நெல்லை கண்ணன்: தமிழக பேச்சாளர்

நெல்லை கண்ணன் (27 சனவரி 1945 – 18 ஆகத்து 2022) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்: வாழ்க்கைக் குறிப்பு, கல்வி, அரசியல்
பிறப்புநெல்லை கண்ணன்
(1945-01-27)சனவரி 27, 1945
திருநெல்வேலி, தமிழ்நாடு
இறப்புஆகத்து 18, 2022(2022-08-18) (அகவை 77)
திருநெல்வேலி, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்தமிழ்க்கடல்
பணிபேச்சாளர்
பட்டிமன்ற நடுவர்
பெற்றோர்ந.சு.சுப்பையா பிள்ளை, முத்து இலக்குமி

வாழ்க்கைக் குறிப்பு

நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை கண்ணன் நெ.மாலதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவரான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளரும் ஆவார். இளையவரான ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளர்.

கல்வி

நெல்லை கண்ணன் பல்கலைக்கழக புதுமுக வகுப்பு (Pre University Course) வரை பயின்றவர். அதில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் தம் தந்தையிடம் தமிழ் பயின்றார்.

அரசியல்

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலப் பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அப்பொழுது அங்கு தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டவர் மு.கருணாநிதி

நூல்கள்

நெல்லைக் கண்ணன் பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்:

  1. குறுக்குத்துறை ரகசியங்கள் - 1 (கட்டுரை)
  2. குறுக்குத்துறை ரகசியங்கள் - 2 (கட்டுரை)
  3. வடிவுடை காந்திமதியே (கவிதை)
  4. காதல்செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் (கவிதை)
  5. திக்கனைத்தும் சடைவீசி (கவிதை)
  6. பழம்பாடல் புதுப்பாட்டு (கவிதை)

வெளிநாட்டுப் பயணம்

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, குவைத், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

கைது நடவடிக்கை

2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில், (திருநெல்வேலி) நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இழிவாகப் பேசி, இசுலாமியர்களிடம் வன்மத்தை தூண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினர் 2020 சனவரி 1 அன்று இரவில் நெல்லை கண்ணனை பெரம்பலூரில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை சனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

விருதுகள்

மறைவு

நெல்லை கண்ணன் 2022 ஆகஸ்ட் 18 அன்று உடல்நலக்குறைவால் தனது 77வது அகவையில் காலமானார்.

நாட்டுடமை

நெல்லை கண்ணனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நெல்லை கண்ணன் வாழ்க்கைக் குறிப்புநெல்லை கண்ணன் கல்விநெல்லை கண்ணன் அரசியல்நெல்லை கண்ணன் நூல்கள்நெல்லை கண்ணன் வெளிநாட்டுப் பயணம்நெல்லை கண்ணன் கைது நடவடிக்கைநெல்லை கண்ணன் விருதுகள்நெல்லை கண்ணன் மறைவுநெல்லை கண்ணன் நாட்டுடமைநெல்லை கண்ணன் மேற்கோள்கள்நெல்லை கண்ணன் வெளி இணைப்புகள்நெல்லை கண்ணன்பட்டிமன்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொருளியல் சிந்தனையின் வரலாறுபஞ்சபூதத் தலங்கள்இந்திய நிதி ஆணையம்திரைப்படம்இயற்கை வளம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்அம்பிகா (நடிகை)நெடுநல்வாடைகா. காளிமுத்துதமிழக வரலாறுதிருநெல்வேலிகஞ்சாமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஆரணி மக்களவைத் தொகுதிபத்து தலதிருவிளையாடல் புராணம்ராதிகா சரத்குமார்இந்திய சமூக ஜனநாயகக் கட்சிபொது ஊழிபொதுவுடைமை60 வயது மாநிறம்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துசெம்மொழிதிருப்பாவைமதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுபாஷ் சந்திர போஸ்தற்கொலை முறைகள்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யுகம்கஜினி (திரைப்படம்)செந்தாமரை (நடிகர்)சித்தார்த்உவமையணிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)கனிமொழி கருணாநிதிவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைடி. டி. வி. தினகரன்உயிர்மெய் எழுத்துகள்திராவிட மொழிக் குடும்பம்முக்குலத்தோர்பார்க்கவகுலம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தீபிகா பள்ளிக்கல்நாடாளுமன்றம்ஆனந்த விகடன்சாரைப்பாம்புசிறுநீரகம்தொல். திருமாவளவன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வி.ஐ.பி (திரைப்படம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)விபுலாநந்தர்தமிழ்நாடு சட்டப் பேரவைதிருக்குறள்பட்டினப் பாலைமகேந்திரசிங் தோனிஇன்ஸ்ட்டாகிராம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அகரவரிசைதமிழச்சி தங்கப்பாண்டியன்விந்துசுடலை மாடன்பூப்புனித நீராட்டு விழாவிண்டோசு எக்சு. பி.இந்திய ரிசர்வ் வங்கிநாடார்நாயன்மார்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்சித்ரா பௌர்ணமிசப்ஜா விதைபெரும்பாணாற்றுப்படைவடிவேலு (நடிகர்)மாணிக்கம் தாகூர்இயோசிநாடிசீரகம்🡆 More