இந்தியாவில் ஊழல்

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை.

அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் ட்ரான்சிபரன்சி( ஒழிவு மறைவற்ற) மார்க்சிய பாஷையில் விஞ்ஞானப்பூர்வமான வழிமுறை இன்டர்நேஷனல் (Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் மக்கள் மத்தியில் முதல் அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் 2008 ஆய்வில், 40% இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது ஒரு தொடர்பை பயன்படுத்தி பொது அலுவலகத்தில் வேலையை செய்து முடிப்பதில் முதல் கையூட்டு கொடுக்க அனுபவம் பெற்றுள்ளனர், என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல்
திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் 2005 ஆய்வின் அடிப்படையிலான இந்தியா முழுவதும் ஒப்புமையில் ஊழல்.

2011 ல் இந்தியா ட்ரான்சிபரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளுள் 95 வது இடத்தில் இந்தியா இருந்தது.

இந்திய அரசாங்கம் இயற்றிய சில சமூக செலவு திட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் திட்டங்கள் ஊழலுக்கான மிகப்பெரிய (அடிப்படை காரணம்)மூலங்கள் ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதார திட்டம் ஆகியவை உதாரணங்கள் ஆகும். நெடுஞ்சாலைகளில் உள்ள பல ஒழுங்குமுறை மற்றும் போலீஸ் நிறுத்தங்களுக்கு, போக்குவரத்து சார்ந்த தொழில்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்தியாவிலுள்ள ஊழல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன.குற்றவிளக்கம்; (இந்திய அரசின் சட்டங்களுக்கு புறம்பான முறையில் அந்நிய நாட்டில் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் முதலீடுகள் செய்துள்ளவர்கள்) எனினும் சுவிஸ் அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டுக்களை ஒரு முழுமையான கட்டுருவாக்கம் மற்றும் தவறானது என்று கூறுகிறார்கள்.

அதிக கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் அமைப்புகள், பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒளிபுகா அதிகாரத்துவம் மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை, வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களில் அடங்கும். ஊழலின் அளவு மற்றும் ஊழலை குறைக்க பல்வேறு மாநில அரசின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

அரசு ஊழியர் தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக செய்யவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியாக ஊதியம் அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7ன் கீழ் ஊழல் எனும் குற்றச்செயலாகும்.

ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்ய அல்லது செய்யவிடாமல் தடுக்க, அரசு ஊழியர்க்கு கையூட்டு வழங்குவது அல்லது பெறுவது, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 8 மற்றும் 9ன் கீழ் ஊழல் ஆகும்.

ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 10ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார்.

அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தல் போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டம், 1988 பிரிவு 13ன்படி ஊழல் செய்தவர் ஆகிறார்.

வரலாறு

இந்தியாவில் ஊழல் 
17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, ஊழல் ஒரு கடுமையான பிரச்சனையாக இருந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பல விவாதங்களை ஆங்கிலேய நாடாளுமன்றம் கண்டது. பல கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு லண்டன் கோபுரத்திற்கு அனுப்பப்பட்டனர். இப்படிப்பட்ட நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்பின் அட்டையை இப்படம் காட்டுகிறது.

இந்திய பொருளாதாரம் 1950 இல் இருந்து 1980 வரை ஒரு முழு தலைமுறைக்கு சோசியலிசம் ஈர்க்கப்பட்ட கொள்கைகளின் கீழ் இருந்தது. 1960 களில், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியின்படி உரிமம் ராஜ் ஊழலுக்கு மூலமாக இருந்தது. அக்டோபர் 1993 ல் முன்னாள் இந்திய மத்திய உள்துறை செயலாளர், என்.என். வோராவால்(N.N. Vohra) சமர்ப்பிக்கப்பட்ட வோராவின் அறிக்கை, குற்றவாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே உள்ள உறவினால் வரும் பிரச்சனைகளை பற்றி கூறியது. இந்த அறிக்கை கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கத்தை இயக்கும் குற்றவாளி கும்பல்களை எடுத்துக்காட்டியது. மேலும் இந்த அறிக்கை, குற்றவாளி கும்பல்களுக்கு அரசியல்வாதிகளால், அரசியல் கட்சிகளால் மற்றும் அரசு செயலர்களால் கொடுக்கப்படும் ஆதரவை விவாதித்தது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய பிரச்னையாகவும் தடங்கலாகவும் இருப்பதற்கு ஊழலும், அரசியலில் மாற்றமின்மையும் காரணங்களாகும்.

அரசியல்

டிசம்பர் 2008 இல், 523 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 120 நபர்களுக்கு மேல் குற்றவியல் குற்றச்சாட்டு இருந்தது. 2010 இல் இருந்து நடந்த மிக பெரிய ஊழல்களுக்கும், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் போன்ற மிக உயர் அரசு நிலைகளுக்கும் தொடர்புகள் இருந்தது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு, 2010 காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடு, கர்நாடக சுரங்க ஊழல் இதன் உதாரணங்கள் ஆகும்.

