அசவாத்

அசவாத் (Azawad, அரபு மொழி: أزواد‎) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனம், மற்றும் சாகெல் வலயத்தை ஒட்டிய பிரதேசத்தைக் குறிக்கும்.

இப்பிராந்தியத்தில் மாலியின் திம்பக்து, கிடால், காவோ, மற்றும் மோப்தி ஆகிய மாகாணங்கள் அடங்குகின்றன. அசவாத் பகுதிக்கு தன்னாட்சி கோரி அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் என்ற போராளிக் குழு மாலி அரசுடன் போரிட்டு வருகிறது.

அசவாத்
Independent State of Azawad
دولة أزواد المستقلة
ⴰⵣⴰⵓⴷ
État indépendant de l'Azawad
கொடி of அசவாதின்
கொடி
Projection of Africa in green and the rest of Mali in light green
அசவாத் பச்சையில், மாலியின் இதர பகுதிகள் இளம் பச்சையில்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
காவோ
பேசும் மொழிகள்துவாரெக், அரபு, சொங்காய், ஃபுலா மொழி, பம்பாரா மொழி, பிரெஞ்சு
மக்கள்அசவாதி
அரசாங்கம்இடைக்கால அரசு
• பொதுச் செயலாளர்
பிலால் அக் அச்செரிஃப்
விடுதலை 
மாலி இடமிருந்து (அறிவிப்பு, எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை)
• பிரகடனம்
6 ஏப்ரல் 2012
• அங்கீகாரம்
அங்கீகரிக்கப்படவில்லை
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+0 (not observed)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி223
அசவாத்
அசவாத் பகுதியின் வரைபடம்.

அசவாத் பகுதியில் துவாரெக் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இப்பகுதியில் எண்ணெய் வளம், மற்றும் யுரேனியம் உட்படக் கனிம வளம் அதிகமாக உள்ளது.

சொற்பிறப்பு

மேற்கு நைஜர், வடகிழக்கு மாலி, தெற்கு அல்ஜீரியா ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்று வடுநிலமான அசவாக் என்ற பெர்பர் மொழிச் சொல்லில் இருந்து அசவாத் என்ற பெயர் மருவியுள்ளது.

மாலியின் ஆட்சி

1962-64, 1990-1995, 2007-2009 ஆகிய காலப்பகுதிகளில் மாலியின் ஆட்சிக்கு எதிராக பல கிளர்ச்சிகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. 2012 ஆம் ஆண்டில் அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் அங்கார் தைன் என்ற இசுலாமியப் புரட்சியாளர்களுடன் இணைந்து போரிட்டு வருகிறது.

மாலி அரசு அசவாத் பகுதியைத் தன்னாட்சிப் பிராந்தியமாக அறிவிக்கும் வரையில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவித்து 2012 சனவரி 17 இல் அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் போரை அறிவித்தது.

2012 மார்ச் மாதத்தில் மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போராளிகள் மார்ச் 31 ஆம் நாள் கிடால் என்ற முக்கிய பாலைவன நகரையும், காவோ நகரையும் இராணுவ நிலைகளுடன் சேர்த்துக் கைப்பற்றினர். ஏப்ரல் 1 இல் வரலாற்றுப் புகழ் மிக்க திம்பக்து நகரையும் கைப்பற்றினர். அசவாத் பகுதியின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய போராளிகள் எப்ரல் 6 ஆம் நாள் அதனைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி, இராணுவ நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதாக அறிவித்தனர்.

மேற்கோள்கள்

அசவாத் 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

Tags:

அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம்அரபு மொழிசகாராமாலிவடக்கு ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உப்புச் சத்தியாகிரகம்நாடாளுமன்றம்நயினார் நாகேந்திரன்பெரிய வியாழன்அளபெடைதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிமொழிபாண்டியர்பண்பாடுமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்அழகிய தமிழ்மகன்கட்டபொம்மன்கௌதம புத்தர்இந்திகூகுள்திருவாசகம்தேசிக விநாயகம் பிள்ளைநாடாளுமன்ற உறுப்பினர்திராவிட முன்னேற்றக் கழகம்தருமபுரி மக்களவைத் தொகுதிபெயர்ச்சொல்ஜெயம் ரவிசூரைஈரோடு தமிழன்பன்பிள்ளையார்லோ. முருகன்சிங்கப்பூர்கல்விசிலம்பரசன்இந்திய அரசியல் கட்சிகள்திரிசாஉயிர்ப்பு ஞாயிறுமரகத நாணயம் (திரைப்படம்)நரேந்திர மோதிதமிழ் இலக்கியம்சீமான் (அரசியல்வாதி)சிறுநீர்ப்பாதைத் தொற்றுவங்காளதேசம்தமிழ்த்தாய் வாழ்த்துஇனியவை நாற்பதுஅகத்தியர்நாடார்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கரூர் மக்களவைத் தொகுதிகணியன் பூங்குன்றனார்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநீலகிரி மக்களவைத் தொகுதிசுப்பிரமணிய பாரதிமூதுரைமயக்கம் என்னதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)யோவான் (திருத்தூதர்)நனிசைவம்கொன்றைஐங்குறுநூறுமதுரை மக்களவைத் தொகுதிசு. வெங்கடேசன்பாரிசிலுவைப் பாதைகெத்சமனிகொங்கு வேளாளர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்குமரகுருபரர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மதயானைக் கூட்டம்இலங்கைநாயக்கர்சீறாப் புராணம்பிரேசில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநான் அவனில்லை (2007 திரைப்படம்)மதுரைக் காஞ்சிஐ (திரைப்படம்)சங்க காலம்நிணநீர்க்கணுமுதலாம் இராஜராஜ சோழன்ம. கோ. இராமச்சந்திரன்🡆 More