வில்லியம் இலாசல்

வில்லியம் இலாசல் (William Lassell), (18 ஜூன் 1799 - 5 அக்தோபர் 1880) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் வணிகரும் பெரும்பிரித்தானிய அரசு கழக ஆய்வுறுப்பினரும் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.

வில்லியம் இலாசல்
William Lassell
வில்லியம் இலாசல்
பிறப்பு(1799-06-18)18 சூன் 1799
போல்ட்டன், இங்கிலாந்து
இறப்பு5 அக்டோபர் 1880(1880-10-05) (அகவை 81)
மெய்டன்கெட், இங்கிலாந்து
துறைவானியல்
விருதுகள்அரசு பதக்கம்(1858)

வில்லியம் இலாசல், மான்செசுட்டருக்கு மேற்கே அமைந்த நகரான இலங்காசயரில் உள்ள போல்ட்டனில் பிறந்தார். இவர் உரோச்டேலில் கல்விகற்றார். தன் தந்தை இறந்ததும், 1814 முதல் 1821 வரை இலிவர்பூலில் இருந்த வணிகர் ஒருவரிடம் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் இவர் பீர் வணிகராகச் செல்வம் ஈட்டியுள்ளார். எனவே இவரால் தன் வானியல் ஆர்வத்தை நிறைவுசெய்ய முடிந்தது. மேற்கு டெர்பையில் இருந்த சுட்டார்பீல்டு எனும் தன் வீட்டிலேயே ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது இலிவர்பூலின் புறநகராகும். இங்கு இவர் 24 அங்குல ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியைப் பெற்றிருந்தார். புவி சுழலும்போது வான்பொருட்களின் தடம் பின்பற்ற நடுவரை மலையொன்றைப் பயன்படுத்தினார். இதற்காக இவரே தேய்த்து மெருகூட்டிய ஆடியை தனது தொலைநோக்கியில் பயன்படுத்தினார். இந்த வான்காணகம் பின்னர் 1854 இல் இலிவர்பூலில் இருந்து பிராடுசுட்டோனுக்கு இடமாற்றினார்.


இவர் 1846 இல் நெப்டியூனின் மிகப்பெரிய நிலாவாகிய டிரைட்டானை, செருமானிய வானியலாரான யோகான் கோட்பிரீடு கல்லே நெப்டியூனைக் கண்டுபிடித்த 17 ஆம் நாளிலேயே, கண்டுபிடித்தார்.இவர் 1848 இல் தனியாக காரிக்கோளின் கைப்பெரியான் நிலாவைக் கண்டுபிடித்தார். இவர் 1851 இல் வருணனின்(யுரேனசின்) இரு நிலாக்களான ஏரியலையும் உம்பிரியேலையும் கண்டுபிடித்தார்.

விக்டோரியா அரசி 1851 இல் இலிவர்பூலுக்கு வந்தபோது தன்னைச் சந்திக்கச் சொல்லி இவரை அழைத்துள்ளார். அரசி சந்திக்க விரும்பிய வட்டார ஆளுமையாக இவர் மட்டுமே திகழ்ந்துள்ளார்.


இவர் அரசு கழக ஆய்வுறுப்பினராக 1849 இல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் அரசு கழகத்தின் பதக்கத்தை 1858 இல் பெற்றுள்ளார்ர். இவர் அரசு இலக்கியக் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். மேலும், இவர் எடின்பர்கு அரசு கழகத் தகைமை ஆய்வுறுப்பினரும் உப்சாலா அறிவியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து 1874 இல் தகைமைச் சட்ட முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.


இவர் 1839 இல் இருந்து அரசு வானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார். மேலும் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தையும் 1849 இல் பெற்றுள்ளார். இவர் அதன் தலைவராக 1870 இல் இருந்து இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார்.

இவர் அரசு கழக ஆய்வுறுப்பினராக 1849 இல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் அரசு கழகத்தின் பதக்கத்தை 1858 இல் பெற்றுள்ளார்ர். இவர் அரசு இலக்கியக் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். மேலும், இவர் எடின்பர்கு அரசு கழகத் தகைமை ஆய்வுறுப்பினரும் உப்சாலா அறிவியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து 1874 இல் தகைமைச் சட்ட முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.


இவர் 1880 இல் மெய்டன்கெட் எனும் இடத்தில் இறந்தார். இறப்பின்போது இவரது சொத்து 80,000 பவுண்டுகள் ஆகும்.இவரது தொலைநோகி கிரீன்விச்சில் உள்ள அரசு வான்காணகத்துக்குத் தரப்பட்டது.

நிலாவின் இலாசல் குழிப்பள்ளமும் செவ்வாயின் இலாசல் குழிப்பள்ளமும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன. குறுங்கோள் 2636 இலாசலுக்கும் நெப்டியூனின் வலயங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்கங்கைகொண்ட சோழபுரம்இஸ்ரேல்தொல்காப்பியர்வேலூர்க் கோட்டைரஜினி முருகன்ரோசுமேரிபி. காளியம்மாள்மரபுச்சொற்கள்ம. கோ. இராமச்சந்திரன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நிலாஅங்குலம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅறுபடைவீடுகள்நீர் மாசுபாடுகுணங்குடி மஸ்தான் சாகிபுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்காடழிப்புகருத்தரிப்புகேதா மாவட்டம்போக்கிரி (திரைப்படம்)ஸ்ரீலீலாமுல்லைப்பாட்டுரோகிணி (நட்சத்திரம்)தமிழ்ப் புத்தாண்டுசொல்பதினெண்மேற்கணக்குமுக்குலத்தோர்சிவம் துபேபௌர்ணமி பூஜைமுடக்கு வாதம்பறையர்போதைப்பொருள்எங்கேயும் காதல்பொது ஊழிஎஸ். ஜானகிதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)வடிவேலு (நடிகர்)தாவரம்நாடகம்கண்ணாடி விரியன்நாயக்கர்அய்யா வைகுண்டர்ஜன கண மனதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கல்வெட்டுகள்ளர் (இனக் குழுமம்)செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்இந்தியாதமிழச்சி தங்கப்பாண்டியன்ஜி. யு. போப்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அத்தி (தாவரம்)கருப்பசாமிமுன்னின்பம்அஜித் குமார்ஸ்ரீவானிலைகுறவஞ்சிபதிற்றுப்பத்துகூத்தாண்டவர் திருவிழாசைவத் திருமுறைகள்கைப்பந்தாட்டம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்கே. எல். ராகுல்சிறுபாணாற்றுப்படைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திரு. வி. கலியாணசுந்தரனார்ஆத்திசூடிதனிப்பாடல் திரட்டுமனோன்மணீயம்பூலித்தேவன்சிறுநீர்ப்பாதைத் தொற்று🡆 More