அதிகாரத்துவம்

வரி மற்றும் இலஞ்சம் மாநில எல்லைகளுக்கு இடையே வழக்கமானது; லாரி உரிமையாளர்கள் ஆண்டுதோறும் 22,200 கோடி (4.5 பில்லியன்) லஞ்சம் செலுத்துகிறார்கள் என்று திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் மதிப்பீட்டுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டு அதிகாரிகள் 43% மற்றும் போலீஸ் 45% லஞ்சம் பணத்தை பங்கு போட்டுக்கொள்கின்றனர். சோதனை சாவடிகள் மற்றும் நுழைவு புள்ளிகளில் ஒரு வாகனம் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வரை நிறுத்திவைக்கப்படுகிறது. அத்தகைய நிறுத்தங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் சமையங்களில், அரசு அதிகாரிகளால் பணம் பிடுங்கப்படுகிறது. இந்த நிறுத்தங்களால் ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு ஒரு முக்கியமான தேசிய கவலை ஆகும். கட்டாய தாமதங்கள் தவிர்க்கப்பட்டால், டிரக் பயணங்கள் எண்ணிக்கை 40% அதிகரிக்கும். ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதற்கு தொடர்புடைய ஒழுங்குமுறை நிறுத்தம் நீக்கப்பட்டால், ஒரு 2007 உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு தில்லியிலிருந்து மும்பை பயணம் பயண நேரம், பயணம் ஒன்றிற்கு 2 நாட்கள் குறையும். ஆசியாவின் முக்கிய பொருளாதாரங்களைப் பற்றிய 2009 ஆய்வில், சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், மலேசியா, தைவான், வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய அதிகாரத்துவம் குறைந்த செயல் திறன் கொண்டதாக இருக்கிறது.

நிலம் மற்றும் சொத்து

அதிகாரிகள், மாநில சொத்தை திருடுவதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும், நகராட்சி மற்றும் இதர அரசாங்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், நீதித்துறை அதிகாரிகள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் சட்டவிரோத வழிகளில் நிலத்தை பெற்று, மேம்படுத்தி விற்கிறார்கள்.

ஒப்பந்த செயல்முறைகள் மற்றும் ஒப்பந்தம் வழங்குதல்

ஒரு 2006 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, உத்தர பிரதேசத்தில், சாலை கட்டுவது போன்ற மாநில நிதி உதவி பெற்ற கட்டுமான நடவடிக்கைகள், ஊழல் மிகுந்த பொது வேலை அதிகாரிகளின் குழுக்கள், பொருட்கள் சப்ளையர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் ஆதிக்கத்தில் இருந்தன. அரசு நிதியுதவி பெற்ற திட்டங்களுக்கு உத்தர பிரதேசத்தில் மட்டும் பிரச்சனைகள் வரவில்லை. உலக வங்கியின்படி, உதவி திட்டங்கள் அனைத்தும் ஊழலிலும் மோசமான நிர்வாகத்திலும் மூழ்கி இருக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டாக, ஏழைகளுக்கு வழங்கப்படும் தானியங்களில் 40 சதவீதம் மட்டுமே அதன் குறிப்பிட்ட இலக்கை சென்று அடைகிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில், ஆகஸ்ட் 25, 2005 அன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) செயலாக்கப்பட்டது. செயல்படத் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பின்னர், 2011 ல், இந்தியாவில் இருக்கும் மற்ற வறுமை குறைப்பு திட்டங்கலை விட இத்திட்டம் எவ்விதத்திலும் அதிக பயனளிக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது. MGNREGA வில் சிறந்த நோக்கங்கள் இருந்த போதிலும், போலி கிராமப்புற ஊழியர்கள், இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உள்கட்டமைப்பு தரம் சரியில்லாமை, ஊழல் மிகுந்த அதிகாரிகள் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சர்ச்சைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

மருத்துவம்

அரசு மருத்துவமனைகளிலும் ஊழல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மருத்துவரை பார்ப்பதற்கு, ஆலோசனை பெறுவதற்கு இலஞ்சம் வாங்குவது, போலி மருந்துகள் விற்பது ஆகியவை அடங்கும். தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது ஒரு சுகாதாரம் தொடர்பான அரசாங்கத் திட்டமாகும். இத்திட்டத்தை இந்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் 2005 ல் இருந்து இயக்கி வருகிறது. இந்திய அரசாங்கம் 2004-05 ல் ரூபாய் 27.700 கோடி இத்திட்டத்திற்காக செலவு செய்தது. மேலும், இத்திட்டத்திற்கான செலவை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(gross domestic product) சுமார் 1 சதவீதத்திற்கு ஒவ்வொரு ஆண்டாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் மேலும் ஒரு பெரிய அளவிலான ஊழல் சூழ்ந்துள்ளது. பல உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் பலர் மர்மமான முறையில் இறந்தனர் (சிறையில் இருந்த போதிலும் ஒருவர் இறந்தார்). இத்திட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் மோசடியால் சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

வருமான வரி துறை

இந்திய வருமான வரி துறை அதிகாரிகள் இலஞ்சத்திற்காக, வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுடன் கூட்டு சேர்வது பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கனிம வளங்களை பகிர்ந்தளிப்பதில் சீர்கேடு

இந்தியாவில் ஊழல் 
புனேவில் ஊழலுக்கு எதிரான போராட்டம்.

