ரஃபேல் நடால்

இரஃபேல் ரஃபா நடால் பெரேரா (Rafael Rafa Nadal Parera; பிறப்பு: 3 சூன் 1986) என்பவர் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார்.

டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இவர் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். களிமண் ஆடுகளங்களில் பல வெற்றிகளைப் பெற்றதினால் இவர் "கிங் ஆஃப் கிளே" என அழைக்கப்படுகிறார். அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக டென்னிசு வரலாற்றில் சிறப்பான வீரராக அறியப்படுகிறார். 2022 சனவரியில் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றுப் போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அதிக பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ள ஆடவர் என்ற பெருமையை அடைகிறார் .

இரஃபேல் நடால்
Rafael Nadal
ரஃபேல் நடால்
2015இல் நடால்
முழுப் பெயர்இரஃபேல் நடால் பரேரா
நாடுரஃபேல் நடால் எசுப்பானியா
வாழ்விடம்மனகோர், மயோர்க்கா, எசுப்பானியா
பிறப்பு3 சூன் 1986 (1986-06-03) (அகவை 37)
மனகோர், மயோர்க்கா, எசுப்பானியா
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
தொழில் ஆரம்பம்2001
விளையாட்டுகள்இடக்கை
பயிற்சியாளர்டோனி நடால் (2005–2017)
பிரான்சிசுக்கோ ரோயிக் (2005–)
கார்லோசு மொயா (2016–)
மார்க் லோப்பசு (2021–)
பரிசுப் பணம்US$127,121,385
  •  வருவாயில் 3-வது இடத்தில்
இணையதளம்rafaelnadal.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்1038–209 (83.24%)
பட்டங்கள்90
அதிகூடிய தரவரிசைஇல. 1]] (18 ஆகத்து 2008)
தற்போதைய தரவரிசைஇல. 4 (06 சூன் 2022)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2009, 2022)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022)
விம்பிள்டன்வெ (2008, 2010)
அமெரிக்க ஓப்பன்வெ (2010, 2013, 2017, 2019)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஇறுதி (2010, 2013)
ஒலிம்பிக் போட்டிகள்ரஃபேல் நடால் (2008)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்138–74 (65.09% ATP தொடர், கிராண்ட் சிலாம், டேவிசுக் கோப்பை)
பட்டங்கள்11
அதியுயர் தரவரிசைஇல. 26 (8 ஆகத்து 2005)
தற்போதைய தரவரிசைஇல. 1156 (31 சனவரி 2022)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2004, 2005)
விம்பிள்டன்2R (2005)
அமெரிக்க ஓப்பன்அரையிறுதி (2004)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்ரஃபேல் நடால் (2016)
அணிப் போட்டிகள்
டேவிசுக் கோப்பைவெ (2004, 2008, 2009, 2011, 2019)
பதக்கத் தகவல்கள்
இற்றைப்படுத்தப்பட்டது: 31 சனவரி 2022.

நடால் 22 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை இருந்து வந்தது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். நடால் 14 முறை பிரெஞ்சு ஓப்பன் விருது , 4 முறை யூ.எசு. ஓப்பன் விருது, இரு முறை விம்பிள்டன் கோப்பை விருது, இரு முறை ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று விருதினையும் பெற்றுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த சமயத்தில் எசுப்பானியா ஆண்கள் பிரிவு அணி, நான்கு முறைகளில் 2004, 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டேவிசுக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டென்னிசு வரலாற்றில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டியில் பட்டம் வென்ற ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தனது 24 வயதில் இந்த சாதனையைப் படைத்தார்.

நடால் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க போட்டியில் விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - 14 முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார். அன்ட்ரே அகாசிக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பெருவெற்றித் தொடரில் கோப்பை வெல்லும் இரண்டாவது ஆண் வீரரானார். 2011 ஆம் ஆன்டிற்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானார்.

ஆரம்பகால வாழ்க்கை

இரபேல் நடால் மனகோர்,பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில் சூன் 3, 1986 இல் பிறந்தார். இவரின் தந்தை செபாஸ்டியன் நடால் ஒரு தொழில் முனைவோர். இவருக்குச் சொந்தமாக ஒரு காப்பீடு நிறுவனம் உள்ளது. மேலும் கண்ணாடி மற்றும் சாளர நிறுவனம் வைத்துள்ளார். சா புந்தா எனும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் தாய் அனா மரியா பரேரா குடும்பத் தலைவி. இவருக்கு மரியா இசபெல்லா எனும் இளைய சகோதரி உள்ளார். இவரின் மாமா மைக்கேல் ஏஞ்சல் நடால் ஒரு முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்காகவும், தேசிய எசுப்பானிய அணிக்காகவும் விளையாடி உள்ளார். நடால் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் மற்றொரு மாமாவான டோனி நடால் தான் இவருக்கு இயற்கையிலேயே டென்னிசு விளையாடும் திறன் இருப்பதைக் கண்டறிந்து இவரின் மூன்றாவது வயதிலேயே இவரை டென்னிசு விளையாடச் செய்தார்.

