எலான் மசுக்: அமெரிக்க தொழில் அதிபர்

எலான் மசுக் (Elon Reeve Musk, பிறப்பு: சூன் 28, 1971) தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார்.

இவர் தற்போது எசுபேசுஎக்சு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

எலான் மசுக்
எலான் மசுக்: பின்புலமும் கல்வியும், தொழிற் பணிகள், புதிய திட்டங்கள்
2018ல் எலான் மசுக்
பிறப்புஎலொன் ஆர். மஸ்க்
சூன் 28, 1971 (1971-06-28) (அகவை 52)
பிரிட்டோரியா, டிரான்ஸ்வால், தென் ஆப்பிரிக்கா
குடியுரிமை
  • தென் ஆப்பிரிக்கா (1971–தற்போதும்)
  • கனடா (1971–தற்போதும்)
  • அமெரிக்கா (2002–தற்போதும்)
கல்விபென்சில்வேனியா பல்கலைக்கழகம் (BS, BA)
படித்த கல்வி நிறுவனங்கள்குயின்ஸ் பல்கலைகழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (B.S. பொருளாதாரம், B.S. இயற்பியல்)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஎசுபேசுஎக்சு, பேபால், டெஸ்லா மோட்டார்ஸ், ஹைப்பர்லூப், ஜிப்2, சோலார் சிட்டி ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவனர்.
துணைவர்கிரிம்ஸ் (2018–2021)
வாழ்க்கைத்
துணை
  • ஜச்டீன் மசுக்
    (தி. 2000; ம.மு. 2008)
  • தலுலாக் ரிலெய்
    (தி. 2010; ம.மு. 2012)
  • (தி. 2013; ம.மு. 2016)
பிள்ளைகள்10
உறவினர்கள்
  • டோஸ்கா மஸ்க் (சகோதரி)
  • கிம்பல் மஸ்க் (சகோதரன்)
  • லிண்டன் ரைவ் (உறவினர்)
கையொப்பம்எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், மற்றும் ஜிப்2 ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர் ஆவார். மஸ்க் அவற்றின் இணை நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். திசம்பர் 2022 நிலவரப்படி, US$169.1 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.

பின்புலமும் கல்வியும்

எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர்; தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். பன்னிரண்டு அகவையில் இருக்கும்போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு, அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.

தொழிற் பணிகள்

எலான் மசுக்: பின்புலமும் கல்வியும், தொழிற் பணிகள், புதிய திட்டங்கள் 
  • 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.
  • ஜிப்2 குழுமத்தைத் தொடங்கி நடத்திச் சில காலம் கழித்து விற்றார்.
  • எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை 1999இல் தொடங்கினார்.
  • 2002 இல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும், 2003 இல் டெஸ்லா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார்.
  • 2012 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார்.
  • 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.

வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும்; அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மசுக்.

பிற கூட்டாளிகளுடன் இணைந்து எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள் பிரபலமாய் விற்பனை ஆயின. அமெரிக்க மகிழுந்துகள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.

புதிய திட்டங்கள்

எலான் மஸ்க் 2013 இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்தை முன்வைத்து அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி பெரு நகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும். வானுர்தி, தொடர்வண்டி ஆகிய ஊர்திகளை விட வேகமாகச் செல்ல முடியும். இந்த் திட்டம் நிறைவேற 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.

பெற்ற பட்டங்கள்

யேல் பல்கலைக்கழகம், சுர்ரே பல்கலைக்கழகம், டிசைன் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் எலானுக்கு மதிப்புறு பட்டங்கள் வழங்கி கௌரவித்தன.

மேற்கோள்கள்

Tags:

எலான் மசுக் பின்புலமும் கல்வியும்எலான் மசுக் தொழிற் பணிகள்எலான் மசுக் புதிய திட்டங்கள்எலான் மசுக் பெற்ற பட்டங்கள்எலான் மசுக் மேற்கோள்கள்எலான் மசுக்எசுபேசுஎக்சுடெஸ்லா மோட்டார்ஸ்தென் ஆப்பிரிக்காமுதன்மை செயல் அதிகாரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்புசீவக சிந்தாமணிதமிழர் பண்பாடுமுலாம் பழம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்விண்ணைத்தாண்டி வருவாயாபட்டத்து யானை (திரைப்படம்)தாவரம்காரைக்கால் அம்மையார்பழனிவாட்சப்கலிங்கத்துப்பரணிகண்ணகிகோயம்புத்தூர்ஆண்டாள்முக்கூடற் பள்ளுவிஜய் (நடிகர்)பூரான்தற்கொலை முறைகள்கண்டம்சிவாஜி கணேசன்வேளாண்மைதேனி மக்களவைத் தொகுதிஅவுரிநெல்லிசுரதாசைவத் திருமணச் சடங்குஅறுசுவைமண்ணீரல்சமணம்கீழடி அகழாய்வு மையம்தமிழ்ஒளிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)இந்தியன் பிரீமியர் லீக்பெண் தமிழ்ப் பெயர்கள்மயக்கம் என்னபால் (இலக்கணம்)ஹாட் ஸ்டார்குண்டூர் காரம்பரதநாட்டியம்தொகைநிலைத் தொடர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வடிவேலு (நடிகர்)திராவிடர்உ. வே. சாமிநாதையர்விந்துமாம்பழம்திராவிட இயக்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அரவிந்த் கெஜ்ரிவால்புணர்ச்சி (இலக்கணம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்இலங்கைபொருநராற்றுப்படைமக்களவை (இந்தியா)இராவண காவியம்திருவாசகம்மாடுசொல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்நஞ்சுக்கொடி தகர்வுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சாருக் கான்செயந்திர சரசுவதிமூலம் (நோய்)ரெட் (2002 திரைப்படம்)அதியமான் நெடுமான் அஞ்சியானைக்கால் நோய்உயிர்மெய் எழுத்துகள்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇராகுல் காந்திகுமரிக்கண்டம்சித்தர்எஸ். ஜானகிபெரியாழ்வார்அழகிய தமிழ்மகன்திரைப்படம்வன்னியர்🡆 More