டென்மார்க்: வட ஐரோப்பிய நாடு

டென்மார்க் (Denmark, அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனியம்: Kongeriget Danmark, பலுக்கல்  (ⓘ)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராச்சியம் ஆகும்.

இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் (16,638.69 sq mi) ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.

டென்மார்க் இராச்சியம்
Kongeriget Danmark
கொடி of டென்மார்க்
கொடி
சின்னம் of டென்மார்க்
சின்னம்
நாட்டுப்பண்: Der er et yndigt land
ஓர் அழகான நாடு உள்ளது

Kong Christian stod ved højen mast
ஐரோப்பா (கடும் சாம்பல்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (இளம் பச்சை) டென்மார்க்கின் (கடும் பச்சை) அமைவிடம்
ஐரோப்பா (கடும் சாம்பல்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (இளம் பச்சை) டென்மார்க்கின் (கடும் பச்சை) அமைவிடம்
அமைவிடம்: டென்மார்க் இராச்சியம்: கிறீன்லாந்து, பரோயே தீவுகள் (வட்டமிடப்பட்டவை), மற்றும் டென்மார்க்.
அமைவிடம்: டென்மார்க் இராச்சியம்: கிறீன்லாந்து, பரோயே தீவுகள் (வட்டமிடப்பட்டவை), மற்றும் டென்மார்க்.
தலைநகரம்கோபனாவன்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)டேனியம்
பிராந்திய மொழிகள்
சமயம்
டென்மார்க் திருச்சபை
மக்கள்
  • டேனியர்
  • டேன்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்ற
அரசியல்சட்ட முடியாட்சி
• மன்னர்
பத்தாம் பிரெடெரிக்
• பிரதமர்
மெட்டா பிரெடெரிக்சென்
சட்டமன்றம்நாடாளுமன்றம் (ஃபோல்க்திங்)
வரலாறு
• அமைவு
அண். 10ம் நூற்றாண்டு
• அரசமைப்புச் சட்டம்
5 சூன் 1849
• டேனிய ஆளுமை
24 மார்ச் 1948
பரப்பு
• டென்மார்க்
42,925.46 km2 (16,573.61 sq mi) (133வது)
• கிரீன்லாந்து
2,166,086 km2 (836,330 sq mi)
• பரோ தீவுகள்
1,399 km2 (540.16 sq mi)
மக்கள் தொகை
• சனவரி 2016 மதிப்பிடு
5,707,251 (113வது)
• கிரீன்லாந்து
56,114
• பரோ தீவுகள்
49,079
• அடர்த்தி (டென்மார்க்)
132.96/km2 (344.4/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2015 மதிப்பீடு
• மொத்தம்
$257.148 பில். (52வது)
• தலைவிகிதம்
$45,435 (19வது)
மொ.உ.உ. (பெயரளவு)2015 மதிப்பீடு
• மொத்தம்
$291.043 பில். (34வது)
• தலைவிகிதம்
$51,424 (6வது)
ஜினி (2014)negative increase 27.5
தாழ்
மமேசு (2014)டென்மார்க்: வரலாறு, நிர்வாகப் பிரிவு, குறிப்புகள் 0.923
அதியுயர் · 4வது
நாணயம்டேனிய குரோன் (DKK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+45
ஐ.எசு.ஓ 3166 குறியீடுDK
இணையக் குறி.dk

டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர்.

வரலாறு

பொ.ஊ.மு. 1000 இற்கும் பொ.ஊ.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் பொ.ஊ. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு

டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.

பிரதேசங்கள் நகரசபைகளின்
எண்ணிக்கை
டானிஷ் பெயர் தமிழ்ப் பெயர் நிர்வாக நகரம் பெரிய நகரம் (பிரசித்தியானது) மக்கள் தொகை
(அக்டோபர் 2013)
பரப்பளவு
(km²)
குடி அடர்த்தி
(km² இற்கு)
Region Hovedstaden டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் ஹிலெரொட் (Hillerød) கோபனாவன் (Copenhagen) 1,747,596 2,568.29 680.45 29
Region Midtjylland டென்மார்க்கின் மத்திய பிரதேசம் விபோ (Viborg) ஓகூஸ் (Aarhus) 1,276,604 13,095.80 97.48 19
Region Nordjylland டென்மார்க்கின் வட பிரதேசம் ஒல்போ (Aalborg) ஒல்போ (Aalborg) 580,886 7,907.09 73.46 11
Region Sjælland சீலாந்துப் பிரதேசம் சொரோ (Sorø) ரொஸ்கிலே (Roskilde) 816,460 7,268.75 112.32 17
Region Syddanmark டென்மார்க்கின் தென் பிரதேசம் வைலே (Vejle) ஓடென்ஸ் (Odense) 1,201,955 12,132.21 99.07 22

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

டென்மார்க் வரலாறுடென்மார்க் நிர்வாகப் பிரிவுடென்மார்க் குறிப்புகள்டென்மார்க் மேற்கோள்கள்டென்மார்க்en:Wikipedia:IPA for Danishஐரோப்பாகிரீன்லாந்துகோப்பன்ஹேகன்சதுர கிலோமீட்டர்டேனிய மொழிதலைநகரம்தீபகற்பம்நாடுபடிமம்:Kongeriget Danmark.oggபரோயே தீவுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தினகரன் (இந்தியா)வல்லினம் மிகும் இடங்கள்பல்லவர்அக்கி அம்மைநாடார்குண்டலகேசிராணுவ வீரன் (திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)நயன்தாராமயில்விந்துசெய்யுளிசை அளபெடைஅன்னி பெசண்ட்அறுபது ஆண்டுகள்எட்டுத்தொகை தொகுப்புதேவநேயப் பாவாணர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழர் நிலத்திணைகள்பரிபாடல்திருவிழாவினைச்சொல்கபிலர் (சங்ககாலம்)தேசிய அறிவியல் நாள் (இந்தியா)திருவாய்மொழிஎயிட்சுநீர்நிலைவாதுமைக் கொட்டைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்திய அஞ்சல் துறைதிருமலை (திரைப்படம்)ந. பிச்சமூர்த்திதிருநாவுக்கரசு நாயனார்இந்தியன் (1996 திரைப்படம்)அண்ணா நூற்றாண்டு நூலகம்வினையெச்சம்ஆசாரக்கோவைதமிழர் சமையல்வெ. இறையன்புதங்கம் தென்னரசுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பழமுதிர்சோலை முருகன் கோயில்அழகர் கோவில்இந்தியாவில் இட ஒதுக்கீடுபனிக்குட நீர்பகவத் கீதைபாரதிதாசன்வேலுப்பிள்ளை பிரபாகரன்தேசிக விநாயகம் பிள்ளைகுறுந்தொகைகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்நான்மணிக்கடிகைநாஞ்சில் சம்பத்மஞ்சுளா விஜயகுமார்வாழைப்பழம்முத்துராமலிங்கத் தேவர்வாட்சப்கோனியம்மன் கோயில்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்மண்டல துணை வட்டாட்சியர்அஜித் குமார்இந்திய தண்டனைச் சட்டம்கா. ந. அண்ணாதுரைசெவ்வாய் (கோள்)சங்க காலம்எடுத்துக்காட்டு உவமையணிநாம் தமிழர் கட்சிஐம்பூதங்கள்முகம்மது பின் துக்ளக்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சூபித்துவம்கொன்றை வேந்தன்ஆய்த எழுத்துஆல்பர்ட் ஐன்ஸ்டைன்பல்லடம்பிரீத்தா விஜயகுமார்போதைப்பொருள்இரட்டைமலை சீனிவாசன்🡆 More