தனது எட்டாம் வயதில் ,12 வயதிற்கு உட்பட்டோருக்கான உள்ளூர் டென்னிசு வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். அந்தச் சமயத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார். இதன் பின்பு தோனி நடால், இவருக்கு அளித்த பயிற்சியினை தீவிரப்படுத்தினார். இவருக்கு இயற்கையாகவே இருக்கும் இடக்கைப் பழக்கத்தினால் டென்னிசு மைதானத்தில் இடதுகை கொண்டு விளையாடுமாறு அறிவுறுத்தினார். வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கி அடிக்கும் போது நடால் இரண்டு கையையும் பயன்படுத்துவதைக் கவனித்தார்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில் காலநிரல்

பெருவெற்றித் தொடர் இறுதிப் போட்டிகள்:

முடிவு ஆண்டு சுற்று தரை எதிராளி புள்ளி
வெற்றி 2005 பிரெஞ்சு ஓப்பன் களிமண் ரஃபேல் நடால்  மரியானோ புவெர்த்தா 6–7(6–8), 6–3, 6–1, 7–5
வெற்றி 2006 பிரெஞ்சு ஓப்பன் (2) களிமண் ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 1–6, 6–1, 6–4, 7–6(7–4)
தோல்வி 2006 விம்பிள்டன் புற்றரை ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 0–6, 6–7(5–7), 7–6(7–2), 3–6
வெற்றி 2007 பிரெஞ்சு ஓப்பன் (3) களிமண் ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 6–3, 4–6, 6–3, 6–4
தோல்வி 2007 விம்பிள்டன் புற்றரை ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 6–7(7–9), 6–4, 6–7(3–7), 6–2, 2–6
வெற்றி 2008 பிரெஞ்சு ஓப்பன் (4) களிமண் ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 6–1, 6–3, 6–0
வெற்றி 2008 விம்பிள்டன் புற்றரை ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 6–4, 6–4, 6–7(5–7), 6–7(8–10), 9–7
வெற்றி 2009 ஆத்திரேலிய ஓப்பன் கடின ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 7–5, 3–6, 7–6(7–3), 3–6, 6–2
வெற்றி 2010 பிரெஞ்சு ஓப்பன் (5) களிமண் ரஃபேல் நடால்  ராபின் சோடர்லிங்கு 6–4, 6–2, 6–4
வெற்றி 2010 விம்பிள்டன் (2) புற்றரை ரஃபேல் நடால்  தொமாசு பெர்டிச்சு 6–3, 7–5, 6–4
வெற்றி 2010 அமெரிக்க ஓப்பன் கடின ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 6–4, 5–7, 6–4, 6–2
வெற்றி 2011 பிரெஞ்சு ஓப்பன் (6) களிமண் ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 7–5, 7–6(7–3), 5–7, 6–1
தோல்வி 2011 விம்பிள்டன் புற்றரை ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 4–6, 1–6, 6–1, 3–6
தோல்வி 2011 அமெரிக்க ஓப்பன் கடின ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 2–6, 4–6, 7–6(7–3), 1–6
தோல்வி 2012 ஆத்திரேலிய ஓப்பன் கடின ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 7–5, 4–6, 2–6, 7–6(7–5), 5–7
வெற்றி 2012 பிரெஞ்சு ஓப்பன் (7) களிமண் ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 6–4, 6–3, 2–6, 7–5
வெற்றி 2013 பிரெஞ்சு ஓப்பன் (8) களிமண் ரஃபேல் நடால்  டேவிட் ஃபெரர் 6–3, 6–2, 6–3
வெற்றி 2013 அமெரிக்க ஓப்பன் (2) கடின ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 6–2, 3–6, 6–4, 6–1
தோல்வி 2014 ஆத்திரேலிய ஓப்பன் கடின ரஃபேல் நடால்  ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 3–6, 2–6, 6–3, 3–6
வெற்றி 2014 பிரெஞ்சு ஓப்பன் (9) களிமண் ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 3–6, 7–5, 6–2, 6–4
தோல்வி 2017 ஆத்திரேலிய ஓப்பன் கடின ரஃபேல் நடால்  ரொஜர் பெடரர் 4–6, 6–3, 1–6, 6–3, 3–6
வெற்றி 2017 பிரெஞ்சு ஓப்பன் (10) களிமண் ரஃபேல் நடால்  இசுத்தான் வாவ்ரிங்கா 6–2, 6–3, 6–1
வெற்றி 2017 அமெரிக்க ஓப்பன் (3) கடின ரஃபேல் நடால்  கெவின் ஆன்டர்சன் 6–3, 6–3, 6–4
வெற்றி 2018 பிரெஞ்சு ஓப்பன் (11) களிமண் ரஃபேல் நடால்  தொமினிக் தீம் 6–4, 6–3, 6–2
வெற்றி 2019 ஆத்திரேலிய ஓப்பன் கடின ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 3–6, 2–6, 3–6
வெற்றி 2019 பிரெஞ்சு ஓப்பன் (12) களிமண் ரஃபேல் நடால்  தொமினிக் தீம் 6–3, 5–7, 6–1, 6–1
வெற்றி 2019 அமெரிக்க ஓப்பன் (4) கடின ரஃபேல் நடால்  டேனியல் மித்விதிவ் 7–5, 6–3, 5–7, 4–6, 6–4
வெற்றி 2020 பிரெஞ்சு ஓப்பன் (13) களிமண் ரஃபேல் நடால்  நோவாக் ஜோக்கொவிச் 6–0, 6–2, 7–5
வெற்றி 2022 ஆத்திரேலிய ஓப்பன் (2) கடின ரஃபேல் நடால்  டேனியல் மித்விதிவ் 2–6, 6–7(5–7), 6–4, 6–4, 7–5
வெற்றி 2022 பிரெஞ்சு ஓப்பன் களிமண் காஸ்பர் ரூட் 6-3, 6-3, 6-0

