மடகாசுக்கரின் வரலாறு

மிகப் பழைய காலத்திலேயே ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்த கண்டத்தில் இருந்து தனியாக ஒரு நிலத்திணிவாக இருந்ததாலும், பிற்காலத்திலேயே கிமு 200 முதல் கிபி 500 வரையான காலப்பகுதியில் சிறு படகுகளில் சுண்டாத் தீவுகளில் இருந்து குடியேறியதாலும் மடகாசுக்கரின் வரலாறு தனித்துவமானதாக உள்ளது.

இவ்விரு காரணிகளும் இத்தீவில் இப்பகுதிக்கே உரிய தாவர, விலங்கு இனங்கள் உருவாகி நிலைத்திருக்க உதவின. இவைகளுட் சில தற்போது மக்கள்தொகை அதிகரிப்பினால் அழிந்துவிட்டன அல்லது அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. கடந்த 2000 ஆண்டுகளில் ஆசுத்திரோனீசிய, பான்டு, அரபி, தென்னாசிய, சீன, ஐரோப்பிய மூலங்களைக் கொண்டோர் பல்வேறு அலைகளாக வந்து இத்தீவில் குடியேறியுள்ளனர். இன்றைய மடகாசுக்கரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆசுத்திரோனீசிய, பான்டு, அரபி, வட இந்திய, சோமாலிக் குடியேறிகளின் கலப்பு ஆவர். பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கலப்பு மணங்களினால் மலகாசி மக்கள் உருவாயினர். இவர்கள், பான்டு, மலாய், அரபி, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் செல்வாக்குகளுடன் கூடிய ஒரு ஆசுத்திரேனிய மொழியைப் பேசுகின்றனர். சராசரி மலகாசி ஒருவரின் மரபியல் அமைப்பு, சிறப்பாகக் கரையோரப் பகுதிகளில், ஆசுத்திரோனீசிய, பான்டு செல்வாக்குகளின் சம அளவான கலப்பு ஆகும். பிற மக்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட அளவுக்கே ஏற்கெனவே இருப்போருடன் கலந்துள்ளனர். இவர்கள் பெரும்பான்மை மலகாசி மக்களுக்குப் புறம்பாகத் தனியான சமூகமாக இருக்கவே விரும்புகின்றனர்.

ஐரோப்பிய மத்திய காலத்தை அண்டி, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான இன அடையாளங்கள் இத்தீவில் உருவாகின. இவை உள்ளூர் தலைவர்களினால் ஆளப்பட்டன. சக்கலவா, மெரினா, பெட்சிமிசராக்கா போன்ற சில சமூகங்களில், தலைவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சமூகங்களை இணைத்து உண்மையான இராச்சியங்களைத் தமது தலைமையில் உருவாக்கினர். இவ்விராச்சியங்கள், சட்டப்படியான அல்லது கடற் கொள்ளையர் என்ற வேற்பாடுகள் இன்றி, ஐரோப்பிய. அரேபிய, மற்றும் பிற கலடோடி வணிகர்களுடன் பரிமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு தம்முடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் அதிகரித்துக்கொண்டன. 16 க்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மடகாசுக்கரின் கரையோரப் பகுதிகளில் கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. பிரபலமான கடற்கொள்ளைக் குடியேற்றமான லிபேர்ட்டாலியா, முன்னர் மலகாசி மக்கள் வாழ்ந்த செயின்ட் மேரி தீவில் நிறுவப்பட்டிருந்தது. சக்கலாவா, மெரீனா இராச்சியங்கள் ஐரோப்பிய வணிகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஐரோப்பியச் சுடுகலன்களுக்கும் பிற பொருட்களுக்கும் மலகாசி அடிமைகளைப் பரிமாற்றம் செய்து, தமது அதிகாரத்தை வலுப்படுத்தின. இக்காலம் முழுதும், இந்துப் பெருங்கடற் பகுதியில் செயற்பட்ட ஐரோப்பிய, அரேபியக் கடலோடிகள் கரையோரச் சமூகங்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தீவில் தமது குடியேற்றங்களை நிறுவுவதற்கு ஐரோப்பியர் எடுத்த பல முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரித்தானிய, பிரெஞ்சுக் குடியேற்றவாதப் பேரரசுகள் இத்தீவின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்காகப் போரிட்டன.

