இலட்சுமிகாந்த்-பியாரேலால்

இலட்சுமிகாந்த்-பியாரேலால் (Laxmikant–Pyarelal) இவர்கள் ஓர் பிரபலமான மற்றும் வெற்றிகரமான இந்திய இரட்டை இசையமைப்பாளர்கள் ஆவர்.

இதில் இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் (1937-1998) மற்றும் பியாரேலால் 'ராம்பிரசாத் சர்மா (பிறப்பு 1940) ஆகிய இருவரும், இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளராக கருதப்படுகின்றனர். மேலும், 1963 முதல் 1998 வரை சுமார் 750 இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராஜ் கபூர், தேவ் ஆனந்த், பி.ஆர்.சோப்ரா, சக்தி சமந்தா, மன்மோகன் தேசாய், யஷ் சோப்ரா போனி கபூர், ஜே. ஓம் பிரகாஷ், ராஜ் கோஸ்லா, எல்.வி.பிரசாத், சுபாஷ் கய், கே விஸ்வநாத், மனோஜ் குமார் உட்பட கிட்டத்தட்ட அனைத்து குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குநர்களுக்காகவும் பணியாற்றியுள்ளனர்.

இலட்சுமிகாந்த்-பியாரேலால்
இலட்சுமிகாந்த்-பியாரேலால்
இலட்சுமிகாந்த் (இடது) - பியாரேலால் (வலது)
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்L-P, Laxmi–Pyare
இசை வடிவங்கள்திரையிசை, திரைப்படப் பாடல்கள்
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குனர், இசைக்குழு, நடத்துனர்
இசைத்துறையில்1963 (1963)–1998

ஆரம்ப கால வாழ்க்கை

இலட்சுமிகாந்த்
இயற்பெயர்இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர்
பிறப்பு(1937-11-03)3 நவம்பர் 1937
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய மும்பை, மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு25 மே 1998(1998-05-25) (அகவை 60)
நானாவதி மருத்துவமனை, மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசைத்துறையில்1947–1998

இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் இந்தியாவின் தீப ஒளித் திருநாளான தீபாவளி அன்று1937 நவம்பர் 3 அன்று பிறந்தார். இந்த நாள் லட்சுமி பூஜை நாள் என்பதால் இவரது பெற்றோர் இவருக்கு இலட்சுமிமிகாந்த் என்று பெயரிட்டனர். மும்பையில் உள்ள வைல் பார்லே (கிழக்கு) சேரிகளில் கடுமையான வறுமைக்கு மத்தியில் அவர் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். இவரது தந்தை இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்தார். குடும்பத்தின் மோசமான நிதி நிலைமை காரணமாக இவரால் கல்வியை முடிக்க முடியவில்லை. ஒரு இசைக்கலைஞரான இவரது தந்தையின் நண்பர் இவருக்கும், இவரது மூத்த சகோதரருக்கும் இசையைக் கற்க அறிவுறுத்தினார். அதன்படி, இவர் மாண்டலின் வாசிக்க கற்றுக்கொண்டார். இவரது மூத்த சகோதரர் கைம்முரசு இணை (தபலா) வாசிக்க கற்றுக்கொண்டார். இவர் பிரபலமான மாண்டலின் கைலைஞர் உசைன் அலியின் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். பின்னர், 1940 களில், பால் முகுந்த் இந்தோர்க்கரிடமிருந்து மாண்டலினையும், உசன்லால் என்பவரிடம் வயலினையும் கற்றுக்கொண்டார். லட்சுமிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையை பக்த் புண்டலிக் (1949) ஆன்கேன் (1950) போன்ற படங்களில் குழந்தை நடிகராகத் தொடங்கினார். சில குஜராத்தி படங்களிலும் நடித்தார்.

