பாலம்

பாலம் என்பது, வீதிகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆறுகள், வேறு நீர்நிலைகள், பள்ளத்தாக்குகள் போன்ற தடைகளைக் கடப்பதற்காக கட்டப்படும் அமைப்புகள் ஆகும்.

பாலம் கட்டப்படும் அல்லது இணைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பின் தன்மை,  அதை உருவாக்கும் பொருள், மற்றும் அதை உருவாக்க கிடைக்கும் நிதி, பலத்தின் பயன்பாட்டு நோக்கம் ஆகிய வேறுபட்ட சூழ்நிலைகளைப் பொருந்தும் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. பொதுவாகப் பாலங்கள் அவற்றுக்குக் கீழாக வீதி அல்லது நீர்ப் போக்குவரத்துக்களை அனுமதிக்கக் கூடியதாக, தகுந்த உயரத்திலும், உரிய வடிவமைப்பிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

பாலம்
மரக்குற்றிகளால் அமைக்கப்பட்ட ஒரு பாலம்
பாலம்
கள்ளக்குறிச்சி, பாலம்

பொதுவாகப் பாலங்களின் நோக்கம், இடங்களுக்கிடையே தொடர்ச்சியானதும், சீரானதும், இலகுவாகப் பயணம் செயத்தக்கதுமான பாதையொன்றை உருவாக்குவதன் முலம் போக்குவரத்தை இலகுவாக்குவதாகும்.

பெயராய்வியல்

பாலம் 
பாம்பன் பாலம்

ஆங்கிலத்தில் பாலத்தைக் குறிப்பிட உதவும் சொல்லான பிரிட்ஜ் ( bridge) என்ற சொலானது, அதே பொருளைக் கொண்ட பழைய ஆங்கிலச் சொல்லான ப்ரைக் ( brycg) என்ற சொல்லில் இருந்து வந்ததாக ஆக்ஸ்போர்டு குறிப்பிடுகிறது. இந்தச் சொல் நேரடியாக ப்ரோட்டோ-இந்தோ-ஐரோப்பியன் சொல்லான ப்ச்ரே- (*bʰrēw-.) என்பதில் இருந்து வந்திருக்கலாம், அதே பெயரில் உள்ள சீட்டு அட்டை விளையாட்டுக்கான வார்த்தை வேறு தோற்றம் கொண்டதாகும்.

வரலாறு

பாலம் 
ஸ்பெயின், கொர்டோபாசவில் இருக்கும் கி.மு முதலாம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ரோமானிய பாலம்.

மனிதர்களால் அமைக்கப்பட்ட துவக்கக்காலப் பாலங்கள், மரக்குற்றிகள் அல்லது மரப்பலகைகள் நிர்மாணிக்கப்பட்டன. இத்தகைய பாலங்களை இன்றும் கிராமப் பகுதிகளில் காணமுடியும். இதற்காகப் பொதுவாக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும். பின்னர் கல்லாலான தூண்களின் மீது கல்லாலான அல்லது மர உத்தரங்களை வைத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த  எளிமையான பால ஏற்பாட்டு முறைகள் மூலம் கூடிய தூரங்களைக் கடக்கப் பாலம் அமைக்க முடியாது. சில துவக்கக்கால அமெரிக்கர்கள் மரங்கள் அல்லது மூங்கில்களை கிணறுகள், சிறு குகைகள் போன்றவற்றை கடக்க பயன்படுத்தினர். நீளமான நாணல் அல்லது மற்றவகை நார்களைப் பயன்படுத்தி, பெரிய கயிறுகளை உருவாக்கி அதில் குச்சிகள் கட்டைகள் ஆகியவற்றைப் பினைத்து, துவக்கக்காலப் பாலங்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டது.

