நடுநிலக்கடல் சார் வானிலை

நடுநிலக்கடல்சார் வானிலை (Mediterranean climate) அல்லது உலர் கோடை வானிலை மழைமிகு குளிர்காலத்தையும் உலர்ந்த கோடைக்காலத்தையும் கொண்ட வானிலையாகும்.

நடுநிலக்கடல் வடிநிலத்தை ஒட்டி இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டாலும் பொதுவழக்கில் இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெரும்பான்மையான கலிபோர்னியா, மேற்கு, தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகள், தென்மேற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு, நடு ஆசியாவின் சில பகுதிகள், மத்திய சிலி போன்ற புவியின் பிற பகுதிகளையும் குறிக்கும். இந்த வானிலை நிலவுமிடங்கள் பொதுவாக கண்டங்களின் மேற்கு கடலோரங்களில் நிலநடுக்கோட்டிற்கு கிட்டத்தட்ட 30 முதல் 45 பாகைகள் வடக்கிலும் தெற்கிலும் காணப்படுகின்றன.

நடுநிலக்கடல் சார் வானிலை
நடுநிலக்கடல் சார் வானிலை நிலவும் மண்டலங்கள்
  வெப்பமிகு கோடை நடுநிலக்கடல் வானிலை (Csa)
  மிதவெப்ப-கோடை நடுநிலக்கடல் வானிலை (Csb)
நடுநிலக்கடல் சார் வானிலை
நடுநிலக்கடல் சார் வானிலை
காத்தலோனியாவின் கோஸ்டா பிராவா நடுநிலக்கடலோரப் பகுதி

இந்த வானிலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக இல்லாத குறும்புதர்கள் (நடுநிலக்கடல் பகுதியில் கார்ரிகு, கலிபோர்னியாவில் சப்பார்ரல், தென்னாபிரிக்காவில் பின்போசு , சிலியில் சிலியன் இசுக்ரப்) வளர்கின்றன. இங்கு விளையும் "நடுநிலக்கடல்சார் மும்மூர்த்தி" எனப்படும் பாரம்பரிய உணவுகளான கோதுமை, திராட்சை மற்றும் ஆலிவ் மிகவும் அறியப்பட்டவை.

இந்த வானிலை உள்ள புகழ்பெற்ற நகரங்களாக நடுநிலக்கடல் பகுதியில் ஏதென்ஸ், அல்ஜியர்ஸ், பார்செலோனா, பெய்ரூத், இசுமீர், எருசலேம், மர்சேய், உரோம், வாலேன்சியா, தூனிஸ் ஆகியவையும் மற்ற பகுதிகளில் அடிலெயிட், கேப் டவுன், காசாபிளாங்கா, துசான்பே, லாஸ் ஏஞ்சலஸ், லிஸ்பன், பேர்த், சான் பிரான்சிஸ்கோ, சான் டியேகோ (சிலி), தாஷ்கந்து ஆகியவையும் உள்ளன.

வெளி இணைப்புகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகலிபோர்னியாசிலிதென்னாப்பிரிக்காதென்மேற்கு ஆசியாதெற்கு ஆஸ்திரேலியாநடு ஆசியாநடுநிலக் கடல்நிலநடுக் கோடுமேற்கு ஆஸ்திரேலியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைபதினெண் கீழ்க்கணக்குகீர்த்தி சுரேஷ்பி. காளியம்மாள்ஆந்திரப் பிரதேசம்சங்க காலப் புலவர்கள்விருந்தோம்பல்பெண்ணியம்முதற் பக்கம்திவ்யா துரைசாமிஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்தமிழ் இலக்கணம்நனிசைவம்அவதாரம்நீரிழிவு நோய்சுய இன்பம்முத்தரையர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்அணி இலக்கணம்நெடுநல்வாடைஅகநானூறுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சாமி (திரைப்படம்)அண்ணாமலை குப்புசாமிபெரியபுராணம்பேகன்தமிழக வெற்றிக் கழகம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல்திருக்குறள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இயேசு காவியம்பெண்களின் உரிமைகள்இந்திய ரூபாய் நாணயங்கள்வளி மாசடைதல்இலைஐஞ்சிறு காப்பியங்கள்ஓரிபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)அக்கி அம்மைதென்காசி மக்களவைத் தொகுதிசேக்கிழார்பறவைபாசிசம்எல். முருகன்ஆசாரக்கோவைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019விசயகாந்துபகத் பாசில்நயன்தாராபாவலரேறு பெருஞ்சித்திரனார்காளமேகம்மகாவீரர்மு. வரதராசன்இந்திய தேசியக் கொடிநற்றிணைசுந்தரமூர்த்தி நாயனார்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நாடாளுமன்ற உறுப்பினர்பறவைக் காய்ச்சல்குறுந்தொகைகடையெழு வள்ளல்கள்ஏப்ரல் 22தியாகராஜ பாகவதர்சிவபெருமானின் பெயர் பட்டியல்உத்தரகோசமங்கைகுலசேகர ஆழ்வார்ஆண்குறிவேலு நாச்சியார்நவரத்தினங்கள்காஞ்சிபுரம்சிவன்தென் சென்னை மக்களவைத் தொகுதிஊராட்சி ஒன்றியம்தினேஷ் கார்த்திக்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)கோயில்இளங்கோவடிகள்இந்தியத் தேர்தல்கள் 2024🡆 More