வலோதிமிர் செலேன்சுக்கி: உக்ரைன் தலைவர்

வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்சுக்கி (Volodymyr Oleksandrovych Zelenskyy; உக்ரைனியன்: Володимир Олександрович Зеленський; பிறப்பு: 25 சனவரி 1978) உக்ரைனிய நடிகரும், அரசியல்வாதியும் ஆவார்.

இவர் 2019 மே 20 முதல் உக்ரைனின் 6-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார்.

வலோதிமிர் செலேன்ஸ்கி
Volodymyr Zelensky
Володимир Зеленський
வலோதிமிர் செலேன்சுக்கி: உக்ரைன் தலைவர்
2019 இல் செலேன்சுக்கி
உக்ரைனின் 6-வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2019
முன்னையவர்பெத்ரோ பொரொசென்கோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்சுக்கி

25 சனவரி 1978 (1978-01-25) (அகவை 46)
கிரிவோய் ரோக், உக்ரைன், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
மக்கள் சேவகன் (2018 முதல்)
துணைவர்அலேனா கியாசுக்கோ (2003)
பிள்ளைகள்
  • அலெக்சாந்திரா
  • கிரிலோ
கல்விலீவ் தேசிய தொருளியல் பல்கலைக்கழகம்
வேலைநகைச்சுவை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
கையெழுத்துவலோதிமிர் செலேன்சுக்கி: உக்ரைன் தலைவர்

செலேன்சுக்கி கீவ் தேசிய பொருளியல் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். திரைப்படத்துறையில் சேர்ந்து குவார்த்தால் 95 என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, திரைப்படங்கள் தயாரித்தது மட்டுமல்லாமல், அவற்றில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துப் பிரபலமானார். இவர் நடிப்பிலும் தயாரிப்பிலும் 2015 முதல் 2019 வரை ஒளிபரப்பான மக்கள் சேவகன் என்ற தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் செலேன்சுக்கி உக்ரைன் அரசுத்தலைவராக நடித்திருந்தார்.

குவார்த்தால் 95 நிறுவன ஊழியர்களால் "மக்கள் சேவகன்" என்ற அரசியல் கட்சி 2018 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டது. 2019 அரசுத்தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக செலேன்சுக்கி 2018 திசம்பர் 31 அன்று அறிவித்தார். செலேன்சுக்கி இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73.2% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோவைத் தோற்கடித்தார்.

ஒரு மக்கள்மயப் படுத்தப்பட்டவராக அடையாளம் காணப்பட்ட செலேன்சுக்கியின் சாதனைகளாக, அரசுத்தலைவராகப் பதவியேற்றதும் நாடாளுமன்றத்தைக் கலைத்து சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார மந்தநிலையை திறம்பட நிர்வகித்தமை, ஊழலைக் கையாண்டமை ஆகியவை அடங்கும். அண்மைய ஆண்டுகளில், செலேன்சுக்கியின் அரசாங்கம் ஒரு சர்வாதிகாரத் திருப்பத்தை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2021 நவம்பர் 26 இல், உக்ரைனிய மற்றும் உருசியக் குழு ஒன்று தமது அரசாங்கத்திற்கு எதிராக திசம்பர் மாதத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றை நிகழ்த்தவிருப்பதாக செலேன்சுக்கி அறிவித்திருந்தார். ஆயினும், உக்ரைனியத் தொழிலதிபர் ரினாட் அகமேத்தொவுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்ட அரசுத்தலைவர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
பெத்ரோ பொரொசென்கோ
உக்ரைனின் அரசுத்தலைவர்
2019–இன்று வரை
பதவியில் உள்ளார்

Tags:

உக்குரேனிய மொழிஉக்ரைன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிர்மலா சீதாராமன்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிபழ. கருப்பையாபகுஜன் சமாஜ் கட்சிசதுரங்க விதிமுறைகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்இந்தியாவில் பாலினப் பாகுபாடுநாட்டு நலப்பணித் திட்டம்சமசுகிருதம்மு. வரதராசன்போதைப்பொருள்உத்தரகோசமங்கைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சீறாப் புராணம்அவிட்டம் (பஞ்சாங்கம்)திருமணஞ்சேரிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்மாதம்பட்டி ரங்கராஜ்தீபிகா பள்ளிக்கல்திராவிசு கெட்சனாதன தர்மம்சந்திரமுகி 2நாணயம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024விருந்தோம்பல்பிரேமலுமுதலாம் இராஜராஜ சோழன்வெண்பாஇராவணன்விஜய் ஆண்டனிஇந்தியத் தேர்தல்கள் 2024தினகரன் (இந்தியா)நாய்கள் ஜாக்கிரதைவிருமாண்டிதமிழ்விடு தூதுமகாவீரர் ஜெயந்திசென்னைபூனைஅவுரிநெல்லிசங்க இலக்கியம் தொகுப்புப் பாடல்மரபுச்சொற்கள்பஞ்சாப் கிங்ஸ்சங்க காலப் புலவர்கள்நா. காமராசன்புறநானூறுஒன்றியப் பகுதி (இந்தியா)திராவிட முன்னேற்றக் கழகம்பெரும்பாணாற்றுப்படைகாளமேகம்தமிழ் மன்னர்களின் பட்டியல்உவமையணிஉயிர்மெய் எழுத்துகள்விஜய் (நடிகர்)பள்ளர்ஓம்நீதிக் கட்சிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மத்தி (மீன்)தமிழக வெற்றிக் கழகம்ஆசாரக்கோவைபழனி பாபாநெய்மீன்இல்லுமினாட்டிஇணையம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிவல்லினம் மிகும் இடங்கள்ஏப்ரல் 21மொழிதிருப்போரூர் கந்தசாமி கோயில்சனீஸ்வரன்கருப்பை நார்த்திசுக் கட்டிசூரரைப் போற்று (திரைப்படம்)நக்கீரர், சங்கப்புலவர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஈரோடு தமிழன்பன்தொட்டிய நாயக்கர்தென்காசி மக்களவைத் தொகுதிகாதல் கோட்டை🡆 More