழர் பண்பாடுசுற்றுலாமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்இறைமைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பரிதிமாற் கலைஞர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பேரிடர் மேலாண்மைநாடார்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தங்கம் தென்னரசுஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்சிறுபாணாற்றுப்படைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நானும் ரௌடி தான் (திரைப்படம்)கருப்பைமுத்துலட்சுமி ரெட்டிஇரச்சின் இரவீந்திராஉத்தரகோசமங்கைதேர்தல் பத்திரம் (இந்தியா)காரைக்கால் அம்மையார்முதலாம் உலகப் போர்திருக்குர்ஆன்பெரிய வியாழன்மொரோக்கோஇராமலிங்க அடிகள்பசுபதி பாண்டியன்மக்களவை (இந்தியா)சூரரைப் போற்று (திரைப்படம்)கொங்கு வேளாளர்கிராம நத்தம் (நிலம்)திராவிட முன்னேற்றக் கழகம்கொல்கொதாஅம்பேத்கர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நயன்தாராஇளையராஜாகயிறு இழுத்தல்இலக்கியம்திருமந்திரம்உயிர்மெய் எழுத்துகள்முத்தரையர்🡆 More