திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார்.

இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன்
பிறப்புகுமாரசாமி முதலியார்
1904
சென்னிமலை, ஈரோடு, தமிழ்நாடு
இறப்பு1932
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி
வாழ்க்கைத்
துணை
ராமாயி

இளமைப்பருவம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ஆம் தேதி, செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயியை என்பாரைத் திருமணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு

காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1932 ஜனவரி 10 அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட தேசிய கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார்.

இறப்பு

சனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் சனவரி 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கில் கொள்ளி வைத்தனர்.

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .

துணைவியார்

இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.

நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தபால் தலை

இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திருப்பூர் குமரன் இளமைப்பருவம்திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குதிருப்பூர் குமரன் இறப்புதிருப்பூர் குமரன் நினைவகம்திருப்பூர் குமரன் தபால் தலைதிருப்பூர் குமரன் மேற்கோள்கள்திருப்பூர் குமரன் வெளி இணைப்புகள்திருப்பூர் குமரன்இந்திய தேசியக் கொடிஇந்தியாஈரோடு மாவட்டம்சட்ட மறுப்பு இயக்கம்சென்னிமலைதமிழ்நாடுதிருப்பூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈரான்மருதமலை முருகன் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்ஐக்கிய அரபு அமீரகம்குறிஞ்சி (திணை)இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைவடிவேலு (நடிகர்)நேர்பாலீர்ப்பு பெண்சமணம்கா. காளிமுத்துஅயோத்தி இராமர் கோயில்ஒட்டகம்புதுச்சேரிஇந்தியத் தேர்தல் ஆணையம்மூலம் (நோய்)நாயன்மார்வியாழன் (கோள்)விவேகபாநு (இதழ்)காவிரி ஆறுதலைவாசல் விஜய்தேவேந்திரகுல வேளாளர்குமரகுருபரர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சிதம்பரம் நடராசர் கோயில்உலா (இலக்கியம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகேரளம்எங்கேயும் காதல்தமிழர்ஜெ. ஜெயலலிதாஇந்தியாமுத்தொள்ளாயிரம்நீர் மாசுபாடுவே. செந்தில்பாலாஜிதங்க தமிழ்ச்செல்வன்நயினார் நாகேந்திரன்பசுபதி பாண்டியன்வேலூர் மக்களவைத் தொகுதிதாயுமானவர்ஆ. ராசாஹோலிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)விஷ்ணுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022வாணியர்அழகு முத்துக்கோன்சித்தர்கள் பட்டியல்நயன்தாராஇயோசிநாடிமின்னஞ்சல்புலிபகத் சிங்திதி, பஞ்சாங்கம்யாவரும் நலம்இந்தியப் பிரதமர்ராஜஸ்தான் ராயல்ஸ்கருச்சிதைவுபஞ்சாங்கம்பூலித்தேவன்தினகரன் (இந்தியா)கல்லணைஅன்னை தெரேசாசிவாஜி (பேரரசர்)பால் (இலக்கணம்)கௌதம புத்தர்பர்வத மலைதமிழில் சிற்றிலக்கியங்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்எடப்பாடி க. பழனிசாமிமுல்லை (திணை)ந. பிச்சமூர்த்திபால் கனகராஜ்இன்னா நாற்பதுதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்🡆 More