மீரா ராய்

மீரா ராய் (Mira Rai (பிறப்பு: 31 டிசம்பர் 1988) நேபாள மலைப்பாதை ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார்.

இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டின் நேசனல் ஜியோகிரபி சாகச வெற்றியாளராக விளங்கினார். இவர் உலகின் மிகவும் சவாலான மலைப்பாதை ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டவர்.

மீரா ராய்
மீரா ராய்
தனிநபர் தகவல்
தேசியம்நேபாளியர்
பிறப்பு31 திசம்பர் 1988 (1988-12-31) (அகவை 35)
விளையாட்டு
நாடுமீரா ராய் நேபாளம்
விளையாட்டுமலைப்பாதை ஓட்டப் பந்தயம்
கழகம்நேபாள மலைப்பாதை ஓட்டப் பந்தய மன்றம்

இளமை வாழ்க்கை

இமயமலையில் அமைந்த நேபாள மாநில எண் 1இல் உள்ள போஜ்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான் போஜ்பூர் எனும் ஊரில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மீரா ராய். 12 வயது வரை பள்ளிக்குச் சென்ற மீரா ராய், பின்னர் படிபை நிறுத்தி விட்டு, பெற்றோர்களுக்கு உதவிட, பண்ணைத் தோட்டத்தை கவனிக்கவும், சந்தைக்குச் செல்லவும் அன்றாடம் இமயமலையில் ஏறி-இறங்கத் துவங்கினார்.

மீரா ராய் தனது 14-வது வயதில் பெற்றோரிடம் தெரிவிக்காது, வீட்டை விட்டு வெளியேறி, மாவோ கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்ன 18-வது வயதி நிறைந்த பின் நேபாள இராணுவத்தில் ஓரான்டு பணிபுரிந்தார். பின்னர் இராணுவத்திலிருந்து விலகி காட்மாண்டு நகரத்தில் கராத்தே மற்றும் ஓட்டப் பந்தயகளில் பயிற்சி பெற்றார்.

தொழில்

ஒரு நல்ல ஓட்டப் பந்தய வீராங்கனையாக மீரா ராயின் முதலாவது அல்ட்ரா-மராத்தான் ஓட்டப்பந்தயம் இமயமலையில் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாதரணமாக பங்கேற்று வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் முறையான டிரெயில் ஓட்டத்திற்கான தீவிர பயிற்சிக்குப் பிறகு, மீரா ராய் சர்வதேச அல்ட்ரா-மலைப்பாதை ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்யத் தொடங்கினார், அங்கு அவர் விரைவாக பல ஓட்டப் பந்தயங்களில் வென்று சாதனை படைத்தார்.

2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற மலைப்பாதை ஓட்டப்பந்தயப் போட்டியில் ஓடிய போது இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், இவர் தனது கவனத்தை நேபாளம் முழுவதும் ஓடுவதை ஊக்குவிப்பதிலும், கிராமப்புற நேபாளத்தைச் சேர்ந்த மற்ற நம்பிக்கைக்குரிய இளம் பெண் விளையாட்டு வீரர்களை சர்வதேச அரங்கில் பங்கேற்கவும் உதவினார். நேபாள இளைஞர்களிடையே மலைப்பாதை ஓட்டப் பந்தய விளையாட்டை ஊக்குவிப்பதற்காக அவர் காட்மாண்டுவில் பல மலைப்பாதை ஓட்டப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். மீரா ராய் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் இடம்பெற்றுள்ளார். இது ஒரு தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமத்திலிருந்து ஒரு தேசிய ஹீரோ வரை தனது வாழ்க்கையை உள்ளடக்கியது. ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில், இவர் நாடு முழுவதும் உள்ள பல சிறுமிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

2017 ஆம் ஆண்டில், மீரா போட்டியிடும் அல்ட்ரா-மலைப்பாதை ஓட்டப் பந்தயத்தில் மீண்டும் இணைந்தார். செப்டம்பர் 2017-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 120 கிலோ மீட்டர் தொலைவிற்கான பென் நெவிஸ் அல்ட்ரா-மலைப்பாதை ஓட்டப் பந்தயத்தில், 14 மணி நேரம், 24 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

சாதனைகள்

மீரா ராயின் ஓட்டப் பந்தயச் சாதனைகள் கீழ்கண்டவாறு:

