லியோனல் மெசி

லியோ ஆண்ரசு லியோ மெசி (Lionel Andrés Leo Messi  எசுப்பானிய ஒலிப்பு:  பிறப்பு 24 சூன் 1987) ஓர் அர்கெந்தீன தொழில்முறைக் கால்பந்து வீரர் ஆவார்.

இவர், மேஜர் லீக் சாக்கர் கிளப் இன்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினாவின் தேசிய அணி ஆகிய இரண்டிற்கும் முன்கள வீரராகவும் தலைவராகவும் உள்ளார். அனைத்துக் காலத்திற்குமான மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகப் பரவலாகக் கருதப்படும் மெசி, எட்டு பலோன் டி 'ஓர் விருதுகளையும், ஆறு ஐரோப்பிய தங்கக் காலணியினையும் வென்றுள்ளார், மேலும் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதினை இவர் எட்டு முறை பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டில் வெளியேறும் வரை, தனது முழு தொழில் வாழ்க்கையையும் பார்சிலோனா கழகத்தில் கழித்தார், பத்து லா லீகா பட்டங்கள், ஏழு கோபா டெல் ரே பட்டங்கள், யுஇஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு நான்கு முறை ஆகியன உட்பட 34 கிண்ணங்களை வென்றார். தனது தேசிய அணிக்காக, 2021 கோபா அமெரிக்கா மற்றும் 2022 உலகக்கோப்பை காற்பந்து வென்ற அணியில் இடம்பெற்றார். லா லிகாவில் அதிக கோல்களை எடுத்தவர் எனும் சாதனைகளை வைத்திருக்கிறார் (லா லிகாவில் 474). அதிக ஹாட்ரிக் கோல்கள், லா லீகாவில் 36, யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் (எட்டு) அடித்துள்ளார். காற்பந்துப் போட்டிகளில் அதிக முறை கோல்களை அடிக்க உதவியவராகவும் அறியப்படுகிறார், லா லிகா (192) , கோபா அமெரிக்கா (17) . அதிக பன்னாட்டு கோல்களை அடித்த ஒரு தென் அமெரிக்க ஆண் (106 கோல்கள்) எனும் சாதனையினைப் படைத்துள்ளார். பல்வேறு கழகங்கள் மற்றும் நாட்டிற்காக 800 க்கும் மேற்பட்ட தொழில்முறை கோல்களை அடித்துள்ளார், மேலும் ஒரு கழகத்திற்காக அதிக கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார் (672).

லியோனல் மெசி
Lionel Messi
லியோனல் மெசி
2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில்
அர்கெந்தீனா
அணிக்காக மெசி விளையாடினார்.
சுய தகவல்கள்
முழுப் பெயர்லியோனல் அந்திரேசு மெசி
பிறந்த நாள்24 சூன் 1987 (1987-06-24) (அகவை 36)
பிறந்த இடம்ரொசாரியோ, அர்கெந்தீனா
உயரம்1.70 m (5 அடி 7 அங்)
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பாரிசு செயிண்ட்-கெர்மைன்
எண்30
இளநிலை வாழ்வழி
1992–1995கிரண்டோலி
1995–2000நெவெல்
2000–2003பார்சிலோனா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2003–2004பார்சிலோனா சி10(5)
2004–2005பார்சிலோனா பி22(6)
2004–2021பார்சிலோனா520(474)
2021–2023பாரிசு செயிண்ட்-கெர்மைன்39(13)
பன்னாட்டு வாழ்வழி
2004–2005அர்கெந்தீனா 20-குறைவு18(14)
2008அர்கெந்தீனா 23-குறைவு5(2)
2005–அர்கெந்தீனா172(98)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 18:20, 13 நவம்பர் 2022 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 19:05, 18 திசம்பர் 2022 அன்று சேகரிக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

சூன் 24, 1987 -இல் அர்கெந்தீனா, ரோசாரியாவில், தொழிற்சாலைப் பணியாளர் ஜோர்கெ மெசி, பகுதி நேரமாகச் சுத்திகரிப்புப் பணியைச் செய்து வந்த சீலியா கக்கிடினி தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் இத்தாலிய மற்றும் இசுப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர், இத்தாலியின் வட-மத்திய அட்ரியாடிக் மார்ஷ் பிராந்தியத்திலிருந்து குடியேறியவர்களின் கொள்ளுப் பேரனாவார். இவரது தாய் வழி முதன்மையாக இத்தாலிய வம்சாவளியைக் கொண்டது. "லியோ" சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார், தனது மூத்த சகோதரர்களான ரோட்ரிகோ, மாற்றியாசு மற்றும் அவரது உறவினர்களான மாக்சிமிலியானோவும் இமானுவேல் பியான்குச்சியுடனும் விளையாடினார், அவர்கள் இருவரும் தொழில்முறைக் கால்பந்து வீரர்களாக மாறினர். நான்கு வயதில் கிராண்டோலியில் உள்ள கால்பந்துக் கழகத்தில் சேர்ந்தார், அங்கு அவர் தனது தந்தையால் பயிற்றுவிக்கப்பட்டார், இருப்பினும் ஒரு வீரராக அவரது ஆரம்பகால செல்வாக்கு இவரது தாய்வழிப் பாட்டி செலியாவிடமிருந்து வந்தது, அவர் இவருடன் பயிற்சி மற்றும் போட்டிகளுக்குச் சென்றார். அவரது மரணத்தால் இவர் பெரிதும் பாதிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஒரு பக்தியுள்ள ரோமன் கத்தோலிக்கராக, தனது பாட்டிக்கு அஞ்சலி செலுத்த வானத்தை நோக்கி தனது இலக்குகளைக் கொண்டாடினார்.