ஆகஸ்ட் 2011 ஆரம்பத்தில், இரும்பு தாது சுரங்க முறைகேடு, இந்திய ஊடகங்களின் கவனத்தை பெற்றது. செப்டம்பர் 2011 இல், ஜனார்தனா ரெட்டி - கர்நாடகாவின் சட்டமன்ற உறுப்பினர் - அவரது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் சட்டவிரோதமாக இரும்பு தாது வெட்டி எடுத்ததற்காகவும் ஊழலுக்காகவும் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனம் கர்நாடக மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ எவ்வித வரியும் கட்டாமல் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள இரும்பு தாதுவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ததாகவும், கரிபியன் மற்றும் வடக்கு அட்லாண்டிக் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட, ரெட்டியின் நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்கள் பணம் போடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அரசு சுரங்கத் துறை அதிகாரிகளிலிருந்து துறைமுக அதிகாரிகள் வரை இவருக்கு உடந்தையாக இருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் சீனாவிற்கு சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்பு தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதற்கு மாத இலஞ்சம் பெற்றனர்.

ஓட்டுனர் உரிமம்

2004 மற்றும் 2005 இடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை ஒரு பயங்கரமாக உருக்குலைந்த அதிகாரத்துவ செயல் எனவும் ஒருவருக்கு குறைந்த ஓட்டும் திறன் இருந்தாலும் உரிமம் தரப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டது. நிறைய மக்கள் உத்தியோகபூர்வ கட்டணத்திற்கு மேல் குறிப்பிடத்தக்க பணம் செலுத்த தயாராக இருந்தனர். இந்த கூடுதல் கட்டணம் முகவர்கள் வழியாக அதிகாரிகளை சென்றடைந்தன. சராசரி உரிமம் பெறுபவர் ஒருவர், தோராயமாக, உத்தியோகபூர்வ கட்டணமான ரூ 450 யை விட 2.5 மடங்கு அதிகமாக, 1080 ரூபாய் கட்டுகின்றார். இந்த முகவர்களால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தகுதி இல்லாத பலர் சட்டவிரோதமாக உரிமம் பெறுகின்றனர். கணக்கெடுக்கப்பட்ட நபர்களில், தோராயமாக 60% மக்கள் உரிம தேர்வை எடுக்கவில்லை. அவ்வாறு தேர்வு எடுக்காமல் உரிமம் வைத்திருப்பவர்களில் 54% சுயாதீனமான ஓட்டுனர் சோதனையில் தோல்வியடைந்தார்கள். பல ஊழல் மிகுந்த அதிகாரிகள், இந்த ஓட்டுனர் உரிமம் பெரும் முறையில் கூடுதல் தடைகளை உருவாக்கி, முகவர் இல்லாமல் வரும் நபர்களையும் முகவர்களை எடுப்பதற்கு கட்டயப்படுதுகின்றனர்.

இதுவரை

ஊழல் ஆண்டு ஊழல் செய்யப்பட்ட இடம், தொகை செய்தவர்கள் குறிப்பு
இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு 2012 இந்தியா, 1,85,591 கோடி நிலக்கரி அமைச்சகம், தனியார் நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது
வக்பு வாரிய நிலமோசடி 2012 கர்னாடகம், 2,00,000 கோடி 38 காங்கிரஸ் அமைச்சர்கள் வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன மற்றும் விற்கப்பட்டுள்ளன. சிறுபான்மை நல வாரியத்தலைவரான மனிப்பாடியால் 7500 பக்க ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் 2012 உத்தரப்பிரதேசம், 10,000 கோடி மாயாவதி இந்த ஊழலைப்பற்றி விசாரணை நடக்கும் போது 6 மருத்துவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு 2010 இந்தியா, 1,76,000 கோடி நிரா ராடியா, ஆ. ராசா, கனிமொழி, தொலை தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை உரிமம் சட்டத்திற்குப்ப் புறம்பாக குறைந்த கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது
உணவு தானிய ஊழல் 2003 உத்தரப்பிரதேசம், 35,000 கோடி மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஏழைகளுக்கான உணவு தானியத்தை வெளி சந்தையில் விற்றது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை 10 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது
காமன்வெல்த் விளைபாட்டு ஊழல் 2010 இந்தியா, 3,500 கோடி சுரேஷ் கல்மாடி விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் ஊழல் செய்தது.

