ஆண்டு

ஆண்டு (Year) என்பது ஒரு கால அளவாகும்.

இது வழக்கமாக, புவி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். புவியின் அச்சு சாய்வால், வானிலை, பகல் நேரம், மண்வளம், நிலைத்திணை மாற்றங்களை ஏற்படுத்தும் பருவங்களுக்கு புவி ஆட்படுகிறது. புவிக்கோளத்தின் மிதவெப்ப மண்டலத்திலும் புவிமுனையண்மை மண்டலத்திலும் நான்கு பருவங்கள் உணரப்பட்டுள்ளன: இவை இளவேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என்பனவாகும். வெப்ப மண்டலத்திலும் துணைவெப்ப மண்டலத்திலும் பல புவிபரப்புப் பகுதிகளில் தெளிவான பருவ மாற்றங்கள் வரையறுக்கப்படவில்லை; என்றாலும் கோடை உலர்பருவமும் மழை ஈரப் பருவமும் தெளிவாக உணரப்படுகின்றன. புவியின் இயல்பு ஆண்டு 365 நாட்களையும், நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டமைகிறது.

நாட்காட்டி ஆண்டு என்பது புவியின் வட்டணைச் சுழற்சி நேரத்தை நாட்காட்டியில் தோராயமாக குறிக்கும் நாட்களின் எண்ணிக்கையாகும். இது கிரிகொரிய, ஜூலிய நாட்காட்டிகளில் இயல்பாண்டு 365 நாட்களையும் நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டுள்ளது: கீழே காண்க. கிரிகொரிய நாட்காட்டியில் 400 ஆண்டு நெடுஞ்சுழற்சியில் கணித்த நிரல் ஆண்டு கால இடைவெளி 365.2425 நாட்கள் ஆகும்.

வானியலில், ஜூலிய ஆண்டு கால அலகாக பயன்படுகிறது; ஜூலிய வானியல் ஆண்டு, 365.25 நாட்கள் அல்லது சரியாக 86400 நொடிகள் (அனைத்துலக முறை அலகுகள் (SI)) அல்லது கருக்காக 31557600 நொடிகள் ஆக வரையறுக்கப்படுகிறது.

ஆண்டு எனும் சொல் நாட்காட்டி, வானியல் பயன்பாட்டைத் தவிர பருவ ஆண்டு, நிதி ஆண்டு, கல்வி ஆண்டு ஆகிய நடைமுறை ஆண்டுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதேபோல இது கோள்களின் வட்டணைச் சுழற்சிக் காலத்தை குறிக்கப் பயன்படுகிறது]: எடுத்துக்காட்டாக, செவ்வாய் ஆண்டு, வெள்ளி ஆண்டு ஆகியவற்றைக் கூறலாம். இச்சொல் மிகப் பெரிய கால இடைவெளிகளாகிய பால்வெளி ஆண்டு, பேராண்டு (வான்கோள ஆண்டு) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுகிறது.

குறியீடு

ஆண்டு என்ற அலகினைக் குறிக்க, உலக முழுவதும் ஒப்புதல் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. அனைத்துலக முறை அலகுகள் அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை என்றாலும் பன்னாட்டுச் செந்தர நிறுவனம் தன் ISO 80000-3 இன் பின்னிணைப்பு-சி இல் இலத்தீனிய சொல்லான annus என்பதிலிருந்து a என்ற எழுத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. (NIST SP811 , ISO 80000-3:2006) இந்த a என்பது நில அளவைக் குறிக்கும் எக்டேர் என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் விண்வெளி அறிவியலிலும், தொல்லுயிரியலிலும், நிலவியலிலும் வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா) 10 இலட்சம் ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர்.

பெருக்கல் அலகுகள்

SI அலகுகளோடு இவை பெருக்கலின் மூலம் அறியப்படுகிறது.

Ma

  • Ma (for megaannum), என்ற கால அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (106=10,00,000=10 இலட்சம்) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது.
      (எ.கா)கறையான், புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்.
        Ma என்பதனை, mya என்றும் குறிப்பிடுவர்.

