ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம்

ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் (Australian rules football) என்பது அவுஸ்திரேலியாவில் உருவாகி விளையாடப்படும் ஒரு காற்பந்தாட்ட வகையாகும்.

ஒவ்வொன்றும் 18 வீரர்களைக் கொண்ட அணிகளுக்கிடையில் நீள்வட்ட மைதானத்தில் நடைபெறும் இவ்வாட்டத்தில் நீளுருண்டை வடிவப் பந்து பயன்படுகிறது.

ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம்
ஆஸ்திரேலிய காற்பந்தாட்டம்

மைதானத்தில் இரு புறங்களில் நான்கு கம்பங்கள் வீதம் காணப்படும். எதிரணியின் நடு இரு கம்பங்களிடையே பந்தை அடித்துப் புள்ளிகள் பெறுவதே விளையாட்டின் நோக்கமாகும். ஒவ்வொரு ஆட்டமும் நான்கு காற்பகுதிகளாக விளையாடப்படுகிறது. நான்காவது காற்பகுதியின் முடிவில், அதாவது ஆட்ட முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி வெற்றி பெறும். புள்ளிகள் சமநிலையில் இருந்தால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும்.

இந்த ஆட்டவகையில் பந்தைக் கொண்டுசெல்ல உடலின் எந்தப் பாகத்தையும் பயன்படுத்த முடியும். உதைத்தல், கைகளால் செலுத்துதல், பந்துடன் ஓடுதல் ஆகியன பந்தைக் கொண்டுசெல்லும் மூன்று முறைகளாகும்.

வரலாறு

அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 1853 அளவில் விக்ரோறியத் தங்க நிலங்களில் காற்பந்தாட்டம் ஆடப்பட்டமை தெரிய வந்துள்ளது. ஆயினும் 1858 இல் மெல்பேணில் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டது. குளிர்காலங்களில் துடுப்பாட்டக்காரர்கள் ஆடுவதற்காகவே இந்த ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட்டது. 1859 இல் மெல்பேண் காற்பந்தாட்டக் கழகத்தால் முதல்முறையாக காற்பந்தாட்ட விதிகள் அச்சிடப்பட்டன.

2008 இல் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டத்தின் 150 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.

ஆட்ட விதிகள்

விளையாடப்படும் மைதானமும் பயன்படும் பந்தும் நீள்வட்ட வடிவமானவை. ஒவ்வொரு அணி சார்பாகவும் ஆகக் கூடியது 18 வீரர்களே களமிறங்கலாம். மேலதிகமாக நான்கு வீரர்கள் ஆட்டத்தின் இடையே மாற்றம் செய்யப்படலாம். அவ்வகையில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு அணி சார்பாகவும் 22 வீரர்கள் இருப்பார்கள்.

ஆட்டம் தொடங்குகையில் வீரர்கள் மைதானத்தின் எப்பகுதியிலும் நிற்கலாம். ஆனால் ஆட்டந் தொடங்கும் போது மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து 50 மீற்றர் தூரத்துக்குள் ஒவ்வோர் அணி சார்பிலும் நான்கு வீரர்கள் மட்டுமே நிற்கலாம்.

Tags:

அவுஸ்திரேலியாகாற்பந்தாட்டம்பந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்குலத்தோர்வரலாறுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்திராவிட மொழிக் குடும்பம்நாமக்கல் மக்களவைத் தொகுதிபழமுதிர்சோலை முருகன் கோயில்முத்துலட்சுமி ரெட்டிஇயேசு பேசிய மொழிஉமாபதி சிவாசாரியர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பூலித்தேவன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பாரதிதாசன்மஞ்சள் காமாலைவிவிலிய சிலுவைப் பாதைவிலங்குஇடலை எண்ணெய்நிணநீர்க்கணுசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சூரரைப் போற்று (திரைப்படம்)போக்குவரத்துகொள்ளுசித்தர்குணங்குடி மஸ்தான் சாகிபுதங்கம்மாமல்லபுரம்காளமேகம்கம்பர்தமிழ் இலக்கணம்விஜய் ஆண்டனிதிருத்தணி முருகன் கோயில்இட்லர்குண்டூர் காரம்இந்திய அரசியல் கட்சிகள்முதுமலை தேசியப் பூங்காதாய்ப்பாலூட்டல்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்பங்குனி உத்தரம்பணவீக்கம்கிராம நத்தம் (நிலம்)ஐரோப்பாமுல்லை (திணை)சிவன்அழகர் கோவில்தமிழ் இலக்கியம்விருத்தாச்சலம்பிலிருபின்கலம்பகம் (இலக்கியம்)அளபெடைபுவிவெப்பச் சக்திஇரவு விடுதிகலாநிதி மாறன்சென்னைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகுருத்து ஞாயிறுமோகன்தாசு கரம்சந்த் காந்திபெண் தமிழ்ப் பெயர்கள்மேற்குத் தொடர்ச்சி மலைகட்டுவிரியன்பதினெண்மேற்கணக்குஜெயகாந்தன்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகஞ்சாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பறையர்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதமிழர் நிலத்திணைகள்சிவனின் 108 திருநாமங்கள்இலக்கியம்வேற்றுமையுருபுமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மறைமலை அடிகள்ஹஜ்ஏ. ஆர். ரகுமான்🡆 More