இந்து தாரா

தாரா (Tara) என்பது பத்து மகாவித்யா தேவதைகளில் அம்மக்களின் கூறப்படும் தெய்வம் ஆவாள்.

தாரை என்பது வடமொழியில் விண்மீனைக் குறிக்கும்.

தாரா
இந்து தாரா
தாரா
அதிபதிதாய்மை, காமஞ்செறுத்தல் என்பவற்றின்
சமசுகிருதம்Tārā
தமிழ் எழுத்து முறைதாரா
வகைமகாவித்யா, பார்வதி
மந்திரம்ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தாராயை ஹூம் பட் ஸ்வாஹா (தசமகாவித்யா மந்திரம்)
ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா
ஆயுதம்கட்கம், கத்தி
துணைசிவன் (தாரகேசுவரன் வடிவில்)

தோற்றம்

தாரா, புத்த சமயத்திலிருந்து சாக்த சமயத்துக்கு வந்த தெய்வம் என்று நம்பப்படுகின்றது. சாக்த மரபில், பாற்கடல் கடைந்தபோது, ஆலகால நஞ்சை உண்ட சிவன், அதன் வீரியம் தாங்காமல் மயங்கியதாகவும், அப்போது, தாரையின் உருவெடுத்து ஈசனைத் தன் மடியில் தாங்கிய உமையவள், அவருக்குத் தன் ஞானப்பாலை ஊட்டி, அவரை சுயநினைவுக்குக் கொணர்ந்ததாகவும் ஒரு கதை சொல்கின்றது.

உருவவியல்

தாராவின் உருவவியல், காளியை ஒத்தது. இருவருமே, சிவன் மீது நின்ற நிலையிலேயே காட்சி தருவர். எனினும் தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.

காளியிலிருந்து தாராவை வேறுபடுத்துவது, அவள் கரங்களில் தாங்கியிருக்கும் தாமரையும் கத்தரிக்கோலும் ஆகும். தாராவின் கரங்களில், கத்தி, கபாலம், தாமரை, கத்தரிக்கோல் என்பன காணப்படும். உலக இச்சைகளிலிருந்து தன் அடியவனை வெட்டி விடுவிப்பதை, கத்தரிக்கோல் குறிக்கின்றது

வழிபாடு

வங்கத்திலுள்ள தாராபீடம் எனும் ஆலயம், தாரா வழிபடப்படும் புகழ்வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். பௌத்த தாராவோ, இந்தியா தாண்டி, தென்கிழக்காசியா, திபெத் எனப் பல இடங்களிலும் போற்றப்படுகின்றாள்.

மேலும் பார்க்க

அடிக்குறிப்புகள்

உசாத்துணைகள்


வெளி இணைப்புகள்

இந்து தாரா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாரை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

இந்து தாரா தோற்றம்இந்து தாரா உருவவியல்இந்து தாரா வழிபாடுஇந்து தாரா மேலும் பார்க்கஇந்து தாரா அடிக்குறிப்புகள்இந்து தாரா உசாத்துணைகள்இந்து தாரா வெளி இணைப்புகள்இந்து தாராமகாவித்யா

🔥 Trending searches on Wiki தமிழ்:

குக்கு வித் கோமாளிகுகேஷ்வைதேகி காத்திருந்தாள்நாடகம்கள்ளுதமிழ் தேசம் (திரைப்படம்)சப்ஜா விதைகம்பராமாயணத்தின் அமைப்புபாண்டியர்செயற்கை நுண்ணறிவுசிறுபாணாற்றுப்படைபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்காலநிலை மாற்றம்வீட்டுக்கு வீடு வாசப்படிஅடல் ஓய்வூதியத் திட்டம்நாயன்மார்உரைநடைஜே பேபிபூனைமகரம்சினைப்பை நோய்க்குறிஇந்திரா காந்திவி.ஐ.பி (திரைப்படம்)வேற்றுமையுருபுதேஜஸ்வி சூர்யாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பரணி (இலக்கியம்)அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்வளையாபதிவ. உ. சிதம்பரம்பிள்ளைஆயுள் தண்டனைசஞ்சு சாம்சன்அசுவத்தாமன்ஆனைக்கொய்யாமுத்துராஜாதேம்பாவணிபொருநராற்றுப்படைகுலசேகர ஆழ்வார்தமிழ் எழுத்து முறைஇன்ஸ்ட்டாகிராம்தேர்தல் மைமுதலாம் உலகப் போர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தொல். திருமாவளவன்எச்.ஐ.விதமிழக வரலாறுகாதல் கொண்டேன்பித்தப்பைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்ஐங்குறுநூறுபசி (திரைப்படம்)மீனாட்சியாதவர்வசுதைவ குடும்பகம்ஐக்கிய நாடுகள் அவைதேசிக விநாயகம் பிள்ளைபொருளாதாரம்சீவக சிந்தாமணிபனிக்குட நீர்இலங்கையின் மாவட்டங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்வேளாண்மைசுப்பிரமணிய பாரதிஇன்ஃபோசிஸ்முடியரசன்வெண்பாதமிழர்மாலைத்தீவுகள்ராக்கி மலைத்தொடர்மாம்பழம்திருப்பதிஇஸ்ரேல்வினைச்சொல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கூத்தாண்டவர் திருவிழாசங்கம் (முச்சங்கம்)மு. அ. சிதம்பரம் அரங்கம்🡆 More