'இந்தியாவில் ஊழல்: டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ' என்றழைக்கப்படும், பேராசிரியர் விவேக் தேப்ராய் மற்றும் லவீஷ் பண்டாரி எழுதிய புத்தகத்தில் இந்தியாவின் பொது அதிகாரிகள், 92,122 கோடி ரூபாய்($ 18.42 பில்லியன்), அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.26 சதவீதத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறுகின்றார். போக்குவரத்து துறை, ரியல் எஸ்டேட் மற்றும் அரசு சேவைகள் இம்மூன்றில் தான் அதிக படியான ஊழல் நடக்கிறது என்று அப்புத்தகம் கூறுகிறது. 2011இல் KPMG ஆல் நடத்தப்பட்ட ஒர் ஆய்வின் படி இந்திய ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு மற்றும் அரசாங்க சமூக நல திட்டங்கள் மூன்றும் ஊழல் மிகுந்த துறைகள் ஆகும். மேலும், அந்த ஆய்வின் படி, இந்திய பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறை, இம்மூன்றும் மிகக்குறைந்த ஊழல் கொண்ட துறைகள் ஆகும்.

CMS இந்தியா நடத்திய 2010 அறிக்கையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள்தான் ஊழலினால் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூடுதலாக, 2005 முதல் 2010 வரை, ஊழல் கருத்து நாடு முழுவதும் குறைந்திருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

கீழே உள்ள அட்டவணையில் இந்தியாவின் முக்கிய மாநிலங்களும் அவைகளின் ஊழல் எதிர்ப்பு முயற்சியும் ஒப்பிடப்படுகிறது. ஒரு உயர்ந்த குறியீட்டெண் அதிக ஊழல் எதிர்ப்பு முயற்சி மற்றும் ஊழல் வீழ்ச்சியையும் குறிக்கிறது. இந்த அட்டவணையீன் படி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் நிலைமைகள் மோசமடைந்ததுள்ளது, பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுகிறது. 2012 ல், பீகார் மாநிலம், இந்தியாவில் குறைந்த ஊழல் மாநிலமாக மாற்றப்பட்டு விட்டது என்று ஒரு பிபிசி(BBC) செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

முக்கிய மாநிலங்களின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் குறியீடு
மாநிலங்கள் 1990-95 1996-00 2001-05 2006-10
பீகார் 0.41 0.30 0.43 0.88
குஜராத் 0.48 0.57 0,64 0.69
ஆந்திர பிரதேசம் 0.53 0.73 0.55 0.61
பஞ்சாப் 0.32 0.46 0.46 0.60
ஜம்மு & காஷ்மீர் 0.13 0.32 0.17 0.40
ஹரியானா 0.33 0.60 0.31 0.37
இமாச்சல பிரதேசம் 0.26 0.14 0.23 0.35
தமிழ்நாடு 0.19 0.20 0.24 0.29
மத்திய பிரதேசம் 0.23 0.22 0.31 0.29
கர்நாடகா 0.24 0.19 0.20 0.29
ராஜஸ்தான் 0.27 0.23 0.26 0.27
கேரளா 0.16 0.20 0.22 0.27
மகாராஷ்டிரா 0.45 0.29 0.27 0.26
உத்தர பிரதேசம் 0.11 0.11 0.16 0.21
ஒரிசா 0.22 0.16 0.15 0.19
அசாம் 0.21 0.02 0.14 0.17
மேற்கு வங்காளம் 0.11 0.08 0.03 0.01

கருப்புப் பணம்

சட்டவிரோதமாக ஒருவரிடம் பணம் இருந்தால் அது கருப்பு பணம் ஆகும். கருப்பு பணம் இருப்பதற்கு இரண்டு சாத்திய வழிகள் உள்ளன என்று இந்திய அரசு குறிப்பிடுகின்றது. போதை மருந்து வியாபாரம், பயங்கரவாதம், ஊழல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் முதல் வழி ஆகும். சட்டரீதியாக பணம் வந்தாலும், அதை வருமானத்தைதில் காட்டாமலோ வரிகள் கட்டாமலோ இருப்பது இரண்டாவது வழி ஆகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள கருப்பு பணம்

