வேலூர் சிப்பாய் எழுச்சி

வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.

பின்புலம்

1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரித்தானிய ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்துத் தூண்டி விட்டதாகச் சொல்லப் படுகிறது.

புரட்சிப் போக்கு

10-7-1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரித்தானிய ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால் இந்தப் புரட்சி அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்தியத் துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது. அந்தச் சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அஞ்சல் தலை

இச் சிப்பாய்ப் புரட்சி, 1857 பெரும் புரட்சிக்கு முன்னோடியாகும். இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Raj; The making and unmaking of British India Page 133-134 - Lawrence James Published 1997 by Penguins.

வெளி இணைப்புகள்

Tags:

வேலூர் சிப்பாய் எழுச்சி பின்புலம்வேலூர் சிப்பாய் எழுச்சி புரட்சிப் போக்குவேலூர் சிப்பாய் எழுச்சி அஞ்சல் தலைவேலூர் சிப்பாய் எழுச்சி இதனையும் காண்கவேலூர் சிப்பாய் எழுச்சி மேற்கோள்கள்வேலூர் சிப்பாய் எழுச்சி மேலும் படிக்கவேலூர் சிப்பாய் எழுச்சி வெளி இணைப்புகள்வேலூர் சிப்பாய் எழுச்சி1806ஜூலை 10தமிழ்நாடுவேலூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகமல்ஹாசன்குருதி வகைசிவகங்கை மக்களவைத் தொகுதிதொகாநிலைத் தொடர்சூல்பை நீர்க்கட்டி2024 இந்தியப் பொதுத் தேர்தல்மு. க. தமிழரசுஅஜித் குமார்குற்றாலக் குறவஞ்சிகூகுள்தொலைக்காட்சிவசுதைவ குடும்பகம்கர்ணன் (மகாபாரதம்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இந்திரா காந்திதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமறைமலை அடிகள்நஞ்சுக்கொடி தகர்வுஇசுலாம்தேசிய மாணவர் படை (இந்தியா)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்செயற்கை நுண்ணறிவுதிருத்தணி முருகன் கோயில்பம்மல் சம்பந்த முதலியார்கம்பராமாயணத்தின் அமைப்புகண்ணகிஆண்டாள்சீரடி சாயி பாபாசேது (திரைப்படம்)முத்தரையர்கரூர் மக்களவைத் தொகுதிஜிமெயில்திருநாவுக்கரசு நாயனார்முல்லை (திணை)கன்னியாகுமரி மாவட்டம்கலிங்கத்துப்பரணிஉயர் இரத்த அழுத்தம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காதல் (திரைப்படம்)உமறுப் புலவர்எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)ந. பிச்சமூர்த்திதமிழக வரலாறுபதிற்றுப்பத்துசைவ சமயம்நவரத்தினங்கள்இதயம்விவேகானந்தர்பிரேமலுசித்தர்மக்களவை (இந்தியா)திருப்பூர் மக்களவைத் தொகுதிஐங்குறுநூறுமாணிக்கம் தாகூர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஹோலிபுதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)தமிழ்க் கல்வெட்டுகள்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)அஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்காச நோய்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமுத்தொள்ளாயிரம்மூலம் (நோய்)கருப்பை நார்த்திசுக் கட்டிபகத் சிங்சௌந்தர்யாஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஇதயத் தாமரைமு. வரதராசன்கோத்திரம்கைப்பந்தாட்டம்🡆 More