தக்காண சுல்தானகங்கள்

தக்காணத்து சுல்தானகங்கள் (Deccan sultanates) என்பன தெற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஐந்து முஸ்லிம் பேரரசுகளைக் குறிக்கும்.

இவைகள் பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், அகமதுநகர் சுல்தானகம், பீதர் சுல்தானகம், பேரர் சுல்தானகம் ஆகியனவாகும். தக்காணத்து சுல்தானகங்கள் தக்காணத்து மேட்டுநிலப் பகுதியில் (Deccan Plateau), கிருஷ்ணா ஆறு மற்றும் விந்திய மலைத்தொடருக்கு இடையில் அமைந்திருந்தன. இவைகளில் பீஜாப்பூர், அஹ்மட்நகர், பெரார் ஆகியன 1490 இலும் பிடார், 1492 இலும் கொல்கொண்டா 1512 இலும் விடுதலை பெற்ற தனி அரசுகளாயின. 1510 இல் பீஜாப்பூர் கோவா நகரில் போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பை முறியடித்தனர் ஆயினும் பின்னர் அதே ஆண்டின் இறுதியில் அந்நகரத்தை இழந்தனர்.

தக்காண சுல்தானகங்கள்
தக்காணத்து சுல்தானகங்கள்

இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். 1565 இல் விஜயநகரப் பேரரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து தலைக்கோட்டை சமரில் தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். 1574 இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. 1619 இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் முகலாயப் பேரரசு கைப்பற்றியது. 1596 இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் 1616 க்கும் 1636 க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பீஜப்பூர் சுல்தானகம் ஆகியன அவுரங்கசீப்பினால் 1686-7 இல் கைப்பற்றப்பட்டன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

Tags:

1490149215101512அகமதுநகர் சுல்தானகம்இந்தியாகிருஷ்ணா ஆறுகோல்கொண்டா சுல்தானகம்கோவா (மாநிலம்)தக்காணத்து மேட்டுநிலம்தென்னிந்தியாபிஜப்பூர் சுல்தானகம்பீதர் சுல்தானகம்பேரர் சுல்தானகம்போர்த்துக்கீசர்முஸ்லிம்விந்திய மலைத்தொடர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமர்முருகன்தமிழ்விடு தூதுஅரசியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014பாரிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகௌதம புத்தர்சேது (திரைப்படம்)கேரளம்புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)உரிச்சொல்மீன் வகைகள் பட்டியல்மு. க. தமிழரசுஏப்ரல் 17பத்து தலமின்னஞ்சல்க. கிருஷ்ணசாமிவெண்பாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஓ காதல் கண்மணிவைரமுத்துபதினெண்மேற்கணக்குஔவையார் (சங்ககாலப் புலவர்)ஐஞ்சிறு காப்பியங்கள்சுனில் நரைன்வி.ஐ.பி (திரைப்படம்)திணைமனித மூளைமயக்கம் என்னகள்ளுதிருட்டுப்பயலே 2ஹாட் ஸ்டார்ஜவகர்லால் நேருமுடக்கு வாதம்ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)ராதிகா சரத்குமார்நாளிதழ்புலிடி. டி. வி. தினகரன்பொன்னியின் செல்வன்திலகபாமாகல்லணைதிராவிட முன்னேற்றக் கழகம்தொலைக்காட்சிகொரோனா வைரசுபழமொழி நானூறுஈரான்வௌவால்இந்து சமய அறநிலையத் துறைமலைபடுகடாம்யூடியூப்திருவிழாநீதி இலக்கியம்சிலம்பம்பாட்டாளி மக்கள் கட்சிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சிவாஜி கணேசன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தனுஷ்கோடிதிரைப்படம்தமிழ்நாடு சட்டப் பேரவைமீனா (நடிகை)இந்திரா காந்திகல்வெட்டுமருதம் (திணை)கலிங்கத்துப்பரணிதஞ்சைப் பெருவுடையார் கோயில்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்தினகரன் (இந்தியா)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிகம்பர்சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துபுதிய ஏழு உலக அதிசயங்கள்முக்குலத்தோர்வியாசர்பதிற்றுப்பத்து🡆 More