2010 இல் தி இந்து நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையின் படி, சுவிஸ் வங்கிகளில் 1456 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக கறுப்புப் பணத்தை இந்தியர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. "மற்ற உலக நாடுகளின் கருப்புப் பணம் அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தியாவிலிருந்து இருக்கும் கருப்புப்பணம் அதிகமானது" என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் அதன் 2006 ஆம் ஆண்டின் அறிக்கையில் கூறியதாக என்று சில செய்தி அறிக்கைகள் கூறின. எனினும் அந்த சங்கத்தின் சர்வதேச தகவல் தொடர்பு தலைவர் இதை மறுத்தார். சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்திய கறுப்புப் பணத்தின் அளவு நாட்டின் தேசிய கடனை விட 13 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வேறொரு அறிக்கை குறிப்பிட்டது. இந்த குற்றச்சாட்டுக்களையும் சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் மறுத்தது. இந்திய ஊடகங்களும் எதிர் கட்சியினரும் இந்த கருப்புப் பணத்தின் அளவை அடிப்படையே இல்லாமல் அதிகப்படுத்தியுள்ளனர், என்று சுவிஸ் வங்கிகள் சங்கத்தின் ஜேம்ஸ் நேசன்(James Nason) ஒரு பேட்டியில் கூறினார். சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் அது போன்ற ஒரு அறிக்கை வெளியிடவே இல்லை என்று கூறினார்.

நீதித்துறை

திரான்சிபரன்சி இன்டர்நேஷனலின்(Transparency International) படி, இந்தியாவில் நீதித்துறையில் "நீதிமன்ற வழக்குகளை காலதாமதமாக முடிப்பது, நீதிபதி பற்றாக்குறை, மிகவும் சிக்கலான நடைமுறைகள் போன்ற காரணிகளால் ஊழல் நடக்கிறது".

ஆயுதப்படை

இந்திய ஆயுதப்படைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமான படை இவைகளின் மூத்த இராணுவ அதிகாரிகள் சிலர் மேல் ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன. 2000-2010 காலத்தில் நடந்த பல ஊழல்கள் இந்திய இராணுவ புகழுக்கு சேதம் ஏற்படுத்தியது. அரசாங்க சொத்துக்களை மீண்டும் விற்பனை செய்வது, போர் பயணங்களை பித்தலாட்டம் செய்வது, ஆயுத படைகள் பணத்தை கொள்ளையடிப்பது போன்றவைகள் நடந்துள்ளன.

ஊழலுக்கு எதிரான சட்டம்

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளைய ஆங்கில அரசின் இந்திய தண்டனைச் சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால், விடுதலை அடைந்த இந்திய அரசு 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது. பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள்மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதிஉதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழலுக்காக இந்திய பொது ஊழியர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும்:

  • இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1860
  • வருமான வரி சட்டம் வழக்கு பிரிவு, 1961
  • ஊழல் தடுப்பு சட்டம், 1988
  • இரவல் பெயரில் பரிமாற்றங்களை தடுப்பதற்கு, இரவல் பெயரில் பரிமாற்றங்கள் (தடுப்பு) சட்டம், 1988.
  • பணமோசடி தடுப்பு சட்டம், 2002

2005 ஆம் ஆண்டு முதல் ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் (ஒப்புதல் இல்லை) இந்தியா ஒரு உறுப்பினராக உள்ளது. அந்த மாநாடு ஊழலின் வகைகளையும் அவைகளை தடுக்க சில முறைகளையும் குறிப்பிட்டுள்ளது. 2011 லோக்பால் மசோதா, மக்களவையின் முன் நிலுவையில் உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை, விசில் புளோயர் பாதுகாப்பு மசோதாவை(The Whistle Blowers Protection Bill), 2011 நிறைவேற்றியது. இந்த மசோதா இப்போது அதன் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

ஊழல் எதிர்ப்பு போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள்

வருமான வரி புலனாய்வு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் மத்திய புலனாய்வு துறை இவை அனைத்தும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் ஆகும். ஆந்திர பிரதேசம் (ஆந்திர பிரதேசம் ஊழல் எதிர்ப்பு பணியகம்) மற்றும் கர்நாடகா (லோகயுக்தா) போன்ற சில மாநிலங்களில், அவர்களுடைய தனி ஊழல் எதிர்ப்பு முகவர்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளன. "பணத்திற்கு பிணை" மோசடியில், மத்திய புலனாய்வு துறையினர் (சி.பி.ஐ.) ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, ஊழல் எதிர்ப்பு பணியகம் (Anti Corruption Bureau, ஏபிசி), பெரிய அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி தல்லுரி பட்டாபிராம ராவ்(Talluri Pattabhirama Rao) 19 ஜூன் 2012 அன்று, கர்நாடக அமைச்சர் ஜனார்தன ரெட்டியை இலஞ்சம் வாங்கி பிணையில் வெளியேவிட்டதற்காக கைது செய்யப்பட்டார். ஜனார்தன ரெட்டி அவரது சராசரி வருமானத்தை விட பல மடங்கு சொத்து குவித்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியா சிமெண்ட்ஸ், அரசு ஒப்பந்தங்களுக்காக, ரெட்டியின் வணிகங்களில் முதலீடு செய்து வந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஏழு மற்ற நபர்கள் எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள்

ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7, 8, 9 மற்றும் 10ன் கீழ் ஊழல் செய்தவரின் குற்றம் நிருபிக்கப்பட்டால், அபராதத்துடன் அல்லது அபராதம் இன்றியோ குறைந்த பட்சம் ஆறு மாதங்களும், அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13ன் கீழ் ஊதியத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டும், அதிக பட்சம் பத்து ஆண்டுகளும் சிறை தண்டனை உண்டு. மேலும் ஊழலின் மூலம் சேர்த்த அசையும் சொத்துகளையும், அசையாச்சொத்துகளையும் கைப்பற்றவும், முடக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

நம் நாட்டில் சேர்த்த ஊழலின் மூலம் சேர்த்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்தும், பிறகு அதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வருவோர் மீது பணச்சலவைத் தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Launering Act, 2002)ன்படி தண்டணைக்குரிய குற்றமாகும்.

இந்தியாவில் ஊழலுக்கு எதிரான பிற சட்டங்கள்

ஊழல் செய்தவர்கள் கீழ்கண்ட சட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்கள்

  • இந்திய தண்டனைச் சட்டம், 1860 (Indian Penal Code|Indian Penal Code, 1860)
  • ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (Prevention of Corruption Act, 1988)
  • வருமான வரி சட்டம்,1961ன் படி வருமானவரி ஏய்ப்பு வழக்கு தொடரலாம் (Prosecution section of Income Tax Act,1961)
  • இரவல் (பினாமி) பெயரில் சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம், 1988 (The Benami Transactions (Prohibition) Act, 1988 to prohibit benami transactions).
  • பணச்சலவை தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002)
  • அன்னிய செலாவனி மோசடி தடுப்புச் சட்டம்
  • மருந்துகள் மற்றும் உணவு கலப்படத் தடைச் சட்டம்
  • இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986

ஊழலுக்கு எதிரான அரசு அமைப்புகள்

ஊழல் மிகுந்த அரசாங்க மற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக தீவிரமாக போராடும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் பின்வருமாறு உள்ளன:

  • பாரத் ஸ்வாபிமேன் அறக்கட்டளை(Bharat Swabhiman Trust)யோக குரு சுவாமி ராம்தேவ் ஆல் நிறுவப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக, கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒரு பெரும் பிரச்சாரத்தை இயக்கி வருகிறது.
  • 5 வது தூண் (5th pillar) சுழி (பூஜ்ஜியம்) ரூபாய் நோட்டை தயாரித்தது. ஊழல் அதிகாரிகள் இலஞ்சம் கேட்கும்போது அவர்களுக்கு தருவதற்காக இது வடிவமைக்கப்பட்டது.
  • ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption), ஊழலுக்கு எதிராக வேலை செய்ய, பல்வேறு தொழில்களில் இருக்கும் குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். அது தற்போது அன்னா ஹசாரே தலைமையில் இயங்குகிறது.
  • ஜாகோ ரே!(Jaago Re) ஒரு பில்லியன் வோட்டு, டாடா தேயிலை மற்றும் Janaagraha வால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். முதலில் இளைஞர்கள் வாக்காளர் பதிவை அதிகரிக்க போராடியது. அதன் பின்னர், ஊழல் உள்ளிட்ட பிற சமூக பிரச்சினைகளுக்கு எதிராகவும் வேலை செய்தனர்.
  • சமூக வெளிப்படைத்தன்மை, உரிமைகள் மற்றும் நடவடிக்கை கூட்டமைப்பு (அஸ்ட்ரா) கர்நாடகாவில் ஊழலுக்கு எதிராக போராட உருவாக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
  • நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation) (CBI)[1] பரணிடப்பட்டது 2013-12-22 at the வந்தவழி இயந்திரம்
  • தேசிய புலனாய்வு முகமை (இந்தியா) (National Inteligence Agency)
  • நடுவன் விழிப்புணர்வு ஆணையம்(Central Vigilance Commission) (CVC)[2] பரணிடப்பட்டது 2009-12-16 at the வந்தவழி இயந்திரம்
  • இந்திய தலைமை கணக்காயர் ( Controller and Auditor General of India) (CAG)[3]
  • கருப்புப்பணத்தை ஒழிக்க, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் புலனாய்வு அமைப்பு (Central Board of Direct Taxes (CBDT)[4]
  • தமிழ்நாடு மாநில அரசு விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் [Directorate-of-Vigilance-and-754.html[தொடர்பிழந்த இணைப்பு]
  • இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு [5]

