நலம்: மன

நலம் (Health) என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமின்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.

இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக சுகாதார அமைப்பின் ஒட்டாவா நல மேம்பாட்டுப் பட்டயம் (Ottawa Charter for Health Promotion) போன்ற ஆவணங்களில் கொடுத்துள்ள வரைவிலக்கணங்களும் பயன்படுகின்றன. மேற்படி பட்டயம், நலம் அன்றாட வாழ்க்கைக்கான ஒரு மூல வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல என்றும் அது தனிப்பட்ட, சமூக வளங்களுக்கும், உடற் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நேர்க் கருத்துரு என்றும் கூறுகிறது.

வகைப்பாட்டு முறைகளும் நலம் என்பதை விளக்குகின்றன. உலக வகைப்பாட்டு முறைகள் குடும்பம், செயல்பாடு, மாற்றுத்திறன், நலம் என்பவற்றுக்கான அனைத்துலக வகைப்பாடு, நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

நலம் சமூகத்தின் பல்வேறு கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. உயிரிய, சூழலியல், வாழ்விய, சமூக, அரச, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின், அவர் சார்ந்த சமூகத்தின் நலத்தைத் தீர்மானிக்கிறது. ஒருவர் உணவு, உடற்பயிற்சி, கல்வி, உறவுகள், சமூகத் தொடர்புகள், வீட்டு வேலைச் சூழல், மருத்துவச் சேவைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனப் பல நுண்ணிய கூறுகள் ஒருவரின் நலத்தைத் தீர்மானிக்கின்றன. அதனால் நலம் என்பதை நோய், நோயை குணப்படுத்தல் என்ற குறுகிய வரையறைக்குள் விளக்க முடியாது.

நலனைப் பாதிக்கக் கூடிய காரணிகள்

சமூகக் காரணிகள்

பொதுவாக ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய உடல்நிலையும், வாழ்க்கைத் தரமும் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. இவர்களுடைய நலம் என்பது அறிவியல் முன்னேற்றங்களை மட்டும் சார்ந்து இல்லாமல் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தனிமனித செயல்பாடுகள், அவர்கள் சார்ந்துள்ள சமூகம் ஆகியவை மிக முக்கிய காரணிகளாக உள்ளன. உலக சுகாதார அமைப்பின்கருத்துப்படி நலம் என்பதன் மிக முக்கிய காராணியாக இருப்பது சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகள், உடல் நிலை, தனி மனிதச் செயல்பாடு ஆகியவை ஆகும்.

மக்களின் நலனில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய மிகமுக்கியமான காரணிகள் பின்வருமாறு:

கனடாவின் லாலண்ட் அறிக்கையானது சுகாதாரத் துறை என்பது பற்றிய அறிக்கையில் ஒரு தனிமனிதனுடைய உடல்நலத்தில் மூன்று முக்கிய துறைகள் உள்ளன என்று கூறியுள்ளது. அவையாவன:

  1. வாழ்க்கை முறை
  2. சுற்றுச் சூழல்
  3. உயிர் மருத்துவம்

சாத்தியமான சிக்கல்கள்

தொற்றா நோய்கள்

பொதுவாக, உலகில் நலத்திற்கு எதிரான பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் நோய் என்பது முதன்மையானது ஆகும். குளோபல் இஸ்யூஸ். ஆர்க் என்பதன் அறிக்கையின் படி புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் போன்ற தொற்றாத நோய்களால் சுமார் 36 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

தொற்று நோய்கள்

தொற்று நோய்களில், வைரஸ் மற்றும் பாக்டீரியா, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்றவைகளால் ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் மரணங்கள் ஏற்படுகின்றன.

மற்றவைகள்

மரணத்தை ஏற்படுத்த கூடிய மற்ற காரணங்களில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இவ்வகையான நோயானது குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. பொதுவாக ஐந்து வயதிற்கும் குறைவான சுமார் 7.5 மில்லியன் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமலோ அல்லது பொருளாதாரக் காரணங்களால் போதுமான உணவு இல்லாததாலோ இறக்கின்றனர். (2014)

உடல் காயங்களும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. உடைந்த எலும்புகள், எலும்பு முறிவுகள் மற்றும் தீக்காயங்கள் ஆகியவை மனிதனுடைய நலனைப் பாதிக்கின்றன.(மோஃபெட், 2013).

நலமின்மைக்கான மற்ற சில காரணிகள் மோசமான உடல்நலமும், வாழ்க்கைத் தேர்வுகளும் ஆகும். மேலும் அளவிற்கு அதிகமாக உணவினை உட்கொள்வது அல்லது அதிகப்படியான கட்டுப்பாடான உணவை உட்கொள்வது, தூக்கமின்மை, பழக்க அடிமைத்தனம், குடிப்பழக்கம் மற்றும் மரபுவழிக் காரணங்கள் ஆகியவைகள் உள்ளன. (2013)

உடல்நலமின்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான அளவு தீர்வுகள் இல்லாததே பெரும்பான்மையான பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

மன நலம்

உலகச் சுகாதார நிறுவனம் மனநல ஆரோக்கியத்தைப் பற்றி பின்வருமாறு விவரிக்கிறது: "நபர் ஒருவர் தனது சொந்த திறன்களை உணர்ந்துகொள்வது, வாழ்க்கை முறைகளில் உள்ள பிரச்சினைகளைச் சமாளிப்பது, உற்பத்தி ரீதியாகவும், பயனுள்ள வகையிலும் வேலை செய்வது, மேலும் அவரது பங்கிற்கு அவரது சமூகத்திற்கு உதவி செய்வது ஆகும். மனநலமின்மை இல்லாதது மட்டுமே மனநலம் ஆகாது.

