கையாடல்

கையாடல் (Embezzlement) என்பது பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அல்லது வேறு வகையான சொத்துக்களை, ஒருவரோ அல்லது பலரோ நேர்மையற்ற முறையில் தமதாக்கிக் கொள்வதைக் குறிக்கும்.

கையாடல் என்பது ஒருவகையான நிதிசார் ஊழல். சட்டத்தரிணி ஒருவர் தனது வாடிக்கையாளரின் நம்பிக்கைப் பொறுப்புக் கணக்கில் இருந்து நிதியை எடுத்துக்கொள்ளல், ஒரு நிதி ஆலோசகர் தனது வாடிக்கையாளரின் முதலீட்டில் இருந்து பணத்தைத் தனதாக்குதல், கணவனுக்கும் மனைவிக்கும் பொதுவான கூட்டு வங்கிக் கணக்கில் இருந்து கணவனோ மனைவியோ மற்றவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வது போன்றவை கையாடலுக்கு எடுத்துக்காட்டுகள்.

கையாடல் என்பது திட்டமிட்டு ஒழுங்கமைந்த முறையில் புரியப்படும் குற்றச்செயல் ஆகும். கையாடல் பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் செய்யப்படுவதால், கையாடல் செய்பவர் தன்னுடைய செயல்களை மறைப்பதில் கவனம் எடுத்துக்கொள்வார். பொதுவாக, கையாடல் செய்பவர், இச்செயல் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காகத் தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பணம் அல்லது சொத்தின் ஒரு சிறு பகுதியையே கையாடல் செய்வார். இது வெற்றியானால், கையாடல் கண்டுபிடிக்கப்படாமலே பல ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும். பாதிக்கப்படுபவருக்குப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்போதோ, அல்லது அது வேறு தேவைகளுக்கு எடுக்கப்படும்போதோ, நிறுவனங்களானால் பெரிய மாற்றங்கள் இடம்பெறும்போது எல்லாச் சொத்துக்களினதும் சுதந்திரமான கணக்காய்வு தேவைப்படும்போதோதான் பணமோ, வேறு சொத்தோ குறைவது கண்டுபிடிக்கப்படும்.

மேற்கோள்கள்

Tags:

ஊழல்கணவன்சொத்துநேர்மைபணம்மனைவிமுதலீடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்டொயோட்டாடி. எம். சௌந்தரராஜன்திருக்குறள்சித்தர்கள் பட்டியல்ரமலான்சுந்தரமூர்த்தி நாயனார்முருகன்பூப்புனித நீராட்டு விழாவெ. இறையன்புவிபுலாநந்தர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்வாட்சப்ஆதம் (இசுலாம்)இந்திரா காந்திபாரதிய ஜனதா கட்சிதமிழ்ப் புத்தாண்டுஈரோடு மாவட்டம்கோயம்புத்தூர்நாலடியார்என்டர் த டிராகன்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்எச்.ஐ.விசெயற்கை அறிவுத்திறன்குறிஞ்சி (திணை)தமிழ் மாதங்கள்ஐந்து எஸ்இந்திய தேசிய சின்னங்கள்அழகர் கோவில்கல்லீரல்சிந்துவெளி நாகரிகம்ஸ்ரீசெம்மொழிதமிழ்சிலம்பம்தமிழ் நாடக வரலாறுசைவத் திருமுறைகள்வேதநாயகம் பிள்ளைதாஜ் மகால்மண்ணீரல்அன்புநந்தி திருமண விழாதிரு. வி. கலியாணசுந்தரனார்முத்துராமலிங்கத் தேவர்சிவாஜி (பேரரசர்)தெருக்கூத்துஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நாயன்மார் பட்டியல்விருந்தோம்பல்நீரிழிவு நோய்தமிழ்நாட்டின் அடையாளங்கள்அர்ஜூன் தாஸ்மரகத நாணயம் (திரைப்படம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்மேற்கு வங்காளம்வளையாபதிபிச்சைக்காரன் (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஊராட்சி ஒன்றியம்மாமல்லபுரம்சிலம்பரசன்வரகுவே. செந்தில்பாலாஜிஈழை நோய்காற்று வெளியிடைரோசாப்பூ ரவிக்கைக்காரிஹபிள் விண்வெளித் தொலைநோக்கிவேல ராமமூர்த்திகுடும்பம்திருமந்திரம்இந்திய தேசியக் கொடிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நெகிழிஇந்திஅமெரிக்க ஐக்கிய நாடுகள்இளங்கோ கிருஷ்ணன்வேதம்🡆 More