மதுசூதன் தாசு

உத்கல கவுரப் மதுசூதன் தாசு (28 ஏப்ரல் 1848 - 4 பிப்ரவரி 1934) ஒடிசாவின் முதல் பட்டதாரியும் வழக்கறிஞரும் ஆவார்.

ஒடிசாவின் கட்டக் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யபாமாபூர் என்னும் கிராமத்தில் 28 ஏப்ரல் 1848 அன்று பிறந்தார் மதுசூதன். இவரை குலபிருத்தா (ஆகப் பெரிய மனிதர்) என்றும் உத்கல் கௌரவ்(உத்கலத்தின் பெருமை) என்றும் அழைப்பர். இவர் ஒரு புலவரும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.  

உத்கல் கௌரவ்
மதுசூதன் தாசு
மதுசூதன் தாசு
பிறப்புகோபால் வல்லப்
(1848-04-28)ஏப்ரல் 28, 1848
சத்தியபாமாபூர், கட்டக், ஒடிசா, இந்தியா
இறப்புபெப்ரவரி 4, 1934(1934-02-04) (அகவை 85)
கட்டக், ஒடிசா, இந்தியா
இருப்பிடம்கட்டக்
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்மது பாபு
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, அமைச்சர்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்சௌத்ரி ரகுநாத் தாசு, பார்பதி தேவி
வாழ்க்கைத்
துணை
சவுடாமினி தேவி
பிள்ளைகள்சாய்லபலா தாசு
சுதான்சுபலா கசுரா

குடும்பம்

மதுசூதன் ஒரு சமீந்தாரி குடும்பத்தில் சௌத்ரி ரகுநாத் தாசு மற்றும் பார்பதி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வழங்கிய பெயர் கோபிந்தவல்லப். பின்னர் இவர் பெயரை மதுசூதன் என்று மாற்றினர். மதுசூதன் சாய்லபலா தாசு மற்றும் சுதான்சுபலா கசரா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். மூத்தவரான சாய்லபலா சிறந்த கல்வியியலாளர் ஆவார். கட்டக் நகரில் உள்ள சாய்லபலா பெண்கள் கல்லூரிக்கு அவரது பெயரிட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளது. இளையவரான சுதான்சுபலா பிரிட்டிசு இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். 

இளமையும் கல்வியும்

மதுசூதன் துவக்கக் கல்விக்குப் பிறகு, கட்டக் மேல்நிலைப் பள்ளிக்குச் (இன்றைய ரேவன்சா கல்லூரியியல் பள்ளி) சென்றார். 1864ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வில் வென்று கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1870ஆம் ஆண்டு இளங்கலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்து ஒடிசாவின் முதல் பட்டதாரி ஆனார். தொடர்ந்து அவர் 1873ஆம் ஆண்டு முதுநிலை கலை மற்றும் 1878ஆம் ஆண்டு சட்ட இளங்கலை படிப்புகளையும் முடித்து இவற்றை சாதித்த முதல் ஒடிசா மாணவர் ஆனார்.

தொழில்சார் வாழ்வு

1881ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்து திரும்பிய பிறகு வழக்கறிஞராய் தனது பணியைத் தொடங்கினார். அவருடைய திறமையால் மற்றோருக்கு உதவும் அளவு வருமானம் ஈட்ட முடிந்தது. ஒடிசாவிலும் இந்தியாவிலும் உள்ள வழக்கறிஞர்களுக்கு மதுசூதன் ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தார். அவரது பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஒடிசாவில் வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அரசியல் வாழ்வு

மக்களால் 'மது பாபு' என்று அன்போடு அழைக்கப்பட்ட மதுசூதன், ஒடிசா மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். ஒரு சிறந்த கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், நாட்டுப் பற்றாளராகவும் விளங்கினார். அவர் தொடங்கிய உத்கல் சம்மிலானி என்ற இயக்கம் ஒடிசாவில் சமூக மற்றும் தொழில் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தது. அவரது நெடிய அரசியல் போராட்டத்தால் சிதறி இருந்த ஒடிசா மாநிலத்தை ஒன்றிணைத்து 1936ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் நாள் புதிய ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் மக்கள் ஒடிசா நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

இலக்கிய பங்களிப்பு

ஒரு எழுத்தாளராகவும் கவிஞராகவும் மதுசூதனின் எழுத்துக்களில் நாட்டுப்பற்று மேலோங்கி இருந்தது. ஆங்கிலத்திலும் ஒடியாவிலும் அவர் எண்ணற்ற கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி உள்ளார். அவரது சிறந்த கவிதைகளில் சில "உத்கல் சனாதன்", "சதி இதிகாசு" மற்றும் "சனானிரா உத்கி". இவர் ஒடியா, பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளரும் ஆவார். 

இறப்பு

மதுசூதன் 4 பிப்ரவர் 1934 அன்று இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்

Tags:

மதுசூதன் தாசு குடும்பம்மதுசூதன் தாசு இளமையும் கல்வியும்மதுசூதன் தாசு தொழில்சார் வாழ்வுமதுசூதன் தாசு அரசியல் வாழ்வுமதுசூதன் தாசு இலக்கிய பங்களிப்புமதுசூதன் தாசு இறப்புமதுசூதன் தாசு மேற்கோள்கள்மதுசூதன் தாசுஒடிசாகட்டக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகாவீரர்தாமரை (கவிஞர்)சீதைமாநிலங்களவைதமிழ் மன்னர்களின் பட்டியல்நீதிக் கட்சிதிருட்டுப்பயலே 2புதிய ஏழு உலக அதிசயங்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கணியன் பூங்குன்றனார்கன்னத்தில் முத்தமிட்டால்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கள்ளுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஇயற்கை வேளாண்மைஇந்திய அரசியல் கட்சிகள்முக்கூடற் பள்ளுஇராம நவமிகாடுதாவரம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சுய இன்பம்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல்கள் 2024குறவஞ்சிமுதுமொழிக்காஞ்சி (நூல்)அம்மனின் பெயர்களின் பட்டியல்கலைதஞ்சைப் பெருவுடையார் கோயில்இலங்கையின் மாவட்டங்கள்சிந்துவெளி நாகரிகம்பிரசாந்த்குருதி வகைபாட்டாளி மக்கள் கட்சிமுலாம் பழம்பாலை (திணை)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கல்வெட்டுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிறுநீரகம்மட்பாண்டம்முடியரசன்தனுஷ்கோடிதுரைமுருகன்வயாகராதிதி, பஞ்சாங்கம்வினோஜ் பி. செல்வம்பரதநாட்டியம்நக்சலைட்டுபெண்அழகர் கோவில்குப்தப் பேரரசுதங்கம் தென்னரசுபிரியாத வரம் வேண்டும்மெய்யெழுத்துதமிழர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஆண்டாள்கிராம சபைக் கூட்டம்இராகுல் காந்திசிவபெருமானின் பெயர் பட்டியல்ஹர்திக் பாண்டியாசைவத் திருமுறைகள்கா. காளிமுத்துமுதலாம் உலகப் போர்இனியவை நாற்பதுசிறுத்தைகணபதி பி. ராஜ் குமார்ஹாட் ஸ்டார்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்வெ. இராமலிங்கம் பிள்ளைநவரத்தினங்கள்மீன் வகைகள் பட்டியல்திருச்சிராப்பள்ளி🡆 More