பாலம் 
கிரேக்கத்தில் உள்ள அர்கடிகா பாலத்தின் (கி.மு. 13 ஆம் நூற்றாண்டு), பழமையான வளைவுகளில் ஒன்று

பாலங்களும், நீர்காவிகளும் அமைப்பதற்காக வளைவு (கட்டிடக்கலை) அமைப்புகளை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் ரோமானியர் ஆவர். இவர்கள் கட்டிய மேற்படி அமைப்புக்கள் சில இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடியும். தெற்கு கிரேக்கத்தில் உள்ள பெலொபோனீசின் டிரினோஸ் கோட்டை மற்றும் எடிடோரோஸ் நகரம் ஆகியவற்றுக்கு இடையில் இரதங்களுக்கு இடமளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சாலையின் நான்கு மைசெனீயன் கோல்பெல் வளைவுகளில் ஒன்று அர்காடிகா பாலம் ஒன்றாகும். கிரேக்க வெண்கலக் காலத்தில் (கி.மு. 13 ஆம் நூற்றாண்டு) இருந்து, தற்போதுவரை உள்ள பழமையான வளைவுகளில் இது ஒன்றாகும். ஹெலனிய காலத்தில் இருந்து பல உள் வளைந்த கற்ப் பாலங்கள் கிரேக்கத்தின் பெலொபோனீஸ் பகுதியில் காணப்படுகின்றன.

பழங்காலத்தில் மிகப் பெரிய பாலங்களைக் கட்டியவர்கள் பண்டைய ரோமர்களே. ரோமர்கள் நன்கு நிற்கக்கூடிய வளைவான பாலங்கள் மற்றும் தொட்டிப் பாலங்களை சிறப்பான முறையில் கட்டினார்கள். இதனால் அவர்களுக்கு முந்தைய கால பாலங்களின் வடிவமைப்புகள் சேதமுற்று அல்லது அழியக்கூடிய நிலைமை ஏற்பட்டது, சில இன்றுவரை நிற்கின்றன. ஸ்பெயினில் அல்கந்தாரா எனும் இடத்தில் டாங்கஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அல்கந்தாரா பாலம் ஒரு எடுத்துக்காட்டு. தண்ணீர், எலுமிச்சை, மணல், எரிமலைக் கல் ஆகியவற்றை உள்ளடக்கிய பாஸ்ஸோலானா எனப்படும் ஒரு வகை சிமெண்டை ரோமர்கள் பயன்படுத்தினர், இது இயற்கை கல்லில் காணப்படும் வலிமை மாறுபாட்டை குறைத்தது. ரோமானியப் போருக்குப் பிறகு செங்கல் மற்றும் மோட்டார் பசைகளைக் கொண்டு பாலங்கள் கட்டப்பட்டன, இதனால் சிமெண்ட் தொழில்நுட்பத்தை இழந்து விட்டனர் (பின்னர் மறுபரிசீலனை செய்யப்பட்டது).

இந்தியாவில், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் அணைகள், பாலங்களை போன்றவற்றை நிர்மாணிப்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன. கிர்நாரில் ஒரு மவுரியப் பாலம், ஜேம்ஸ் பிரின்ஸ்ப் அவர்களால் ஆராயப்பட்டது. இந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் பேரரசர் சந்திரகுப்தரின் பிரதான கட்டடக்கலை வல்லுனரான புஸ்பதுபதியால் சரி செய்யப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மூங்கில் மற்றும் இரும்பு சங்கிலியைப் பயன்படுத்தி வலுவான பாலங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இராணுவ மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பல பாலங்கள், இந்தியாவில் முகலாய நிர்வாகத்தால் கட்டப்பட்டன.

மரபு கட்டுமானங்களின் பெரிய சீன மரப் பாலங்கள் போரிடும் நாடுகள் காலத்தில் இருந்த போதிலும், சீனாவில் பழங்காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் கல் பாலம் சுயி அரசமரபு காலத்தின் போது கி.மு. 595 முதல் 605 காலகட்டத்தில் கட்டப்பட்ட சாக்சோவ் பாலம் ஆகும். இது உலகின் பழமையான கல்லால் கட்டப்பட்ட வளைவுப் பாலம் என்பதால் இந்த பாலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பால வகைகள்

பாலங்களில் ஆறு முக்கிய வகைகள் உள்ளன. அவை

  • கற்றை பாலம்
  • பிடிமானமான பாலம் (cantilever bridges)
  • வளைவு பாலங்கள்
  • தொங்கு பாலங்கள்
  • வடம்-தங்கி பாலங்கள்
  • சட்டக பாலங்கள்.
கற்றை பாலம்
பாலம் 
இவை இருபுறங்களிலும் தாங்கும் அமைப்பை கொண்ட ஒரு கிடைமட்ட கரையை கொண்டவை ஆகும் இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாங்கும் அமைப்புகளை கொண்டிருக்கலாம்.வேறுபட்ட தூரங்களுக்காக ஓரங்களை தவிர பல தாங்கு தூண்களை கொண்டிருக்கும்.அமைப்பானது பியர்ஸ் என்று அழைக்கப்படும். இவை இரும்பு,மரம்,கற்காரை என பலவகைப்பட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படலாம்.