சுருக்கங்கள் yr, ya

வானியலிலும் புவியியலிலும் தொல்லுயிரியலிலும் yr ஆண்டுகள் கால இடைவெளிக்கும் ya ஆண்டுகள் முன்பு என்பதற்கும் சில வேளைகளில் உரிய ஆயிரம், மில்லியன், பில்லியன் முன்னொட்டுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இவை பசெ அலகுகள் அல்ல; ஈரொட்டான பன்னாட்டுப் பரிந்துரைகளின் பேரில் பயன்படுகின்றன. இவை ஆங்கில முதல் எழுத்தையோ அவற்றுக்குரிய முன்னொட்டுகளையோ பயன்படுத்துகின்றன. இம்முன்னொட்டுகள் (t, m, b) அல்லது பதின்ம முன்னொட்டுகள் (k, M, and G) அல்லது (k, m, g) எனும் மாற்றுப் பதின்ம முன்னோட்டுகளையோ பின்வருமாறு பயன்படுத்துகின்றன:

பசெசாரா (Non-SI) சுருக்கம் சம பசெ முன்னொட்டு அள்வு மதிப்பு
kyr ka
  • ஆயிரம் ஆண்டுகள்
Myr அல்லது myr Ma
  • மில்லியன் ஆண்டுகள்
byr Ga
  • பில்லியன் ஆண்டுகள் (ஆயிர மில்லியன் ஆண்டுகள்)
kya அல்லது tya ka முன்பு
  • செறிநிலை மாந்தன் தோற்றம், circa 200 kya
  • ஆப்பிரிக்க வெளியேற்றம், circa 60 kya
  • கடைசி பனியூழிப் பெருமம், circa 20 kya
  • புதிய கற்காலப் புரட்சி, circa 10 kya
Mya or mya Ma முன்பு
  • பிளியோசீன், 5.3இல் இருந்து 2.6 mya
    • The கடைசி புவிக்காந்த்த் தலைக்கீழாக்கம், 0.78 mya
    • The (ஏமியான் கட்ட) பனியூழி தொடக்கம், 0.13 mya
  • ஃஓலோசீன் தொடக்கம், 0.01 mya
bya or gya Ga முன்பு

பொது ஆண்டு

எந்த வானியல் ஆண்டும் முழு எண் நாட்களையோ முழு எண் நிலா மதங்களையோ கொண்டமைவதில்லை. எனவே அவற்றில் நெட்டாண்டுகள் போன்ற சில விதிவிலக்கான இடைவெளிக் கணக்கீடுகள் உண்டு. நிதி, அறிவியல் கணக்கீடுகள் எப்போதும் 365 நாள் நாட்காட்டியையே பின்பற்றுகின்றன.

பன்னாட்டு நாட்காட்டிகள்

கிமு, கிபி ஆண்டுகள் சார்ந்த கணிப்புகளில் பொதுவாக வானியல் ஆண்டு எண்வரிசை பின்பற்றப்படுகிறது. இதில்கிமு 1 என்பது 0 ஆகவும் கிமு 2 என்பது -1 ஆகவும் கொண்டு குறிக்கப்படுகிறது.

பல்வேறு பன்பாடுகளிலும் சமயங்களிலும் அறிவியல் சூழ்நிலைகளிலும் வேற் பிற காலக் கணிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பாரசீக நாட்காட்டி

பாரசீக நாட்காட்டி அல்லது ஈரானிய நாட்காட்டி ஆப்கானித்தானிலும் இர்ரானிலும் பயன்படுகிறது. இதில் வடக்குச் சம பகலிரவு நாளுக்கு அருகிலான நள்ளிரவில் ஆண்டு தொடங்குகிறது. இது தெகுரான் நேர வலயத்தைச் சார்ந்த் கணிக்கப்படுகிறது. இது நெட்டாண்டு நெறி முறையைப் பின்பற்றுவதில்லை.