மன அழுத்தம்

நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனலாம். அதிர்ச்சி, நோய்த்தொற்று, நஞ்சு, உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாகக் கூறலாம். பலவகையான மனவியல் காரணிகள் இருக்கின்றன. மன அழுத்தத்தைப் பலர் மன நோயுடன் ஒப்பிட்டாலும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் இதை உடல்ரீதியான செயல்பாடு மற்றும் சமநிலையில் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இதைக் குறிக்கிறார்கள். தங்களைச் சுற்றி நடப்பவை காரணமாக அழுத்தம் ஏற்படும் போது, அதற்கு எதிர்வினையாகச் சில இரசாயனங்கள் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயனங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் பலத்தை அளிக்கின்றன.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

பராமரித்தல்

உணவுக் கட்டுப்பாடு

நலம்: நலனைப் பாதிக்கக் கூடிய காரணிகள், சாத்தியமான சிக்கல்கள், மன நலம் 
அதிக எடை OECD 2010

மக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு முக்கியமான வழி ஆரோக்கியமான உணவைக் கொண்டிருக்க வேண்டும். தாவரம் மற்றும் விலங்குகள் உடல் இயங்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. எலும்பு, தசைகள், தசை நார்களை வலுப்படுத்த இவை உதவி செய்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதயநோய்க்கான ஆபத்தைக் குறைக்கலாம். மேலும் இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க இயலும்.

பரிந்துரைகள்

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பு (WHO) மக்கள் மற்றும் தனிநபர்களுக்கு பின்வரும் ஐந்து பரிந்துரைகளை வழங்குகிறது:

1.நீங்கள் பயன்படுத்தும் கலோரிகளின் எண்ணிக்கையைச் சற்றுக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம்.

2. கொழுப்புகளை உட்கொள்வதை குறைத்தல்

3. .தாவர உணவுகள், குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டைகளின் நுகர்வுகளை அதிகரித்தல் .

4. சர்க்கரை உட்கொள்வதை கட்டுப்படுத்தவும். 2003 அறிக்கையானது எளிய சர்க்கரைகளில் 10% க்கும் குறைவான கலோரி உட்கொள்ளுதலை பரிந்துரைக்கிறது.

5. அளவான உப்பினை சேர்த்தல், உப்பில் அயோடின் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

ஆரோக்கியமான உணவு என்பது ஒருவருடைய உடல் நலத்தைப் பராமரிக்கவும், பேணிக்காக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான பத்தியம் என்பது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளான திரவம், புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை வழங்குகிறது. ஒரு ஆரோக்கியமான உணவிற்கான தேவைகள் பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கு சார்ந்த உணவுகளிலிருந்து கிடைக்கிறது. மேலும் உடல் எடையை அதிகரிக்காது ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

அமெரிக்க வேளாண்துறை (யு.எஸ்.டி.ஏ)

அமெரிக்காவின் வேளான்துறைகள் கீழ்கானும் அட்டவணையில் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலை அளித்துள்ளது.

உப குழு(பிரிவுகள்) ஆரோக்கியமான யு.எஸ் வடிவங்கள் ஆரோக்கியமான சைவ உணவு வகைகள் ஆரோக்கியமான மெட்-வகை உணவு வகைகள்
பழம் 2 2 2.5
காய்கறிகள் 2.5 2.5 2.5
பச்சை காய்கறிகள் 1.5/wk 1.5/wk 1.5/wk
சிவப்பு / ஆரஞ்சு 5.5/wk 5.5/wk 5.5/wk
சுவையானவை 5/wk 5/wk 5/wk
பருப்பு வகைகள் 1.5/wk 3/wk 1.5/wk
மற்றவைகள் 4/wk 4/wk 4/wk
தானியங்கள் 6 6.5 6
சுத்திகரிக்கப்பட்டது 3 3 3
பால் பொருட்கள் 3 3 2
புரத உணவுகள் 5.5 3.5 6.5
இறைச்சி 12.5/wk -- 12.5/wk
கோழி 10.5/wk -- 10.5/wk
கடல் உணவுகள் 8/wk -- 15/wk
முட்டைகள் 3/wk 3/wk 3/wk
கொட்டைகள்/விதைகள் 4/wk 7/wk 4/wk
சோயா 0.5/wk 8/wk 0.5/wk
எண்ணெய் 27 27 27
திட கொழுப்பு 18 21 17
கூட்டு சர்க்கரை 30 36 29