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ரஃபேல் நடால் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நடால்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ரஃபேல் நடால் ஆரம்பகால வாழ்க்கைரஃபேல் நடால் கிராண்ட் சிலாம் போட்டிகளில் காலநிரல்ரஃபேல் நடால் மேற்கோள்கள்ரஃபேல் நடால் வெளி இணைப்புகள்ரஃபேல் நடால்களிமண் ஆடுகளம்டென்னிசுடென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒத்துழையாமை இயக்கம்சீறாப் புராணம்நரேந்திர மோதிஐஞ்சிறு காப்பியங்கள்பரிவுதமிழர் கலைகள்இசுலாமிய வரலாறுவல்லினம் மிகும் இடங்கள்பஞ்சபூதத் தலங்கள்இட்லர்புறப்பொருள்மரகத நாணயம் (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்நாட்டு நலப்பணித் திட்டம்நிலாநாளந்தா பல்கலைக்கழகம்ஜெ. ஜெயலலிதாஉரிச்சொல்மறைமலை அடிகள்பாசிப் பயறுபுதுப்பிக்கத்தக்க வளம்திரிகடுகம்இலக்கியம்நந்திக் கலம்பகம்வடிவேலு (நடிகர்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்சோளம்முத்தரையர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370லால் சலாம் (2024 திரைப்படம்)இஸ்ரேல்தமிழ்த் தேசியம்காவிரிப்பூம்பட்டினம்எ. வ. வேலுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்அளபெடைசிறுநீர்ப்பாதைத் தொற்றுதிருப்போரூர் கந்தசாமி கோயில்சிங்கப்பூர் உணவுகல்விசெம்மொழியோகாசனம்வினோஜ் பி. செல்வம்குறிஞ்சிக்கலிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கம்பராமாயணத்தின் அமைப்புதஞ்சாவூர்அட்சய திருதியைஅய்யா வைகுண்டர்கண்ணகிவானிலைதிருக்குறள் பகுப்புக்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சே குவேராமாதவிடாய்அரச மரம்69கருப்பசாமிஇந்தியத் தேர்தல் ஆணையம்சிலம்பம்தினமலர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மு. வரதராசன்வாசுகி (பாம்பு)அட்டமா சித்திகள்கும்பகோணம்கட்டுரைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய விடுதலை இயக்கம்போதைப்பொருள்பிள்ளையார்தனுசு (சோதிடம்)சட் யிபிடிபெரியாழ்வார்புதிய ஏழு உலக அதிசயங்கள்பகவத் கீதைதமிழர் நெசவுக்கலைஇந்திய வரலாறுஉத்தரகோசமங்கை🡆 More