தொடக்க ஏற்றி

தொடக்கச் செயல் (booting) என்பது கணினிகளில் ஒரு பயனர் தமது கணினிக்கு மின்னாற்றல் வழங்கித் தொடங்கும்போது அதன் வழமையானப் பணிகளை நிகழ்த்த கணினியைத் தயார்ப்படுத்தும் ஒரு நெறிமுறை ஆகும்.

தற்கால கணினிகளில் இது பொதுவாக இயக்கு தளத்தை ஏற்றித் தொடங்குவதாகும். மின்னாற்றல் வழங்கப்பட்டவுடன் ஒரு கணினி ஆற்றும் தொடக்கப் பணித்தொகுப்பு ஏற்றத் தொடர்வினைகள் என அழைக்கப்படுகின்றன. தொடக்க ஏற்றி என்பது மின்னாற்றல் பெற்றபின் தற்சோதனைகளை முடித்த கணினியில் முதன்மை இயக்கு தளத்தை ஏற்றும் அல்லது நிகழ்நிலைச் சூழலை அமைக்கும் ஒரு நிரல்தொகுதி ஆகும்.

1950 களில் பெருமுகக் கணிப்பொறிகள் காலத்திலிருந்தே தொடக்கநிலை நிரல்களையும் இயக்கு தளங்களையும் சேமிப்பு நாடாக்களிலிருந்து கணினி நினைவகத்திற்கு ஏற்றுவது வழமையாக இருந்தது. இந்த நெறிமுறை பெருமுகக் கணிப்பொறிகள், மினி கணினிகள், மைக்ரோ கணினிகள், தனிநபர் கணினிகள், பயனாளர் இலத்திரனியல் கருவிகளில் நடைமுறையில் உள்ளது. சில எளிமையான பதிகணினி கருவிகளில் இந்த ஏற்றத் தொடர்வினைகள் தேவையிராது; மாற்றவியலா நினைவகங்களில் சேமிக்கப்பட்டுள்ள நிரலியக்கம் மூலம் மின்னாற்றல் பெற்றவுடனேயே இயங்கத் தொடங்கும். இத்தகைய மாற்றவியலா நினைவகத்தில் உள்ள நிரலியக்கத்தில் தொடங்கி ஒருகட்ட மற்றும் பலகட்ட ஏற்றத் தொடர்வினைகள் கொண்ட பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. தொடக்க ஏற்றத்தின் இத்தகைய ஏற்றத் தொடர்வினைகளின்போது இயக்குதளத்தின் அல்லது நிகழ்நிலை சூழல் தரவுகளின் இரட்டை இலக்கக் குறியீடுகள் அழியாச் சேமிப்பான இரண்டாம்கட்ட நினைவகங்களிலிருந்து (வன்தட்டு நினைவகம்) மறையக்கூடிய குறிப்பில்வழி அணுகல் நினைவகங்களுக்கு ஏற்றப்பட்டு கணினிச் செயல்படத் தொடங்குகிறது. ஐபிஎம் பெருமுகக் கணினிகளில் இந்த நெறிமுறை தொடக்க நிரல் ஏற்றம் (Initial Program Load) என்று அறியப்பட்டது.

மேலும் அறிய

Tags:

இயக்கு தளம்கணினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜயநகரப் பேரரசுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருநாவுக்கரசு நாயனார்நெய்தல் (திணை)தமிழ்நாடுவல்லினம் மிகும் இடங்கள்நுரையீரல் அழற்சிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கலைஞானபீட விருதுஅழகிய தமிழ்மகன்மாசாணியம்மன் கோயில்உத்தரகோசமங்கைமுன்னின்பம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)இனியவை நாற்பதுபுதினம் (இலக்கியம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சிலப்பதிகாரம்முடியரசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சிலம்பம்ந. மு. வேங்கடசாமி நாட்டார்தற்குறிப்பேற்ற அணிகாமராசர்சூரியக் குடும்பம்இன்று நேற்று நாளைசின்னத்தாயிமொழிமுதல் எழுத்துக்கள்சனீஸ்வரன்அன்னம்சூரரைப் போற்று (திரைப்படம்)நாகப்பட்டினம்கொங்கு வேளாளர்கடல்தமிழ் நீதி நூல்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தசாவதாரம் (இந்து சமயம்)தேவ கௌடாவிண்ணைத்தாண்டி வருவாயாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வினையெச்சம்நம்மாழ்வார் (ஆழ்வார்)திரு. வி. கலியாணசுந்தரனார்செப்பேடுரோசுமேரிசுக்கிரீவன்பிரெஞ்சுப் புரட்சிஉப்புச் சத்தியாகிரகம்புணர்ச்சி (இலக்கணம்)சைவ சித்தாந்த சாத்திரங்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பெயர்ச்சொல்திருக்குறள்திருவரங்கக் கலம்பகம்இமயமலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிலேடைஇந்திய தேசிய சின்னங்கள்முத்திரை (பரதநாட்டியம்)பௌத்தம்அகநானூறுநீதி இலக்கியம்குக்கு வித் கோமாளிபெண்திருவிளையாடல் புராணம்வேலைக்காரி (திரைப்படம்)காதல் கோட்டைஆறுமுக நாவலர்இந்திய நாடாளுமன்றம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மொழியியல்பூலித்தேவன்திருநெல்வேலிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பாரத ரத்னாமியா காலிஃபாமதுரை🡆 More