அயனியாக்கும் கதிர்

உலகில் எண்ணற்ற பொருட்களைக் காண்கிறோம்..

அயனியாக்கும் கதிர்களின் உயிரியல் விளைவுகள்

இவையனைத்திற்கும் அடிப்படையாக அமைவது அணுக்களே.இயற்கையில் ஐட்ரசன் முதல் யுரேனியம் வரை 92 தனிமங்கள் உள்ளன.ஒவ்வொரு தனிமமும் அதனதன் அணுக்களால் ஆனது. ஓர் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு உள்ளது. அணுக்கரு நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானையும் மின்னூட்டம் இல்லாத நியூட்ரானையும் கொண்டுள்ளது. இத்துகள்களை கருத்துகள்கள் என்கிறோம்.கருவினைச் சுற்றி பல சுற்றுப் பாதைகளில் எலக்ட்ரான்கள் தொடர்ந்து சுற்றி வருகின்றன.ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் அதிலுள்ள புரோட்டானின் எண்ணிக்கையும் எலக்ரான்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதால் அணுவானது மின்னியலைப் பொறுத்தவரையில் சமநிலையிலுள்ளது. புரோட்ரானின் எண் அல்லது எலக்ட்ரானின் எண் அணு எண் எனப்படும்.கருத்துகள்களின் கூட்டுஎண் நிறைஎண் எனப்படும்.

அணுவிலுள்ள எலக்ட்ரான்களுக்கு போதிய ஆற்றலைக் கொடுத்து ஒன்றோ அல்லது சில எலக்ட்ரான்களை அணுவிலிருந்து அகற்ற முடியும். இவ்வாற்றல் வெப்ப ஆற்றலாகவோ ஆற்றல் மிக்க எக்சு அல்லது காமாக் கதிர்களின் ஆற்றலாகவோ மின்புல ஆற்றலாகவோ இருக்கலாம்.வெப்ப ஆற்றலால் அணுவிலிருந்து அகற்றப்படும் எலக்ட்ரான்,வெப்ப அயனி'''' எனப்படும்.மின்காந்த அலைகளால் அணுவிலிருந்து பெறப்படும் எலக்ட்ரான் ஒளி எலக்ட்ரான்கள் எனப்படும். இவ்வாறு எலக்ட்ரான்களை பெறும்முறைக்கு அயனியாக்கம் என்றுபெயர்.இக்கதிர்களுக்கு எலக்ட்ரான்களின் பிணைப்பாற்றலை விடக் கூடுதல் ஆற்றல் இருந்தால் மட்டுமே அயனிகள் தோற்றுவிக்க முடியும்.

இப்படிப்பட்ட எக்சு மற்றும் காமா கதிர்கள் அயனியாக்கம் நிகழக் காரணமாய் இருப்பதால் அவைகள் அயனியாக்கும் பண்புடையவை எனப்படுகின்றன.இப்படிப் பட்ட கதிர்கள் உயிர்வாழும் -மரம், செடி, மிருகங்கள்,மனிதன் -அனைத்திலும் பலவிளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.இவ்விளைவுகளே அயனியாக்கும் கதிர்களின் உயிரியல் விளைவுகள் எனப்படுகின்றன.

அயனியாக்கும் பண்புடைய எக்சு மற்றும் காமா கதிர்கள் எவ்வாறு உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன ? எக்சு மற்றும் காமா கதிர்கள் உடலில் காணப்படும் பல்வேறு அணுக்களிலும் மூலக்கூறுகளிலும் மோதி வேகமாகச் செல்லும் எலக்ட்ரான்களைத் தோற்றுவிக்கின்றன.அதுபோல் வேக நீயூட்ரான்கள் மோதும் போது பின்னுந்த புரோட்டான்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.இவ்வாறு பெறப்பட்ட எலக்ரான்களும் பின்னுந்த புரோட்டான்களும் மேலும் அயான் இணைகளைத் தோற்றுவிக்கின்றன.தனித்த அயனிகள் செயல்திறன் மிக்க ரேடிகல்கள் என்று அறியப்படுகின்றன.இவைகள் முக்கியமான மூலக்கூறுகளில் வேதிப் பிணைப்பில் முறிவுகளை அல்லது அறுபடும் நிலையினை ஏற்படுத்துகின்றன.இதன் காரணமாக மேலும் வேதிவிளைவுகள் உடலில் தோன்றுகின்றன.இவைகளின் மொத்த விளைவு உயிரியல் விளைவாக வெளிப்படுகின்றன.இது கதிர் மருத்துவத்தில் விரும்பப்படும் விளைவாக உள்ளது. கதிரியல் பாதுகாப்பில் இவ்விளைவுகளை தவிர்க்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதாக உள்ளது. இவையாவும் அடியில் காட்டப் பட்டுள்ளன.

  காமா ,  x கதிர்கள்                       விழும் வேக நியூட்ரான்கள்          ↓                                                   ↓  வேக எலக்ட்ரான்கள்                         பின் உந்த புரோட்டான்கள்                 --------------------------------                               ↓                          அயான்  இணைகள்                                ↓                   செயல்திறன் மிக்க தனி ரேடிக்கல்கள்                                ↓                   வேதி பிணைப்பு முறிவு                                 ↓                          வேதி விளைவுகள்                                ↓                           உயிரியல் விளைவு.      | 

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏப்ரல் 25கன்னத்தில் முத்தமிட்டால்முடியரசன்புனித ஜார்ஜ் கோட்டைபொன்னுக்கு வீங்கிசுரைக்காய்புதுமைப்பித்தன்கங்கைகொண்ட சோழபுரம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருக்குறள்காரைக்கால் அம்மையார்திருக்குர்ஆன்உள்ளீடு/வெளியீடுபனிக்குட நீர்அளபெடைஅண்ணாமலையார் கோயில்மழைபாரத ரத்னாமுத்தரையர்காடுமதுரைக் காஞ்சிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சித்தர்காம சூத்திரம்நன்னன்காளை (திரைப்படம்)அத்தி (தாவரம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தொடை (யாப்பிலக்கணம்)தேவநேயப் பாவாணர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சேரர்சயாம் மரண இரயில்பாதைஆசிரியப்பாநாச்சியார் திருமொழிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மானிடவியல்திருமங்கையாழ்வார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அகத்திணைசிறுபாணாற்றுப்படைவசுதைவ குடும்பகம்புங்கையானையூடியூப்அம்மனின் பெயர்களின் பட்டியல்கலித்தொகைகருக்கலைப்புவாட்சப்சமுத்திரக்கனிசுந்தரமூர்த்தி நாயனார்கவிதைபர்வத மலைமுத்துலட்சுமி ரெட்டியாழ்திருநெல்வேலிஎட்டுத்தொகை தொகுப்புகொல்லி மலைபாலை (திணை)ஆறுமேகக் கணிமைகருப்பசாமிபறவைக் காய்ச்சல்சச்சின் டெண்டுல்கர்நிணநீர்க் குழியம்உரைநடைதெலுங்கு மொழிஐஞ்சிறு காப்பியங்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தேவகுலத்தார்கணினிநாயன்மார் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019🡆 More