நிக்கோலா தெஸ்லா

நிக்கோலா தெசுலா (Nikola Tesla, செர்பிய மொழி: Никола Тесла, நிக்கொலா தெஸ்லா, 10 சூலை 1856 – 7 சனவரி 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார்.

குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெஸ்லாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.

நிக்கொலா தெசுலா
Nikola Tesla
நிக்கோலா தெஸ்லா
நிக்கொலா தெசுலா, அண். 1896
பிறப்பு(1856-07-10)10 சூலை 1856
சிமிலியான், ஆத்திரியப் பேரரசு (இன்றைய குரோவாசியாவில்)
இறப்பு7 சனவரி 1943(1943-01-07) (அகவை 86)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
இதயநாடிக் குருதியுறைவு
குடியுரிமைஆத்திரியர் (1856–1891)
அமெரிக்கர் (1891–இறப்பு வரை)
கல்விகிராசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
பொறியியல் துறை
துறைமின் பொறியியல்,
இயந்திரவியல்
செயல் திட்டங்கள்மாறுதிசை மின்னோட்டம்
குறிப்பிடத்தக்க வடிவமைப்புகள்தூண்டல் மின்னோடி
சுழல் காந்தப்புலம்
தெசுலா சுருள்
வானலை தொலையியக்கி வாகனம் (நீர்மூழ்கிக் குண்டு)
விருதுகள்எடிசம் பதக்கம் (1916)
பாரிசு பல்கலைக்கழக பதக்கம் (1937)
கையொப்பம்நிக்கோலா தெஸ்லா

1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி) பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "மின்னோட்டப் போரில்" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார். இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன. அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.

நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.

சுவாமி விவேகானந்தரும் நிகோலா டெஸ்லாவும்

வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறிய அப்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகளில் நிகோலா டெஸ்லாவும் ஒருவர். நிகோலா டெஸ்லா உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டவர். 1896 பிப்ரவரி 5-இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார்.

அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞ‍ர்கள் நம்பியிருந்தார்கள்.

ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே; ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.

மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது.

நோபல் பரிசும் தெஸ்லாவும்

மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர்.

இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு 1912-ம் ஆண்டு, இவருடைய உயர் மின்னழுத்த உயர் அதிர்வெண் ஒத்ததிர்வு மின்மாற்றிகள் பயன்படுத்தி வடிவமைப்பு சுற்றுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக புரளி வெளியானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நிக்கோலா தெஸ்லா சுவாமி விவேகானந்தரும் நிகோலா டெஸ்லாவும்நிக்கோலா தெஸ்லா நோபல் பரிசும் தெஸ்லாவும்நிக்கோலா தெஸ்லா மேற்கோள்கள்நிக்கோலா தெஸ்லா வெளி இணைப்புகள்நிக்கோலா தெஸ்லா19ம் நூற்றாண்டு20ம் நூற்றாண்டுஆஸ்திரியாஐக்கிய அமெரிக்காகாந்தவியல்குடியுரிமைகுரொவேசியாசெர்பியாமாறுதிசை மின்னோட்டம்மின் வழங்கல்மின்னியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேஜஸ்வி சூர்யாபதினெண் கீழ்க்கணக்குகல்விபால், பாலின வேறுபாடுகபிலர் (சங்ககாலம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஆதிமந்திரவிசீனிவாசன் சாய் கிஷோர்நீலகேசிவீரமாமுனிவர்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கர்ணன் (மகாபாரதம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்பாலின சமத்துவமின்மைதூத்துக்குடிதமிழக மக்களவைத் தொகுதிகள்மூவேந்தர்கும்பம் (இராசி)அறுபடைவீடுகள்இலட்டுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பௌர்ணமி பூஜைமுதலாம் இராஜராஜ சோழன்சுபாஷ் சந்திர போஸ்யசஸ்வி ஜைஸ்வால்திருமந்திரம்கருப்பை நார்த்திசுக் கட்டிசுந்தர காண்டம்குண்டூர் காரம்ஜிமெயில்புதுச்சேரிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பால் (இலக்கணம்)தங்கம்பனைநிலாமெய்யெழுத்துஆசாரக்கோவைமுல்லைக்கலிமறவர் (இனக் குழுமம்)இதயம்வெள்ளியங்கிரி மலைகாயத்திரி ரேமாபித்தப்பைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிவேகானந்தர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சுற்றுச்சூழல் கல்விதிருச்சிராப்பள்ளிபுவி சூடாதல்சித்திரகுப்தர் கோயில்தவசிம. பொ. சிவஞானம்வாணிதாசன்இந்திய புவிசார் குறியீடுஇந்திய தேசியக் கொடிசமூகம்உதயநிதி ஸ்டாலின்வினையெச்சம்சீமான் (அரசியல்வாதி)அருந்ததியர்எலன் கெல்லர்வெண்குருதியணுசென்னைதிட்டக் குழு (இந்தியா)இராமர்காச நோய்தமிழர் நெசவுக்கலைமனித எலும்புகளின் பட்டியல்வினைச்சொல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்நீரிழிவு நோய்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபழந்தமிழகத்தில் கல்விகண் பாவைதொல். திருமாவளவன்🡆 More