கையூட்டு மற்றும் ஊழலுக்கு எதிரான அரசு சாராத நிறுவனங்கள்

இந்தியாவில் ஊழலுக்கான காரணங்கள்

இந்தியாவில் ஊழலை ஊக்குவிக்க பல காரணங்கள் இருப்பதாக உலகின் மிகப்பெரிய தணிக்கை மற்றும் இணக்கம் நிறுவனங்களில் ஒன்றான KPMG அதன் 2011 ஆம் அறிக்கையில் குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையின்படி அதிக வரிகளும், மிக அதிக அதிகாரத்துவ கட்டுப்பாடுகளும் முக்கிய காரணங்கள் ஆகும். இந்தியாவில் நிறைய ஒழுங்குமுறை அமைப்புகள் இருக்கின்றன. அவைகளுக்கு ஒரு தனி நபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ ஏதிலிருந்தும் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை ஊழல்வாதிகள் இலஞ்சம் வாங்குவதற்கு பயன்படுத்திகொள்கிரார்கள். இலஞ்சம் கட்டாமல் இருந்தால் காரியம் தாமதமடைந்து பாதிக்கப்படும். இதற்கு இலஞ்சம் செலுத்துவதே மேல் என்று மக்கள் முடிவெடுக்கிறார்கள். சில சமயங்களில் அதிக வரி கட்டுவதற்கு பதிலாக ஊழல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மிகவும் மலிவாக இருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் 150 நாடுகளில் ஊழலுக்கான மிகப் பெரிய காரணம் ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில், இந்தியாவில், உயர் மூலதன ஆதாயத்தின் வரி, பெரிய அளவிலான ஊழலுக்கு ஊக்குவிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளில் உட்பட பல நாடுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. உலக வரலாற்றில் பல கலாச்சாரங்களிலும் பல நூற்றாண்டுகலாகவும் நடக்கிறது.

வரி விகிதங்கள் மற்றும் ஒழுங்குமுறை சுமைக்கு கூடுதலாக ஒளிபுகா செயல்முறைகளாலும் ஊழல் வாழ்கிறது என்று, KPMG அறிக்கை கூறுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாதது இலஞ்சம் கேட்பவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் இடமளிக்கிறது.

உலகின் பிற நாடுகள் போல, அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகார தேவைகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் வாங்கும் முறைகள், கட்டாய செலவு திட்டங்கள், ஊழல்வாதிகளுக்கு அபராதம் இல்லாமை, வெளிப்படையான சட்டம் மற்றும் நடைமுறைகள் இல்லாமை இவை அனைத்தும் இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களாக, சர்வதேச நாணய நிதியம் (international monetary fund) நடத்திய ஆய்வு ஒன்றில் வீட்டோ டான்சி (Vito Tanzi) கூறுகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இவை அனைத்தும் இந்தியாவில் ஊழல் மற்றும் நிலத்தடி பொருளாதாரத்திற்கான சில காரணங்கள் என்று கண்டுபிடித்துள்ளது.

ஊழலின் விளைவுகள்

KPMG இன் ஓர் அறிக்கையின்படி, "உயர் மட்ட ஊழல் மற்றும் மோசடி இப்போது நாட்டின் நம்பகத்தன்மையை மற்றும் [அதன்] பொருளாதார வளர்ச்சியை தகர்க்க அச்சுறுத்துகிறது".

பொருளாதார கவலைகள்

ஊழல் அதிகாரத்துவ தாமதத்தை மேலும் அதிகரிக்கலாம். திறமையின்மையையும் அதிகப்படுத்தும். இதனால் ஊழல்வாதிகள் மேலும் அதிகமாக இலஞ்சம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. நிறுவன செயல்திறன் பற்றாக்குறைகளால் மூலதனத்தின் பிரைவேட் மார்ஜினால் ப்ரொடக்ட்(private marginal product ) மற்றும் முதலீட்டு விகிதம், இவைகளை குறைக்கிறது. நாட்டின் வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கிறது. லெவின் மற்றும் ரேநேல்ட்(Levine and Renelt), பொருளாதார வளர்ச்சிக்கு முதலீட்டு விகிதம் ஒரு மிக முக்கிய உறுப்பு என்று காட்டினர். அதிகாரத்துவ திறமையின்மை வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, முதலீட்டுகளை தவறான இடத்தில் போடுவது. மேலும், ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கு குறைவான பொருளாதார வளர்ச்சியை ஊழல் உண்டாக்கும்.

குறைந்த ஊழல், உயர் வளர்ச்சி விகிதங்கள்

இந்தியாவில் ஊழலின் நிலை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அளவு போல் குறைவாக இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் 4-5 சதவீதம் முதல் 12-13 சதவீதம் வரை அதிகரிக்கும். ஊழல் காரணமாக ஒரு ஆண்டில் இழந்த இந்திய வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் நிகரானது என்று சி. கே. ப்ரகுஅலாத் (C. K. Prahalad ) மதிப்பிடுகிறார்.