உலகில் மிக நீண்ட கற்றை பாலமானது லூசியானாவில் உள்ள பொன்ட்சார்ட்ரைன் ஏரி பாதை ஆகும்.இது 23.83 மைல்கள் (38.35 km) நீளமுடையதாகும்..அதன் தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் 56 அடிகள் (17 m) ஆகும். இவை உலகில் அதிகமாக காணப்படும் வகை பாலமாகும்.

சட்டக பாலங்கள்
பாலம் 
சட்டக பாலங்களில் அதன் எடை தாங்கும் திறன் அதன் சட்டங்களில் சமமாக பகிரப்படுவதால் அதிக எடையை தாங்க வல்லதாக உள்ளது.இது முக்கோண வடிவ உலோக சட்டங்களை இணைத்து கட்டப்பட்டிருக்கும்.இவை 19 மற்றும் 2௦ ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.இதுவே நவீன கால பாலங்களில் பழமையானது.மேலும் இது கட்டுமான பொருட்களை அதிக அளவில் மிச்சப்படுத்துகிறது.
பிடிமான பாலம்
பாலம் 
பிடிமான பாலங்கள் ஒரே ஒரு முனையில் மட்டும் பிடிமானத்தை கொண்டிருக்கும் பாலங்கள் ஆகும்.பொதுவாக நகரக்கூடிய

வகை பாலங்கள் இந்த முறையில் கட்டப்பட்டிருக்கும்.இதில் இருபுறமிருந்தும் பிடிமானங்கள் மூலம் கட்டப்பட்டு மையப்பகுதியில் சேருமாறு அமைக்கப்பட்டிருக்கும். உலகின் மிகப்பெரிய பிடிமான பாலம் கனடாவின் கியுபெக் நகரில் இருக்கும் 549-மீட்டர் (1,801 அடி) நீளமுடைய கியுபெக் பாலம் ஆகும்

வளைவு பாலங்கள்
பாலம் 
வளைவு பாலங்கள் அவற்றின் இருபுறங்களிலும் கீழ்நோக்கிய வளைவுகளை கொண்டிருக்கும்.இப்பாலத்தின் எடையானது அதன் இரு ஓரங்களிலும் சமமாக பங்கிடப்பட்டிருக்கும்.

தற்போது உலகில் உள்ளவற்றில் மிகப்பெரிய வளைவு பாலமானது சீனாவின் யங்ட்சே நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 1,741 நீளமும் 552 மீட்டர் உயரமும் கொண்ட சோடியான்மென் பாலமாகும்.

இணைக்கப்பட்ட வளைவு பாலம்
பாலம் 
இவை வழக்கமான வளைவு பலன்களை போல அல்லாமல் வளைவுகளை மேற்புறம் கொண்டும்,பல இணைப்பு தூண்களை கொண்டும் உள்ளது.வளைவு பாலங்கள் அதன் எடையை அதன் ஓரங்களில் நிலைபெற செய்திருக்கும்.ஆனால் இவை அதன் எடை முழுவதையும் பாலத்தின் கிடைமட்டப்பகுதியில் பகிருகிறது.இவை வில் நாண் வளைவுகள் என்றும் அழைக்கப்படும்.
வடம்-தங்கி பாலங்கள்
பாலம் 
வடம்-தங்கி பாலங்கள் பொதுவாக கம்பிவடத்தால் தாங்கப்படுகின்றன.முதன்முதலில் கம்பிகளுக்கு பதில் மூங்கிலால் சூழப்பட்ட கயிறுகள் பயன்படுத்தப்பட்டன.இவற்றில் பாலத்தின் முழுப்பகுதியும் ஆங்காங்கே

அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து கோபுரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உலகின் மிக நீண்ட கம்பிவட பாலம் 3,909 m (12,825 அடி) நீளமுடைய ஜப்பானின் அகாஷி கைக்யூ பாலம் ஆகும்.

கம்பிவட தாங்கு பாலம்
பாலம் 
இவையும் வடம்-தங்கி பாலங்களை போலவே இருப்பினும் இதில் குறைந்த அளவிலான கம்பிவடன்களே தேவைப்படுகிறது.அண்ணல் கம்பிகளை தாங்கும் செங்குத்து கோபுரங்களின் உயரம் அதிகமாக இருக்கும்..

