பருப்பொருளியல்

பருப்பொருளியல் (அ) பருவினப் பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும்.

மற்றொன்று நுண்பொருளியல் (microeconomics) ஆகும். பருப்பொருளியல் நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வேலையின்மை வீதம், விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம், விளைவு, நுகர்வு, வேலையின்மை, பணவீக்கம், சேமிப்பு, முதலீடு, பன்னாட்டு வணிகம், பன்னாட்டு நிதியம் போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை விகிதம ஆகியவற்றை குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்திட்டம், நாட்டின் நிதி கொள்கை (Fiscal policy), ஒரு நாட்டின் பண அமைப்பை கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை (monetary policy), வணிக சுழற்சிகள் (Business cycles), பணவீக்கம் (inflation) மற்றும் பணவாட்டம் (deflation) இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், நுகர்வோர் போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட சந்தையில் காணும் விலைகள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.

Tags:

சந்தைசேமிப்புநுகர்வுநுகர்வோர்நுண்பொருளியல்பணவீக்கம்பன்னாட்டு வணிகம்பொருளியல்முதலீடுமொத்த உள்நாட்டு உற்பத்திவிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பயில்வான் ரங்கநாதன்மெட்பார்மின்பரதநாட்டியம்இராமர்புனித ஜார்ஜ்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அவதாரம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019வல்லினம் மிகும் இடங்கள்ஸ்ரீமத கஜ ராஜாகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்சிறுவாபுரி முருகன் கோவில்ரயத்துவாரி நிலவரி முறைமரகத நாணயம் (திரைப்படம்)கீழடி அகழாய்வு மையம்புற்றுநோய்சிறுபஞ்சமூலம்சிறுதானியம்ரஜினி முருகன்மூலம் (நோய்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முத்துராமலிங்கத் தேவர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வெப்பநிலைபுறப்பொருள்செண்டிமீட்டர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நீர் பாதுகாப்புதேர்தல்பரிதிமாற் கலைஞர்பாண்டியர்சூரைநாணயம்பெண்கருக்காலம்உன்னாலே உன்னாலேவட்டாட்சியர்நாயக்கர்உயர் இரத்த அழுத்தம்குருதி வகைநம்மாழ்வார் (ஆழ்வார்)சிலம்பம்நாயன்மார்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சிறுபாணாற்றுப்படைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தரங்கம்பாடிகாதல் கொண்டேன்ஜீரோ (2016 திரைப்படம்)கேரளம்டுவிட்டர்இன்னா நாற்பதுஎட்டுத்தொகைதீபிகா பள்ளிக்கல்சோளம்வினோஜ் பி. செல்வம்கம்பர்உத்தரகோசமங்கைதிருப்பூர் குமரன்ர. பிரக்ஞானந்தாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நஞ்சுக்கொடி தகர்வுஇரண்டாம் உலகப் போர்திருமுருகாற்றுப்படைதிதி, பஞ்சாங்கம்தங்க மகன் (1983 திரைப்படம்)தெலுங்கு மொழிவினோத் காம்ப்ளிருதுராஜ் கெயிக்வாட்சுந்தரமூர்த்தி நாயனார்ஆண்டாள்ஜன கண மனகாளமேகம்யாப்பிலக்கணம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்🡆 More