தொழில் வாழ்க்கை

மெசி தனது தொழில் வாழ்க்கையை பார்சிலோனாவில் தொடங்கி, தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கு கழித்தார். லா மாசியா அகாதமியில் சிறப்பாக பங்களித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். நவம்பர் 2003 இல் போர்டோ அணிக்கு எதிராக அறிமுகமானார், ஆனால் ஒரு வருடம் கழித்து டச்சு மேலாளர் ஃபிராங்க் ரிஜ்கார்டால் மூத்தோர் அணிக்குத் தகுதி பெற்றார். தனது பதினெட்டாவது பிறந்தநாளில் முதல் முறையாக மூத்தோர் அணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், மேலும் சிறப்பாகப் பங்களித்ததன் விளைவாக அணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது அணி வீரர் ரொனால்டினோ, அந்த நேரத்தில் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அவரது திறன் மெல்ல குறையத் தொடங்கியது. இறுதியில் அவர் 2008 இல் மிலன் கழகத்திற்குச் சென்றார். பின்னர், பத்தாவது எண் கொண்ட ஆடையினை மெசி பெற்றார், மேலும் இருபத்தியோராவது வயதில் பார்சிலோனாவின் புதிய நட்சத்திர வீரராக ஆனார். இலூயிசு என்ரிக், பெப் கார்டியோலா போன்ற மேலாளர்களின் தலைமையின் கீழ், பல கிண்னங்களைப் பெற்றார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

லியோனல் மெசி ஆரம்பகால வாழ்க்கைலியோனல் மெசி தொழில் வாழ்க்கைலியோனல் மெசி குறிப்புகள்லியோனல் மெசி மேற்கோள்கள்லியோனல் மெசி2022 உலகக்கோப்பை காற்பந்துen:WP:IPA for Spanishஅர்கெந்தீனாஎசுப்பானியம்கால்பந்து கூட்டமைப்புகோபா டெல் ரேகோப்பா அமெரிக்காபன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்புபார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம்முன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுலா லீகா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரிப்பொருள் (இலக்கணம்)சடுகுடுகிரியாட்டினைன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கடையெழு வள்ளல்கள்தனுசு (சோதிடம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஆத்திசூடிசிவாஜி கணேசன்சிவனின் 108 திருநாமங்கள்நீலகேசிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வல்லபாய் பட்டேல்நற்றிணைஅந்தாதிஎட்டுத்தொகை தொகுப்புகண்ணாடி விரியன்சஞ்சு சாம்சன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கொன்றை வேந்தன்கொல்லி மலைஊராட்சி ஒன்றியம்விருத்தாச்சலம்ஜே பேபிமாணிக்கவாசகர்பாதரசம்பறையர்பிள்ளைத்தமிழ்திணை விளக்கம்சுரதாகவலை வேண்டாம்பாரிஆதிமந்திவி.ஐ.பி (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்முருகன்நிணநீர்க்கணுமணிமேகலை (காப்பியம்)உமறுப் புலவர்நனிசைவம்முத்துராஜாபொருள்கோள்மத கஜ ராஜாஇந்திய அரசியல் கட்சிகள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ராஜஸ்தான் ராயல்ஸ்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்யசஸ்வி ஜைஸ்வால்மதராசபட்டினம் (திரைப்படம்)மருதம் (திணை)கள்ளழகர் கோயில், மதுரைபொதுவாக எம்மனசு தங்கம்செரால்டு கோட்சீபுளிப்புபஞ்சாங்கம்மனோன்மணீயம்திருக்கோயிலூர்மொழிகீழடி அகழாய்வு மையம்வாஸ்து சாஸ்திரம்சங்க இலக்கியம்வேளாண்மைதிரு. வி. கலியாணசுந்தரனார்செவ்வாய் (கோள்)காளமேகம்தேவநேயப் பாவாணர்ஜெயமோகன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அத்தம் (பஞ்சாங்கம்)தமிழ்விடு தூதுதளபதி (திரைப்படம்)திருமூலர்நாளந்தா பல்கலைக்கழகம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அத்தி (தாவரம்)ரெட் (2002 திரைப்படம்)இல்லுமினாட்டி🡆 More