நிதி ஆண்டு

கல்வி ஆண்டு

வானியல் ஆண்டுகள்

ஜூலிய ஆண்டு

விண்மீன், வெப்ப மண்டல, பிறழ்நிலை ஆண்டுகள்

ஒளிமறைப்பு ஆண்டு

முழு நிலாச் சுழற்சி

நிலா ஆண்டு

அலைவாட்ட ஆண்டு

விண்மீன் எழுச்சி ஆண்டு

சீரசு எழுச்சி ஆண்டு

காசு ஈர்ப்பாண்டு

பெசலிய ஆண்டு

ஆண்டு, நாள் கால அளவு வேறுபாடுகள்

ஆண்டு வேறுபாட்டு எண்மதிப்பு

இப்பிரிவின் நிரல் ஆண்டுக் கால அளவு 2000 ஆண்டுக் காலகட்டத்துக்கு கணக்கிடப்பட்டதாகும். 2000 நிலைமையோடு ஒப்பிட்டு ஆண்டுக் கால அளவு வேறுபாடுகள் கடந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் தரப்பட்டுள்ளன. அட்டவணையில் ஒரு நாள் 86,400 பசெ (SI) நொடிகள் கால அளவு கொண்டதாகும்.

2000 க்கான நிரல் ஆண்டு கால அளவு
ஆண்டுவகை நாட்கள் மணிகள் மணித்துளிகள் நொடிகள்
வெப்ப மண்டல 365 5 48 45
விண்மீன் 365 6 9 10
பிறழ்நிலை 365 6 13 53
வான்கோள நடுவரை (ஒளிமறைப்பு) 346 14 52 55
2000 இல் இருந்து ஆண்டு கால அளவு வேறுபாடு
(நொடிகள்; 2000 க்கும் மேலான மதிப்புள்ள ஆண்டுக்கு நேர்மதிப்பாக அமையும்)
ஆண்டு வெப்ப மண்டல விண்மீன் பிறழ்நிலை வான்கோள நடுவரை
−4000 −8 −45 −15 −174
−2000 4 −19 −11 −116
0 7 −4 −5 −57
2000 0 0 0 0
4000 −14 −3 5 54
6000 −35 −12 10 104

தொகுசுருக்கம்

நாட்கள் ஆண்டு வகை
346.62 ஒளிமறைப்பு (வான்கோள நடுவரை).
354.37 நிலா.
365 அலைவாட்ட, பொது ஆண்டு, பல சூரிய நாட்காட்டிகளில்.
365.24219 வெப்ப மண்டல அல்லது சூரிய, நிரல் மதிப்பு J2000.0 காலகட்டத்துக்கு முழுமைப்படுத்தியது .
365.2425 கிரிகொரிய நிரல்.
365.25 ஜூலிய.
365.25636 விண்மீன், J2000.0 காலகட்டத்துக்கு.
365.259636 பிறழ்நிலை, நிரல் மதிப்பு J2011.0 கால கட்டத்துக்கு முழுமைப்படுத்தியது.
366 நெட்டாண்டு, பல சூரிய நாட்காட்டிகளில்.

(கிரிகொரிய நிரல் ஆண்டு 365.2425 நாள்கள் அல்லது 52.1775 வாரங்கள் அல்லது 8765.82 மணிகள் அல்லது 525949.2 மணித்துளிகள் அல்லது 31556952 நொடிகள் கொண்டதுவாகும்). இந்த நாட்காட்டிக்கு பொது ஆண்டு, 365 நாட்கள் அல்லது (8760 மணிகள் அல்லது 525600 மணித்துளிகள் அல்லது 31536000 நொடிகள்) கொண்டுள்ளது; நெட்டாண்டு, 366 நாட்கள் அல்லது (8784 மணிகள் அல்லது 527040 மணித்துளிகள் அல்லது 31622400 நொடிகள்) கொண்டுள்ளது. கிரிகொரிய நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சி, 146097 நாட்களைப் பெற்றதாகும். எனவே சரியாக 20871 வாரங்களைக் கொண்டதாகும்.

