நடிகர்

நடிகர் அல்லது நடிகை (ஆங்கில மொழி: Actor) என்பது ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்கும் நபர் ஆகும்.

இவர்கள் திரைப்படத்திலோ, தொலைக்காட்சியிலோ, நாடகக்கொட்டகை, வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பார்கள். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர்.

நடிகர்
தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசன்.

முன்னதாக பண்டைக் கிரேக்கம் மற்றும் பண்டைய ரோம் காலங்களில் ஆண்கள் மட்டுமே நடிகர்களாக இருந்தனர். பெண்களின் பாத்திரங்கள் பொதுவாக ஆண்கள் அல்லது சிறுவர்களால் நடித்தன. பண்டைய ரோம் காலத்தில் பெண் மேடை கலைஞர்களை அனுமதித்தாலும், அவர்களில் சிறுபான்மையினருக்கு மட்டுமே பேசும் பாகங்கள் வழங்கப்பட்டன.

வரலாறு

மேற்கத்திய வரலாறுகளில் முதன்முதலில் நடிகர் ஒருவர் நடித்ததாகக் கருதப்படுவது கி.மு 534 ஆகும். அன்று கிரேக்க நடிகர் தெஸ்பிஸ், 'தியேட்டர் டியொனிசுஸ்' என்ற நாடகத்தில் வேடமணிந்து முதல் வார்த்தைகளை பேசியபோது நடிப்பின் துவக்கம் நிகழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். அது வரை கதை சொல்லிவந்த பழக்கத்திலிருந்து இது முக்கிய மாற்றமாக அமைந்தது. முதல் நடிகர் பெயர் தெஸ்பிஸ் என்பதாலேயே இன்றும் நடிகர்களை ஆங்கிலத்தில் தெஸ்பியன்ஸ் எனக் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் சூழ்நிலை

சங்க கால முத்தமிழில் நாடகம் ஒன்றாக அமைந்துள்ளதால் பழங்காலத்திலிருந்தே இத்துறை தமிழகத்தில் நிலை பெற்றிருந்ததை உணரலாம். கூத்து என்ற நாடகமும் நடனமும் இசையும் கலந்த வடிவத்தில் நடிகர்கள் கூத்து கட்டுபவர்கள் என அறியப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் நாடகக்கலைக்கு புத்துயிர் ஊட்டியபோது முதன்மை நடிகர்கள் 'இராஜபார்ட்' என்றும், பெண் வேடமிட்ட ஆண் நடிகர்கள் 'ஸ்த்ரீ பார்ட்' எனவும் எதிர்மறை நாயகர்கள் 'கள்ளபார்ட்' எனவும் அழைக்கப்பட்டனர்.

பெண்ணிய நிலை

ஆங்கிலத்தில் நடிகைகளுக்கு 'Actress' என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனை பெண்ணியவாதிகள் எதிர்த்ததினால் இருபாலரையும் 'Actor' என்றே குறிப்பிடுதல் நவீன மரபாயுள்ளது. பல சமூகங்களில் பெண்கள் நடிப்பது இழிவாகக் கருதப்படுகிறது. இதனாலேயே பெண்கள் வேடங்களையும் ஆண்கள் ஏற்று நடிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குழுவிலேயே பெண் வேடங்களை ஆண்கள் ஏற்று நடித்தனர்.

மேற்கோள்கள்

Tags:

நடிகர் வரலாறுநடிகர் தமிழ் சூழ்நிலைநடிகர் பெண்ணிய நிலைநடிகர் மேற்கோள்கள்நடிகர்ஆங்கில மொழிதிரைப்படம்தொலைக்காட்சிநாடகக்கொட்டகைவானொலி ஒலிபரப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

துரைமுருகன்வினோஜ் பி. செல்வம்துரை வையாபுரிவிஜயநகரப் பேரரசுதிருவிளையாடல் புராணம்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்காளமேகம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகருப்பசாமிமுத்துராமலிங்கத் தேவர்ரஷீத் கான்அருணகிரிநாதர்சின்னம்மைபுதன் (இந்து சமயம்)சன் மைக்ரோசிஸ்டம்ஸ்இராமலிங்க அடிகள்முல்லை (திணை)மீனா (நடிகை)சனீஸ்வரன்சங்க காலம்லோ. முருகன்விளம்பரம்சந்திரயான்-3குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மலேசியாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஆடுபௌத்தம்மருதமலை முருகன் கோயில்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபீப்பாய்மு. களஞ்சியம்குமரி அனந்தன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபாட்டாளி மக்கள் கட்சிஇந்திரா காந்திவாரணம் ஆயிரம் (திரைப்படம்)அரசியல்தமிழ்நாடு காவல்துறைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபால்வினை நோய்கள்கும்பம் (இராசி)நெய்தல் (திணை)பழமொழி நானூறுதமிழ் இலக்கியம்திருமணம்தங்கர் பச்சான்மக்களாட்சிஅத்தி (தாவரம்)சரத்குமார்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்டுவிட்டர்தொழிற்பெயர்ஆந்திரப் பிரதேசம்சவூதி அரேபியாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திராவிடர்கர்ணன் (மகாபாரதம்)நஞ்சுக்கொடி தகர்வுபழனி முருகன் கோவில்நன்னூல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நாயக்கர்அருந்ததியர்வைப்புத்தொகை (தேர்தல்)விடை (இலக்கணம்)விபுலாநந்தர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)கருப்பைசெவ்வாய் (கோள்)கண்ணாடி விரியன்தமிழ்ப் புத்தாண்டுமுகம்மது நபியின் இறுதிப் பேருரைவிஷ்ணுமூசாவேலூர் மக்களவைத் தொகுதிவால்வெள்ளிஇராபர்ட்டு கால்டுவெல்🡆 More