இங்கிலாந்தின் முதலாம் மேரி

முதலாம் மேரி (Mary I, 18 பெப்ரவரி 1516 – 17 நவம்பர் 1558) சூலை 1553 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்து அயர்லாந்து இராச்சியங்களின் அரசியாக இருந்தவர்.

இங்கிலாந்து அவரது தந்தை எட்டாம் என்றியின் காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையைத் தழுவியிருந்தது; இதனை மாற்றி இங்கிலாந்தை மீளவும் கத்தோலிக்க வழிகளுக்குத் திருப்ப அவர் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார். இதற்காக அவர் நிறைவேற்றிய கொலைகளை அடுத்து அவரை சீ்ர்திருத்த வாத எதிரிகள் "பிளடி மேரி" (குருதிக்கறை மேரி) என அழைத்தனர்.

மேரி I
இங்கிலாந்தின் முதலாம் மேரி
அந்தோனிசு மோரின் ஓவியம், 1554
இங்கிலாந்தின் அரசி மற்றும் அயர்லாந்தின் அரசி
(more...)
ஆட்சிக்காலம்சூலை 1553 –
17 நவம்பர் 1558
முடிசூட்டுதல்1 அக்டோபர் 1553
முன்னையவர்ஜேன் (பிணக்கில்) அல்லது இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு
பின்னையவர்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்
இணை-அரியணைபிலிப்பு
எசுப்பானிய (உடனுறை துணை) அரசி
பதவிக்காலம்16 சனவரி 1556 –
17 நவம்பர் 1558
பிறப்பு18 பெப்ரவரி 1516
பிளசென்சியா அரண்மனை, கிரேனிச்
இறப்பு17 நவம்பர் 1558 (அகவை 42)
புனித ஜேம்சு அரண்மனை, இலண்டன்
புதைத்த இடம்14 திசம்பர் 1558
துணைவர்
மரபுதுடோர்
தந்தைஇங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி
தாய்அராகனின் கத்தரீன்
மதம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்மேரி I's signature

எட்டாம் என்றியின் முதல் மனைவி காத்தரீனுக்குப் பிறந்தவர்களில் மேரி மட்டுமே எஞ்சிய ஒரே பெரியவளாகும் வரை உயிருடன் இருந்த மகவாகும். 1547இல் மேரியின் தம்பி (என்றியின் இரண்டாம் மனைவி ஜேன் செய்மோருக்குப் பிறந்தவர்) இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு ஒன்பது அகவையில் அரியணை ஏறினார். 1553இல் உயிர்க்கொல்லி நோயொன்றுக்கு எட்வர்டு வீழ்ந்தபோது தனக்கு அடுத்த வாரிசுப் பட்டியலிலிருந்து மேரியின் பெயரை நீக்க முயன்றார். தனது ஆட்சியில் தான் கொணர்ந்த சீர்திருத்த கிறித்தவத்திற்கு எதிராக மேரி செயல்படுவார் என எண்ணியே (அவரது எண்ணம் பின்னாளில் உறுதியானது) இத்தகைய முயற்சியை மேற்கொண்டார். அவரது மரணத்திற்குப் பின்னர் முன்னணி அரசியல்வாதிகள் சீமாட்டி ஜேன் கிரேயை அரசியாக்க முயன்றனர். மேரி கிழக்கு ஆங்கிலயாவில் ஓர் படையைத் திரட்டி ஜேனை பதிவியிலிருந்து தீக்கினார்; இறுதியில் ஜேனின் தலை துண்டிக்கப்பட்டது. ஜேன் மற்றும் மத்தில்டா ஆகியோரின் ஐயுறாவான பதவிக்காலத்தை தவிர்த்தால் மேரியே இங்கிலாந்தை ஆண்ட முதல் அரசியாவார். 1554இல் மேரி எசுப்பானியாவின் பிலிப்பை திருமணம் புரிந்து 1556இல் அவர் அரசராக பதவியேற்ற பின் ஆப்சுபர்கு எசுப்பானியாவின் உடனுறை துணை ஆனார்; இருப்பினும் மேரி எசுப்பானியா சென்றதில்லை.

மேரியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் மேரியின் ஒறுத்தல்கள் என அழைக்கப்படும் சமய ஒறுத்தலில் 280க்கும் கூடுதலானவர்களுக்கு எரிக்கவைத்து மரணதண்டனை வழங்கினார். 1558இல் மேரியின் மரணத்திற்குப் பின்னர், என்றிக்கும் ஆன் பொலினுக்கும் பிறந்த அவரது சகோதரி மற்றும் அடுத்த வாரிசான இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், அவரால் மீள்நிறுவப்பட்ட கத்தோலிக்கத்தை மாற்றி திரும்பவும் சீர்திருத்த சபையை நிறுவினார்.

குறிப்புகள்

Tags:

அயர்லாந்து இராச்சியம்இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிஇங்கிலாந்து இராச்சியம்சீர்திருத்தத் திருச்சபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பராமாயணம்சூரியக் குடும்பம்பிரபுதேவாஅக்கி அம்மைஇசைஈ. வெ. இராமசாமிநரேந்திர மோதிகாப்பியம்நற்கருணைஇரச்சின் இரவீந்திராநாடாளுமன்ற உறுப்பினர்இன்ஸ்ட்டாகிராம்வேற்றுமைத்தொகைகூகுள் நிலப்படங்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபெண்களின் உரிமைகள்செங்குந்தர்போதைப்பொருள்கணியன் பூங்குன்றனார்வளையாபதிபூலித்தேவன்மார்ச்சு 28இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்மாணிக்கவாசகர்பாண்டவர் பூமி (திரைப்படம்)தேர்தல்செக் மொழிவிளையாட்டுகமல்ஹாசன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிசென்னைவிலங்குபாரதிய ஜனதா கட்சிரோபோ சங்கர்இராவணன்குறிஞ்சிப் பாட்டுவிஜய் (நடிகர்)ஈரோடு தமிழன்பன்கண்ணதாசன்வீரப்பன்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்த்தாய் வாழ்த்துவாணிதாசன்வெள்ளையனே வெளியேறு இயக்கம்ருதுராஜ் கெயிக்வாட்குருதிச்சோகைகொன்றைபத்துப்பாட்டுஇந்தியாவில் இட ஒதுக்கீடுசுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழில் கணிதச் சொற்கள்மக்காவெண்குருதியணுபிரேசில்மனத்துயர் செபம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நாம் தமிழர் கட்சிநஞ்சுக்கொடி தகர்வுசிவனின் 108 திருநாமங்கள்இறைமறுப்புநவக்கிரகம்நாமக்கல் மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுஅருந்ததியர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்டுவிட்டர்மூலம் (நோய்)ஒற்றைத் தலைவலிசொல்லாட்சிக் கலைமுத்துலட்சுமி ரெட்டிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சங்க காலம்பரிவர்த்தனை (திரைப்படம்)ஆற்றுப்படைதமிழ்நாடு சட்டப் பேரவைமு. வரதராசன்தமிழக வெற்றிக் கழகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்🡆 More