தூக்கம்

மனிதர்களுடைய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு தூக்கம் என்பது மிக முக்கியமான அம்சமாகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தூக்கம் என்பது அவசியமாகும். தொடர்ந்து காணப்படும் தூக்கமின்மையும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

வயது மற்றும் நிபந்தனைகள் தூக்க நேரம்
பிறந்த குழந்தைகள் (0–3 மாதங்கள்) 14 முதல் 17 மணித்துளிகள்
சிசு (4–11 மாதங்கள்) 12 முதல் 15 மணித்துளிகள்
தவழும் குழந்தை (1–2 ஆண்டுகள்) 11 முதல் 14 மணித்துளிகள்
முன்பள்ளிப் பருவம் (3–5 ஆண்டுகள்) 10முதல் 13 மணித்துளிகள்
பள்ளிப்பருவ குழந்தைகள் (6–13 ஆண்டுகள்)       9 முதல் 11 மணித்துளிகள்
விடலைப் பருவத்தினர் (14–17 ஆன்டுகள்)   8 to 10 மணித்துளிகள்
முதிர் அகவையர் (18–64 ஆண்டுகள்)   7 முதல்9 மணித்துளிகள்
முதியோர் (65 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேல்)   7 முதல் 8 மணித்துளிகள்

அறிவியலின் பங்கு

டச்சு பொது சுகாதார சேவை, கிழக்கிந்திய டச்சு அமைப்பு, 1946 மே மாதத்தின் உள்ளூர் மக்களுக்காக மருத்துவ சேவைகளை வழங்கியபோது

உடல்நல அறிவியல் என்பது மனித உடல் நலத்தின் கூறுகளில் கவனம் செலுத்துகின்ற அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். இவை இரண்டு அனுகுமுறைகளை உடல்நல அறிவியலில் கடைபிடிக்கின்றன. அவையாவன,

  • மனித உடலை பற்றிய ஆராய்ச்சி செய்தல் மற்றும் மனித மற்றும் விலங்குகளின் உடலானது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய உடல் நலச் சிக்கல்களை அறிதல்
  • நோய்கள், உடல், உள வலுக்குறைகளிலிருந்து பாதுகாத்தல், குணப்படுத்துதல்.

மேலும் அறிவியல் என்பது பல உட்பிரிவுகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அவையாவன, உயிரியல், உயிர் வேதியியல், இயற்பியல்,மருந்தியல், சுகாதார கல்வி.

மேற்கோள்கள்

Tags:

நலம் நலனைப் பாதிக்கக் கூடிய காரணிகள்நலம் சாத்தியமான சிக்கல்கள்நலம் மன நலம் மன அழுத்தம்நலம் மன அழுத்தத்தின் அறிகுறிகள்நலம் பராமரித்தல்நலம் தூக்கம்நலம் அறிவியலின் பங்குநலம் மேற்கோள்கள்நலம்1948உடல்உலக சுகாதார அமைப்புஉள்ளம்சமூகம்நோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகலித்தொகைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஒற்றைத் தலைவலிசிங்கப்பூர்கலாநிதி வீராசாமிரவிசீனிவாசன் சாய் கிஷோர்உருவக அணிமோனைசரத்குமார்திருவண்ணாமலைபோக்குவரத்துசூரைஈரோடு தமிழன்பன்சிலப்பதிகாரம்மறைமலை அடிகள்திருமலை நாயக்கர் அரண்மனைமார்ச்சு 26சுற்றுச்சூழல் மாசுபாடுபனிக்குட நீர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்மனித மூளைபிரீத்தி சிந்தாவிருதுநகர் மக்களவைத் தொகுதிபிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)பெண்குறிஞ்சிப் பாட்டுவடிவேலு (நடிகர்)மக்களாட்சிசு. வெங்கடேசன்நீரிழிவு நோய்சுருதி ஹாசன்குருதிச்சோகைமயங்கொலிச் சொற்கள்நீர்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிசிவன்நருடோசுற்றுச்சூழல்கருக்கலைப்புதேவாரம்சுப்பிரமணிய பாரதிமயக்கம் என்னதமிழிசை சௌந்தரராஜன்இந்திய அரசியல் கட்சிகள்கேழ்வரகுநல்லெண்ணெய்குணங்குடி மஸ்தான் சாகிபுகல்பனா சாவ்லாபின்வருநிலையணிஇயேசுநுரையீரல்நா. முத்துக்குமார்ஆண்டாள்இராவண காவியம்தமிழக வரலாறுகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அருச்சுனன்உயிர்ச்சத்து டிநாலடியார்நற்கருணை ஆராதனைதினேஷ் கார்த்திக்கடல்ஈழை நோய்முக்கூடற் பள்ளுதுரை வையாபுரிதுக்ளக் வம்சம்காப்பியம்ஆகு பெயர்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்மரவள்ளிநெய்தல் (திணை)மாமல்லபுரம்மு. கருணாநிதிகாடுவெட்டி குருகள்ளு🡆 More