ரிக்டர் அளவு

ரிக்டர் அளவு (Richter magnitude scale) என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும்.

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

1935அமெரிக்க ஐக்கிய நாடுசார்லஸ் ரிக்டர்நிலநடுக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைக்கலிஅரண்மனை (திரைப்படம்)பெண்சிலப்பதிகாரம்காம சூத்திரம்இன்ஸ்ட்டாகிராம்பள்ளிக்கூடம்அகநானூறுமட்பாண்டம்குருதிச்சோகைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாடுகும்பம் (இராசி)மம்தா பானர்ஜிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பாதரசம்திரிசாதமிழ்நாட்டின் நகராட்சிகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நீரிழிவு நோய்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022இயற்கை வளம்சிதம்பரம் நடராசர் கோயில்கட்டுரைபாடாண் திணைகாற்றுநிலாசுரதாஅஜித் குமார்தீபிகா பள்ளிக்கல்மறைமலை அடிகள்கட்டபொம்மன்ஜி. யு. போப்இந்திய தேசிய சின்னங்கள்கா. ந. அண்ணாதுரைதிருமலை நாயக்கர்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)மண்ணீரல்பெண்ணியம்பறவைக் காய்ச்சல்மலைபடுகடாம்ஆளுமைதமிழச்சி தங்கப்பாண்டியன்யாதவர்விடை (இலக்கணம்)எச்.ஐ.விபௌத்தம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வாலி (இராமாயணம்)மஞ்சும்மல் பாய்ஸ்மங்கலதேவி கண்ணகி கோவில்அஸ்ஸலாமு அலைக்கும்ஸ்ரீலீலாமயங்கொலிச் சொற்கள்எலான் மசுக்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சாக்கிரட்டீசுபாரத ஸ்டேட் வங்கி2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்உத்தரகோசமங்கைநாட்டு நலப்பணித் திட்டம்வேலுப்பிள்ளை பிரபாகரன்சங்க இலக்கியம்எலுமிச்சைநெடுநல்வாடைஒற்றைத் தலைவலிஅன்னை தெரேசாநெல்ஏப்ரல் 23செரால்டு கோட்சீகட்டுவிரியன்களப்பிரர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மாடுகுடும்பம்மறவர் (இனக் குழுமம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கூகுள்🡆 More