மலுக்கு தீவுகள்

மலுக்கு தீவுகள் (Maluku Islands) எனப்படுபவை இந்தோனேசியாவில், குறிப்பாக மலே தீவுக்கூட்டத்தில் காணப்படும் தீவுகள் ஆகும்.

இவை மொலுக்காஸ், மொலுக்கன் தீவுகள், ஸ்பைஸ் தீவுகள் அல்லது மலுக்கு எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியப் புவித்தட்டில் சுலவேசிக்கு கிழக்கே, நியூ கினிக்கு மேற்கே, திமோரிக்கு வடக்கே அமைந்துள்ளன. வரலாற்று ரீதியாக சீனர்களாலும், ஐரோப்பியர்களாலும் இது இவை ஸ்பைஸ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தன.

மலுக்கு
Maluku
Moluccas
மலுக்கு தீவுகள்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்3°9′S 129°23′E / 3.150°S 129.383°E / -3.150; 129.383
மொத்தத் தீவுகள்~1000
முக்கிய தீவுகள்அல்மகேரா, சேரம், புரு, அம்போன், தெர்னேட்டு, டைடோர், ஆரு தீவுகள், காய் தீவுகள்
பரப்பளவு74,505 km2 (28,767 sq mi)
உயர்ந்த ஏற்றம்3,027 m (9,931 ft)
உயர்ந்த புள்ளிபினையா மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணங்கள்மலுக்கு, வட மலுக்கு
பெரிய குடியிருப்புஅம்போன்
மக்கள்
மக்கள்தொகை1,895,000 (2000)
இனக்குழுக்கள்அல்பூர், நுவாவுலு, மனுசேலா
மலுக்கு தீவுகள்
Map by Willem Blaeu (1630)

இங்குள்ள பெரும்பாலான தீவுகள் மலைகளையும் குமுறும் எரிமலைகளையும் கொண்டுள்ளன. ஈரப்பாங்கானவை. மழைக்காடுகள் பல உள்ளன. உணவு வாசனைப் பொருட்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் மெலனீசியர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்திருந்தாலும், பல தீவுப்பகுதி மக்கள், குறிப்பாக பண்டா தீவுகளில் வாழ்ந்த மக்கள் 17ம் நூற்றாண்டுப் பகுதியில் கொல்லப்பட்டனர். ஆஸ்திரனேசியர்கள் இங்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டச்சு ஆட்சிக் காலத்தில் குடியேறினர். இக்குடியேற்றம் பின்னர் இந்தோனீசிய ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது.

1950 ஆம் ஆண்டில் மலுக்கு தீவுகள் இந்தோனீசியாவின் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு மலுக்கு, வடக்கு மலுக்கு என இரண்டு இந்தோனீசீய மாகாணங்களாக்கப்பட்டன. 1999 - 2002 காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இங்கு கருத்து வேறுபாடு காரணமாகக் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.

புவியியல்

மலுக்கு தீவுகளில் மொத்தம் 999 தீவுகள் உள்ளன. 77,990 கிமீ2 நிலப்பகுதியையும், 776,500 கிமீ2 கடற் பரப்பையும் கொண்டுள்ளன.

    வடக்கு மலுக்கு மாகாணம்
  • டேர்னேட், முக்கிய தீவு
  • பக்கான்
  • ஹல்மஹேரா - 20,000 கிமீ2 மலுக்கு தீவுகளில் பெரியது.
  • மொரட்டாய்
  • ஓபி தீவுகள்
  • சூலா தீவுகள்
  • டைடோர்
    மலுக்கு மாகாணம்
  • அம்போன் தீவு, முக்கிய தீவு
  • ஆரு தீவுகள்
  • பாபார் தீவுகள்
  • பண்டா தீவுகள்
  • புரு
  • காய் தீவுகள்
  • கிசார்
  • லெட்டி தீவுகள்
  • சேரம்
  • டனிம்பார் தீவுகள்
  • வெட்டார்

வெளி இணைப்புகள்

Tags:

ஆஸ்திரேலியப் புவித்தட்டுஇந்தோனேசியாஐரோப்பாசீனாசுலவேசிதிமோர்தீவுநியூ கினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதிற்றுப்பத்துமுதலாம் உலகப் போர்மூவேந்தர்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொகைநிலைத் தொடர்விடுதலை பகுதி 1வாணிதாசன்பித்தப்பைநிணநீர்க்கணுசுற்றுச்சூழல் பிரமிடுஅரிப்புத் தோலழற்சிபாலியல் துன்புறுத்தல்தமிழர் நெசவுக்கலைவாஸ்து சாஸ்திரம்மக்கள் தொகைஇந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்ஏற்காடுசுற்றுச்சூழல் கல்விகோயம்புத்தூர்தமிழர் நிலத்திணைகள்வாகை சூட வாதிருக்கோயிலூர்குறிஞ்சிக்கலிநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)கரிகால் சோழன்காய்கறிஜே பேபிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்காவிரி ஆறுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பூக்கள் பட்டியல்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்108 வைணவத் திருத்தலங்கள்நைதரசன் நிலைப்படுத்தல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வசுதைவ குடும்பகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சிவனின் 108 திருநாமங்கள்மேற்குத் தொடர்ச்சி மலைசித்திரைகாப்பியம்தமிழ்ப் புத்தாண்டுஅவதாரம்லினக்சு வழங்கல்கள்தளபதி (திரைப்படம்)ஆற்காடு வீராசாமிசிறுநீரகம்போக்கிரி (திரைப்படம்)திருக்குறள்திருப்போரூர் கந்தசாமி கோயில்விளம்பரம்மாணிக்கவாசகர்பாரத ரத்னாதமிழ் எழுத்து முறைகாமராசர்சூரைசப்ஜா விதைஅண்ணாமலை குப்புசாமிதமிழ் மன்னர்களின் பட்டியல்குற்றியலுகரம்அறிவியல்கலித்தொகைஎட்டுத்தொகை தொகுப்புஇந்திய நாடாளுமன்றம்மங்கலதேவி கண்ணகி கோவில்இலக்கியம்இலட்சம்டிரைகிளிசரைடுதேர்தல்கண்ணதாசன்சிலேடைஆகு பெயர்சுந்தரமூர்த்தி நாயனார்ஈரோடு தமிழன்பன்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஉதயநிதி ஸ்டாலின்சினைப்பை நோய்க்குறி🡆 More