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், ஆன்ட்ரியனிம்பொயின்மெரினா, மத்திய உயர் நிலப்பகுதியில் அமைந்திருந்ததும், அன்டனானரிவோவைத் தலைநகரமாகக் கொண்டதுமான, அதிக மக்கள்தொகையைக் கொண்டிருந்த இமெரீனா இராச்சியத்தை ஒன்றிணைத்தார். இவரது மகன் முதலாம் ரடாமா தீவிலிருந்த பிற சமூகங்களின் மீதும் தனது அதிகாரத்தை விரிவாக்கினார். வெளிநாட்டு வல்லரசு ஒன்றினால் பெரிய மெரீனாவின் அரசர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மலகாசி அரசர் இவரே. 19 ஆம் நூற்றாண்டில், மெரீனா அரசர்கள் பிரித்தானியருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியதன் மூலம் நவீனமயப்படுத்தலில் ஈடுபட்டனர். இதன் மூலம், ஐரோப்பியப் பாணிப் பள்ளிகளும், அரச நிறுவனங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாகின. அரசி இரண்டாம் ரணவலோனா, செல்வாக்குள்ள அரசியற் தலைவரும் முதலமைச்சருமான ரைனிலையாரிவோனி ஆகியோரின் கீழ் இலண்டன் மதப் பிரசாரச் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட கிறித்தவம் அரச மதம் ஆக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

ஆப்பிரிக்காஇந்தியாதாவரம்மலகாசி மக்கள்மலாய் மொழிவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒன்றியப் பகுதி (இந்தியா)மொழிபெயர்ப்புகுண்டூர் காரம்நாணயம்சுனில் நரைன்குலசேகர ஆழ்வார்கள்ளழகர் கோயில், மதுரைபெரியபுராணம்தொலைக்காட்சிஇந்திதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிறுதானியம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மாணிக்கவாசகர்கொங்கு வேளாளர்அண்ணாமலை குப்புசாமிமதீச பத்திரனதேம்பாவணிபகவத் கீதைதிருக்கோயிலூர்நீர் மாசுபாடுநீதிக் கட்சிசினேகாதிருமந்திரம்மெய்யெழுத்துமருது பாண்டியர்சைவத் திருமுறைகள்இந்திய வரலாறுசிவாஜி (பேரரசர்)திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்சுற்றுச்சூழல்ஆடு ஜீவிதம்ஹாட் ஸ்டார்இந்திய தேசிய காங்கிரசுபிந்து மாதவிஇலங்கையின் தேசியக்கொடிஜெயகாந்தன்பால் (இலக்கணம்)சச்சின் (திரைப்படம்)பாலியல் துன்புறுத்தல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அகமுடையார்முத்துராஜாதமிழ் நீதி நூல்கள்சேலம் மக்களவைத் தொகுதிஇயேசுவேலைக்காரி (திரைப்படம்)நற்றிணைமத்தி (மீன்)மலையாளம்அவள் ஒரு தொடர்கதைஇந்தியாவில் பாலினப் பாகுபாடுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வெள்ளியங்கிரி மலைசித்திரைவேலு நாச்சியார்தமிழ்நாடு சட்டப் பேரவைஜி. யு. போப்இரண்டாம் உலகப் போர்தேவதாசி முறைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்விந்துமுதல் மரியாதைசிவனின் 108 திருநாமங்கள்வைப்புத்தொகை (தேர்தல்)அனுமன்கொன்றைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்திய தேசியக் கொடிமாதம்பட்டி ரங்கராஜ்அவுரிநெல்லிவாசுகி (பாம்பு)பறவைக் காய்ச்சல்பாரத ஸ்டேட் வங்கிதிராவிசு கெட்பாட்டாளி மக்கள் கட்சி🡆 More