இந்த வகையி உலகிலேயே மிக நீண்ட பாலம் சீனாவின் யங்ட்ஜீ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுடோங் பாலமாகும்.

நிலையான பாலங்களும் அசைக்கக்கூடிய பாலங்களும்

அதிகமான பாலங்கள் நிலையான பாலங்களாகவே காணப்படுகின்றன. அதாவது அவற்றிடம் அசைக்கக்கூடிய எந்தவொரு பகுதியும் காணப்படாது. அவை பழுதடையும் வரை அல்லது இடிக்கப்படும் வரை ஒரே இடத்திலேயே இருக்கும். பெய்லி பாலங்களைப் போன்ற (Bailey bridges) தற்காலிக பாலங்கள், விரும்பிய வாறு மாற்றக் கூடியதாகவும் பகுதிகளை பிரித்து எடுக்கக் கூடியதாகவும் விரும்பியவாறு பாலம் இருக்கும் திசையை மாற்றக் கூடியதாகவும் மீள்-பாவனைக்கு உட்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இவ்வகைப் பாலங்கள் இராணுவப் பொறியியலில் (military engineering) முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் பாழடைந்த பாலங்கள் சீர் செய்யப்படும் போது அவற்றுக்குப் பதிலாக இவ்வகைப் பாலங்களைப் பயன்படுத்தலாம். இவையெல்லம் பொதுவாக மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன.

பொருளை வைத்து பாலத்தை வேறுபடுத்தல்

பாலத்தின் அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருளை வைத்தும் பாலங்களை வகைப்படுத்தலாம். 18 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை பாலங்கள் மரம், கற்கள் போன்றவற்றாலையே உருவாக்கப்பட்டது. புதிய வகைப் பாலங்கள் கொங்கிரீட், உருக்கு, துருப்பிடிக்காத உருக்கு அல்லது சேர்க்கைகள் போன்றவற்றல் கட்டப்பட்டு வருகின்றது.

உச்சாதுணைகள்

பாலம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bridges
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பாலம் பெயராய்வியல்பாலம் வரலாறுபாலம் பால வகைகள்பாலம் உச்சாதுணைகள்பாலம்அமைப்புஆறுநீர்நிலைபள்ளத்தாக்குவீதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலைபடுகடாம்திருப்பூர் குமரன்நந்திவர்மன் (திரைப்படம்)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்விநாயகர் அகவல்பத்துப்பாட்டுசேலம்பொது உரிமையியல் சட்டம்ஒற்றைத் தலைவலிசெயற்கை மழைதிருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)சுந்தர காண்டம்தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்நெசவுத் தொழில்நுட்பம்சினேகாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்விபுலாநந்தர்ஆதி திராவிடர்அயோத்தி இராமர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்யானைநக்சலைட்டுசெந்தாமரை (நடிகர்)ஹோலிஞானபீட விருதுகொரோனா வைரசுதிருமால்அறுசுவைகாம சூத்திரம்வன்னியர்தேம்பாவணிதொல். திருமாவளவன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்நோட்டா (இந்தியா)அரசியல்கருக்கலைப்புகண்ணதாசன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்நாட்டின் அடையாளங்கள்நற்றிணைசிவாஜி (பேரரசர்)கள்ளழகர் கோயில், மதுரைஇந்தியாவின் மக்கள் தொகையியல்புதிய மன்னர்கள்ஜெயம் ரவிபாண்டியர்சுப்பிரமணிய பாரதிதேவேந்திரகுல வேளாளர்கடையெழு வள்ளல்கள்காஞ்சிபுரம்சிங்கப்பூர்ஆரணி மக்களவைத் தொகுதிஇன்னா நாற்பதுகருமுட்டை வெளிப்பாடுகர்ணன் (மகாபாரதம்)சிறுநீரகம்திருவிழாசென்னைபுற்றுநோய்சிவாஜி கணேசன்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)இந்தியாவில் இட ஒதுக்கீடுபெ. ஜான் பாண்டியன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிகடிதம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிவஞான முனிவர்இந்திய வரலாறுநாளிதழ்கஞ்சாதிருப்பூர் மக்களவைத் தொகுதிமத கஜ ராஜா🡆 More