நூல் யோபு: திருவிவிலிய நூல்

யோபு (Book of Job) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

நூல் யோபு: நூல் பெயர், யோபு நூலின் கருப்பொருள், யோபு நூல் தொகுக்கப்பட்ட காலம்
துன்பத்தில் உழலும் யோபுவை அவர்தம் நண்பர்கள் குற்றம் சாட்டுதல் (யோபு 22:1-5). விவிலிய வரைவு ஓவியம். கலைஞர்: வில்லியம் ப்ளேக் (1757-1827).

நூல் பெயர்

யோபு என்னும் விவிலிய நூலின் கதைத் தலைவர் பெயர் யோபு ஆகும். எபிரேய மொழியில் இது אִיוֹב‎ ʾ iyov என வரும்.

யோபு நூலின் கருப்பொருள்

விலியத்திலுள்ள ஞான இலக்கியங்களுள் யோபு என்னும் இந்நூல் தலைசிறந்தது. உலக இலக்கியங்கள் வரிசையிலும் இடம்பெறும் நூல் இது.

ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் (= எதிரி) யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு.

துன்பத்திற்கு விடை தேடிய யோபு, இறுதியில் கடவுளின் திட்டத்தைத் துருவி ஆய்ந்து, அனைத்திற்கும் விளக்கம் கண்டிட மனித அறிவால் இயலாது என்னும் முடிவுக்கு வருகிறார்.

இவ்வாறு, "நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?" என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இந்நூல்.

யோபு நூல் தொகுக்கப்பட்ட காலம்

யோபு நூல் எக்காலக் கட்டத்தில் தொகுக்கப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இந்நூல் பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர். எனவே, இந்நூல் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.

யோபு நூலின் உட்கிடக்கை

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1 - 2:13 766 - 768
2. யோபும் அவர்தம் நண்பர்களும்

அ) யோபின் முறையீடு
ஆ) முதல் உரையாடல்
இ) இரண்டாம் உரையாடல்
ஈ) மூன்றாம் உரையாடல்
உ) ஞானத்தின் மேன்மை
ஊ) யோபின் இறுதிப் பதிலுரை

3:1 - 31:40

3:1-26
4:1 - 14:22
15:1 - 21:34
22:1 - 27:23
28:1-28
29:1 - 31:40

768 -797

768 - 769
769 - 780
780 - 787
787 -792
792 - 793
793 - 797

3. எலிகூவின் உரைகள் 32:1 - 37:24 797 - 804
4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6 804 - 810
5. முடிவுரை 42:7-17 810 -811

மேலும் காண்க

விக்கிமூலத்தில் யோபு நூல்

Tags:

நூல் யோபு நூல் பெயர்நூல் யோபு யோபு நூலின் கருப்பொருள்நூல் யோபு யோபு நூல் தொகுக்கப்பட்ட காலம்நூல் யோபு யோபு நூலின் உட்கிடக்கைநூல் யோபு மேலும் காண்கநூல் யோபுகிறித்தவம்திருவிவிலியம்பழைய ஏற்பாடுயூதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராம் சரண்வெற்றிமாறன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஜலியான்வாலா பாக் படுகொலைநெருப்புகொன்றைஅம்பேத்கர்உயிர்ச்சத்து டிமஞ்சள் காமாலைமார்பகப் புற்றுநோய்மூதுரைசுந்தரமூர்த்தி நாயனார்ஐக்கிய நாடுகள் அவைவெ. இறையன்புநெல்சிறுபாணாற்றுப்படைஎல். இராஜாஇந்திஅமேசான் பிரைம் வீடியோபானுப்ரியா (நடிகை)புகாரி (நூல்)இந்திய அரசியலமைப்புபுரோஜெஸ்டிரோன்சீனாபதுருப் போர்மயக்கம் என்னநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பிள்ளையார்பிச்சைக்காரன் (திரைப்படம்)விஜயநகரப் பேரரசுசுற்றுச்சூழல்தனுஷ் (நடிகர்)இந்திய நிறுமங்கள் சட்டம், 1956பணம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீவக சிந்தாமணிதஞ்சாவூர்தினமலர்பறையர்சீரடி சாயி பாபாசிட்டுக்குருவிகாதலர் தினம் (திரைப்படம்)காம சூத்திரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவரலாறுமயில்வரகுதிருநாவுக்கரசு நாயனார்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பர்பொருளாதாரம்ஹதீஸ்சுற்றுலாமருது பாண்டியர்மாதவிடாய்கழுகுமலை108 வைணவத் திருத்தலங்கள்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்எகிப்துஅழகர் கோவில்திருக்குர்ஆன்தமிழ் இலக்கியம்தாயுமானவர்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்இலங்கையின் வரலாறுபகாசுரன்இந்திய தண்டனைச் சட்டம்பொது ஊழிசிலப்பதிகாரம்சங்க இலக்கியம்மியா காலிஃபாமுதல் மரியாதைஇராம நவமிதிருவள்ளுவர்விருத்தாச்சலம்மருதம் (திணை)ஜி. யு. போப்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்மருதமலை முருகன் கோயில்🡆 More