ஊழலின் அளவு இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. ஜூலை 2011 யில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், குஜராத் மாநில அரசாங்கம் மிகவும் கடுமையான இலஞ்சம் ஒழிப்பு விதிகளை வகுத்துள்ளது; இதனால் அதிகாரிகள் இலஞ்சம் கேட்க முடியாது, மற்றும் தொழில் முனைவோர் நிறுவனங்களுக்குள் தலையிடவதில்லை என்று தி எகோநோமிஸ்ட்(The Economist) கூறுகிறது. மிகவும் குறைந்த ஊழல் மற்றும் திறமையான அதிகாரத்துவம் குஜராத் மாநிலத்தில் உள்ளது என்று அவ்வறிக்கை கூறுகிறது. அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம், வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வரும் சில சீனா பகுதிகளுடன் ஒப்பிடும் அளவிற்கு அதிகமாக உள்ளது. மேலும், குஜராத்தின் வளர்ச்சி பிற இந்திய மாநிலங்களின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்துக்கொண்டே இருக்கிறது.

ஊழலுக்காக சிறை சென்றவர்கள்

அரசியல்வாதிகள்

  1. லாலு பிரசாத் யாதவ்
  2. சுரேஷ் கல்மாடி
  3. சுக்ராம்
  4. ஓம்பிரகாஷ் சௌதாலா
  5. மது கோடா
  6. ஜெயலலிதா
  7. பி. எஸ். எடியூரப்பா
  8. ஜெகன் மோகன் ரெட்டி

தொழிலதிபதிகள்

  1. ராமலிங்கராஜூ

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்

வெளி இணைப்புகள்

இதையும் பார்க்க

Tags:

இந்தியாவில் ஊழல் வரலாறுஇந்தியாவில் ஊழல் அரசியல்இந்தியாவில் ஊழல் அதிகாரத்துவம்இந்தியாவில் ஊழல் கருப்புப் பணம்இந்தியாவில் ஊழல் நீதித்துறைஇந்தியாவில் ஊழல் ஆயுதப்படைஇந்தியாவில் ஊழல் ஊழலுக்கு எதிரான சட்டம்இந்தியாவில் ஊழல் ஊழல் எதிர்ப்பு போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள்இந்தியாவில் ஊழல் ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள்இந்தியாவில் ஊழல் இந்தியாவில் ஊழலுக்கு எதிரான பிற சட்டங்கள்இந்தியாவில் ஊழல் ஊழலுக்கு எதிரான அரசு அமைப்புகள்இந்தியாவில் ஊழல் கையூட்டு மற்றும் ஊழலுக்கு எதிரான அரசு சாராத நிறுவனங்கள்இந்தியாவில் ஊழல் இந்தியாவில் ஊழலுக்கான காரணங்கள்இந்தியாவில் ஊழல் ஊழலின் விளைவுகள்இந்தியாவில் ஊழல் ஊழலுக்காக சிறை சென்றவர்கள்இந்தியாவில் ஊழல் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்இந்தியாவில் ஊழல் வெளி இணைப்புகள்இந்தியாவில் ஊழல் இதையும் பார்க்கஇந்தியாவில் ஊழல்இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெருஞ்சீரகம்ஔவையார்தமிழர் பண்பாடுசிறுபாணாற்றுப்படைகட்டுரைஇராகுல் காந்திகேட்டை (பஞ்சாங்கம்)இசுலாம்மரபுச்சொற்கள்இந்திய ரூபாய்அருணகிரிநாதர்கொங்கு நாடுசித்திரைத் திருநாள் பலராம வர்மன்குறிஞ்சி (திணை)கத்திநாட்டு நலப்பணித் திட்டம்தமிழக வரலாறுபலாதேசிக விநாயகம் பிள்ளைகட்டுவிரியன்தேம்பாவணிவிஸ்வகர்மா (சாதி)மும்பை இந்தியன்ஸ்பாட்டாளி மக்கள் கட்சிஜலியான்வாலா பாக் படுகொலைபஞ்சாங்கம்சுற்றுச்சூழல் மாசுபாடுஆண்டு வட்டம் அட்டவணைமதுரை வீரன்தனுஷ் (நடிகர்)சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்சு. வெங்கடேசன்மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்அபியும் நானும் (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்மகாபாரதம்ஹோலிசிறுகதைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நற்றிணைதமன்னா பாட்டியாஅயலான்சிறுத்தைசிவாஜி கணேசன்சீதா ராமம்திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)எல். முருகன்திருக்குறள்தைனிக் பாஸ்கர்உருவக அணிபால கங்காதர திலகர்நந்திக் கலம்பகம்ஐயப்பன்திருமூலர்இந்திரா காந்திசைவத் திருமுறைகள்தமிழ்விடு தூதுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்கள்ளர் (இனக் குழுமம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தில்லையாடி வள்ளியம்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்முக்குலத்தோர்மலையாளம்மழைநீர் சேகரிப்புஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சிற்பி பாலசுப்ரமணியம்மரவள்ளிமுடியரசன்கும்பம் (இராசி)கிராம்புஆடு ஜீவிதம்உன்னை நினைத்துஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்இந்திய தேசிய காங்கிரசுமழைசுவாமிமலைஆனைக்கொய்யா🡆 More