பியாரேலால்

பியாரேலால்
இயற்பெயர்பியாரேலால் ராம்பிரசாத் சர்மா
பிறப்பு3 செப்டம்பர் 1940 (1940-09-03) (அகவை 83)
வாடியா மருத்துவமனை, பரேல், மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசைத்துறையில்1952– தற்போது வரை

பியாரேலால் ராம்பிரசாத் சர்மா (பிறப்பு: செப்டம்பர் 3, 1940) ஒரு புகழ்பெற்ற எக்காளக் கலைஞரான இவரது தந்தை பண்டிட் ராம்பிரசாத் சர்மா (பிரபலமாக பாபாஜி என்று அழைக்கப்படுபவர்) தனது மகனுக்கு இசையின் அடிப்படைகளை கற்பித்தார். இவர் தனது 8 வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். இவர் அந்தோனி கோன்சால்வ்சு என்ற கோன் இசைக்கலைஞரிடமிருந்தும் வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். அமர் அக்பர் அந்தோணி திரைப்படத்தின் " மை நேம் இஸ் அந்தோனி கோன்சால்வ்சு " பாடல் திரு. கோன்சால்வ்சுக்கு அஞ்சலி செலுத்துவதாக கருதப்படுகிறது (இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இசையமைத்திருந்தனர்). இவர், தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதிப்பதற்காக ரஞ்சித் ஸ்டுடியோஸ் போன்ற அரங்கங்களில் அடிக்கடி வயலின் வாசிப்பார். இவரது சகோதரர் கோரக் சர்மா இவருடன் சேர்ந்து பல்வேறு பாடல்களுக்கு கித்தார் வாசித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலட்சுமிகாந்த்-பியாரேலால் ஆரம்ப கால வாழ்க்கைஇலட்சுமிகாந்த்-பியாரேலால் மேற்கோள்கள்இலட்சுமிகாந்த்-பியாரேலால் வெளி இணைப்புகள்இலட்சுமிகாந்த்-பியாரேலால்இந்தியத் திரைப்படத்துறைஎல். வி. பிரசாத்கே. விஸ்வநாத்தேவ் ஆனந்த்மனோஜ் குமார்யஷ் சோப்ராராஜ் கபூர் (இந்தி நடிகர்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு காவல்துறைஇயோசிநாடிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்து சமயம்பெண் தமிழ்ப் பெயர்கள்பொருநராற்றுப்படைநிதியறிக்கைசென்னைவெண்ணிற ஆடை மூர்த்திபெ. சுந்தரம் பிள்ளைமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழ்நாடு அமைச்சரவைஅர்ஜூன் தாஸ்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சிந்துவெளி நாகரிகம்கடல்வேல ராமமூர்த்திதிருமுருகாற்றுப்படைஇந்து சமய அறநிலையத் துறைநற்றிணைமிருதன் (திரைப்படம்)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கும்பகருணன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதிருமந்திரம்கிட்டி ஓ'நீல்அபூபக்கர்இசுலாமிய நாட்காட்டிபராக் ஒபாமாதமிழ் மாதங்கள்ஏலாதிஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்கபடிஸஹீஹ் முஸ்லிம் (நூல்)இதயம்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்களவழி நாற்பதுசாதிஎடப்பாடி க. பழனிசாமிகற்பித்தல் முறைஇந்தியத் துணைக்கண்டம்நெல்லிபேரிடர் மேலாண்மைதனுஷ் (நடிகர்)நாம் தமிழர் கட்சிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இன்னா நாற்பதுகரிகால் சோழன்ஓரங்க நாடகம்கீழடி அகழாய்வு மையம்இந்திசீரடி சாயி பாபாகவலை வேண்டாம்மொழிபெயர்ப்புபகத் சிங்பாரதிய ஜனதா கட்சிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பாண்டியர்அக்கி அம்மைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்காதல் மன்னன் (திரைப்படம்)காடுவெட்டி குருஅரைவாழ்வுக் காலம்சத்ய ஞான சபைஐம்பூதங்கள்காலிஸ்தான் இயக்கம்இராவணன்பித்தப்பைகவுண்டமணிமனித உரிமைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்குடமுழுக்குஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவாரூர் தியாகராஜர் கோயில்🡆 More