"பேரளவு" வானியல் ஆண்டுகள்

பேராண்டு

பேராண்டு வான்கோள நடுவரையைச் சுற்றிவரும் புவிசார் சம இரவுபகல் நாள் சுழற்சி ஆகும். பேராண்டின் கால அளவு ஏறத்தாழ 25,700 ஆண்டுகளாகும். இதன் துல்லியமான மதிப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லை. வான்கோள தலையாட்ட வேகம் பல காரணிகளைச் சார்ந்துள்ளதால் இம்மதிப்பீடு அரியதாகிறது.

பால்வெளி ஆண்டு

பால்வெளி மையத்தைப் புவியின் சூரியக் குடும்பம் ஒருமுறை சுற்றி வலம்வரும் கால அளவே பால்வெளி ஆண்டாகும். இதன் கால அளவு 230 மில்லியன் புவியாண்டுகளாகும்.

பருவ ஆண்டு

பருவ ஆண்டு என்பது குறிப்பிட்ட பருவ நிகழ்வு அடுத்தடுத்து நிகழும் கால இடவெளியாகும். இந்நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் ஒரு மாத வேறுபாட்டளவுக்குக் கூட பெரிதும் மாறுவனவாகும். இத்தகைய பருவ நிகழ்வுகள் ஆற்று வெள்லப் பெருக்கு, பரவைகளின் வலசைபோதல், மரஞ்செடிகொடைகளின் பூத்தல், முதல் பனி உறைவு போன்றனவாக அமையலாம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

ஆண்டு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆண்டுகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆண்டு குறியீடுஆண்டு பொது ஆண்டு வானியல் கள்ஆண்டு பேரளவு வானியல் கள்ஆண்டு பருவ ஆண்டு மேலும் காண்கஆண்டு மேற்கோள்கள்ஆண்டு மேலும் படிக்கஆண்டு வெளி இணைப்புகள்ஆண்டுசூரியன்நெட்டாண்டுபுவிபூமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புவிதொழினுட்பம்களவழி நாற்பதுவே. செந்தில்பாலாஜிபறவைகளின் தமிழ்ப் பெயர்கள்சூர்யா (நடிகர்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நவக்கிரகம்பெயரெச்சம்மரகத நாணயம் (திரைப்படம்)சிவபுராணம்நெல்அளபெடைசிறுத்தைஆண்டாள்மியா காலிஃபாகாம சூத்திரம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசித்த மருத்துவம்மதராசபட்டினம் (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வளி மாசடைதல்முதலாம் இராஜராஜ சோழன்அவதாரம்திட்டக் குழு (இந்தியா)அங்குலம்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முதலாம் உலகப் போர்இந்திய அரசியல் கட்சிகள்கணினிஅடல் ஓய்வூதியத் திட்டம்ம. கோ. இராமச்சந்திரன்யசஸ்வி ஜைஸ்வால்குடும்பம்கிராம நத்தம் (நிலம்)அருணகிரிநாதர்பெரியபுராணம்வாலி (கவிஞர்)தானியம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பகவத் கீதைசேக்கிழார்பாலினப் பயில்வுகள்குஷி (திரைப்படம்)சுந்தர காண்டம்ஜெயம் ரவிகளப்பிரர்கிராம சபைக் கூட்டம்ஜிமெயில்தமிழர் பருவ காலங்கள்சின்னம்மைவாஸ்து சாஸ்திரம்சூரைஹர்திக் பாண்டியாமனோன்மணீயம்கார்லசு புச்திமோன்தளபதி (திரைப்படம்)ஆத்திசூடிதமிழர் விளையாட்டுகள்இந்திய புவிசார் குறியீடுபௌத்தம்ஒற்றைத் தலைவலியானையின் தமிழ்ப்பெயர்கள்சுயமரியாதை இயக்கம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சித்திரா பௌர்ணமிஇதயம்நெடுநல்வாடைபரிபாடல்யாதவர்ஆட்டனத்திநீலகிரி வரையாடுதங்கராசு நடராசன்யூடியூப்நஞ்சுக்கொடி தகர்வுசுற்றுச்சூழல் கல்வி🡆 More