  மலை ஓட்டப்பந்தயத் தொடர்கள் (2 வெற்றி)
ஆண்டு நாள் ஓட்டப்பந்தயம் நிலை குறிப்பு
2017 16.09 பென் நேவிஸ் அல்டிரா ஓட்டப்பந்தயம் முதலிடம் (புதிய சாதனை)
2016 30.04 3 கொடுமுடிகளை கடக்கும் ஓட்டப்பந்தயம் இரண்டாமிடம்
2015 19.09 அல்டிரா பிரிநியூ இரண்டாமிடம்
19.07 தோலமைட்டு மலை ஓட்டப்பந்தயம் 13-ஆம் இடம்
04.07 பார்ரோ மலை ஓட்டப் பந்தயம் முதலிடம்
26.06 மோண்ட் பிளாங்க் ஓட்டப் பந்தயம் 80 கிமீ முதலிடம் (புதிய சாதனை)
12.04 பப்பலோ மலை ஓட்டப்பந்தயம் மூன்றாமிடம் (42 கிமீ 4:52)
21.03 இமயமலை 50 கிமீ ஓட்டப்பந்தயம் முதலிடம்
07.02 சாய் குங் ஆசிய மலை ஓட்டப்பந்தயம் முதலிடம்
01.02 இமயமலை ஒட்டப்பந்தயம் முதலிடம்
03.01 காட்மாண்டு அல்டிரா வடக்கு ஓட்டப்பந்தயம் முதலிடம்
2014 07.12 இமயமலை 50 கிமீ ஓட்டப்பந்தயம் இரண்டாமிடம்
05.12 இமயமலையில் செங்குத்தாக ஓடும் போட்டி முதலிடம்
28.11 கோத் இரண்டாமிடம்
08.10 மனசுலு மலை ஓட்டப்பந்தயம் முதலிடம்
26.10 இமயமலை 50 கீமீ ஓட்டப்பந்தயம் முதலிடம் (5:30:32 5th overall)
28.09 தேக்லி எரோய், 83 கிமீ ஓட்டப்ந்தயம் முதலிடம் (9:16)
13.09 செல்லாரோண்டா மலைப்பாதை ஓட்டம், 57 கிமீ (57 km) முதலிடம் (6:36:30)
21.04 முஸ்தாங் மலை ஓட்டப்பந்தயம் முதலிடம்
23.03 வெளி இமயமலை ஓட்டப்பந்தயம், 50 கிமீ முதலிடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மீரா ராய் இளமை வாழ்க்கைமீரா ராய் தொழில்மீரா ராய் சாதனைகள்மீரா ராய் மேற்கோள்கள்மீரா ராய் வெளி இணைப்புகள்மீரா ராய்நேபாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. மேத்தாசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ் இலக்கியப் பட்டியல்ஆபிரகாம் லிங்கன்குரோதி ஆண்டுஇன்ஸ்ட்டாகிராம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிநா. காமராசன்பாசிசம்மனித வள மேலாண்மைசுற்றுச்சூழல் மாசுபாடுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசெவ்வாய் (கோள்)வரலாறுநீதிக் கட்சிமாதவிடாய்சத்ய பிரதா சாகுகொடைக்கானல்பாளையக்காரர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்உத்தரகோசமங்கைஔவையார்அகத்தியர்முகலாயப் பேரரசுஆடுஜீவிதம் (திரைப்படம்)பிரபுதேவாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பொது ஊழிசுபாஷ் சந்திர போஸ்சிறுத்தைசார்பெழுத்துதனிப்பாடல் திரட்டுவடிவேலு (நடிகர்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகிராம ஊராட்சிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிமுன்னின்பம்உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுலொக்கி பெர்கசன்சிறுநீரகம்ஐம்பெருங் காப்பியங்கள்கைப்பந்தாட்டம்மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில்கர்மாஉரிச்சொல்கொரோனா வைரசுகலித்தொகைஇஸ்ரேல்சித்த மருத்துவம்தமிழக வரலாறுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கச்சத்தீவுபரிபாடல்அஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)ஈ. வெ. இராமசாமிஉவமையணிதமிழ் நாடக வரலாறுநடுகல்மகாபாரதம்தாஜ் மகால்இன்னா நாற்பதுசமயபுரம் மாரியம்மன் கோயில்விருந்தோம்பல்தென் சென்னை மக்களவைத் தொகுதிஉரைநடைஇலட்சம்கிராம சபைக் கூட்டம்பரதநாட்டியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநிணநீர்க் குழியம்நாயக்கர்காரைக்கால் அம்மையார்இந்திய நிதி ஆணையம்ராஜஸ்தான் ராயல்ஸ்முத்தொள்ளாயிரம்நயினார் நாகேந்திரன்திராவிட மொழிக் குடும்பம்நெசவுத் தொழில்நுட்பம்🡆 More