டோரேமான்

டோரேமான் என்பது ஒரு புகழ் பெற்ற ஜப்பானிய மங்காத் தொடராகும்.

இதை உருவாக்கியவர் கதாசிரியரும் ஓவியருமான ஃபியூஜிமோட்டோ ஆவார். இது அனிமே இயங்குபடத் தொடராகவும் வந்து பெரு வெற்றிபெற்றது. டோரோமான் என்னும் எந்திரப் பூனை, எதிர்காலத்திலிருந்து (22ஆம் நூற்றாண்டு) வந்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வாழும் நோபிடா நோபி Nobita Nobi (野比 のび太 Nobi Nobita?) என்ற சிறுவனுடன் தங்கியிருந்து அவனது அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதே இத்தொடரின் கதை. இந்த படக்கதைத் தொடர் 1969இல் இருந்து ஆறு வெவ்வேறு இதழ்களில் இருந்து வெளிவந்தது. மொத்தம் 1345 கதைகள் வெளியானது.

டோரேமான்
ドラえもん
Genreநகைச்சுவைக் கதை, அறிவியல் புனைவு
மங்கா
Author ஹிரோஷி ஃபியூஜிமோட்டோ
Publisher ஷொகாகுக்கன் (Shogakukan)
English publisher ஃபியூஜிகோ புரோ
Demographic குழந்தைகளுக்கான அனிமே, மங்கா
Magazine (ஷொகாகுக்கனின் மழலையர் இதழ்கள்)
Original run திசம்பர் 19691996
Volumes 45 (List of volumes)
கார்டூன் தொலைக்காட்சித் தொடர்கள்
  • Doraemon (1973)
  • Doraemon (1979)
  • Doraemon (2005)
Related works
  • The Doraemons
  • Dorabase
  • Kiteretsu Daihyakka
டோரேமான்
பேருந்து ஒன்றில் தீட்டப்பட்டுள்ள டோரேமான் ஓவியங்கள்

1973-ஆம் ஆண்டு முதல் இயங்குபடத் தொடராகத் தொடர்ந்து வெளியாகிவருகிறது. 1980 முதல் சலனத் திரைப்படமாக வெளிவந்துகொண்டிருக்கும் இத்தொடரின் 36-வது திரைப்படம் "ஸ்டாண்ட் பை டோரேமான்" (Stand by Me Doraemon) ஆகத்து 8, 2014 அன்று வெளியாகியது. இப்படம் வசூலில் சாதனைப் படைத்தது. ஜப்பானில் பல இரயில்களில் இப்போதும் முழுக்க முழுக்க டோரேமானை வரைந்து அழகுபடுத்தி வைத்திருக்கிறார்கள். இது (DISNEY CHANNEL)தமிழில் ஒளிபரப்புகிறது.

முதன்மைக் கதைப் பாத்திரங்கள்

டோரேமான்

டோரேமான் என்பது நான்கரை அடி உயர இயந்திரப் பூனை. இந்த டோரேமான் மனித இயல்புகளைக் கொண்டது. இது எலியைக் கண்டால் பயப்படும். 2112-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதியில் மட்சுஷிபா இயந்திர ஆலையில் உருவாக்கப்பட்ட டோரேமானிடம் ஒரு நான்காவது பரிணாமப் பை இருக்கிறது.

இந்தப் பையிலிருந்து நினைத்த எதை வேண்டுமானாலும் எடுக்கும் வல்லமை கொண்ட டோரேமான், அவசரத்தில் தேவையான பொருளுக்குப் பதிலாக வேறு ஒன்றை எடுத்துவிட்டு அவதிப்படுவது தொடரின் வழக்கமான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று. டோரேயாகி என்ற சிவப்பு பீன்ஸ் உணவை விரும்பிச் சாப்பிடும் டோரேமானிடம், எந்த இடத்துக்கும் செல்ல வைக்கும் கதவு ஒன்றும் உண்டு. இதைத் திறந்தால், நினைத்த இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடலாம். டோரேமானிடம் இருக்கும் பல சிறப்பு சக்திகளில் இதுவும் ஒன்று.

நோபிட்டா நோபி

நோபிட்டா (野比 のび太 Nobi Nobita?)இவனது பிறந்த நாள் ஆகஸ்ட் 7. நான்காம் வகுப்பு படிப்பவன். நோபிடா வழக்கமாக காலையில் பள்ளிக்குத் தாமதமாகக் கிளம்புவதால் பெற்றோர் திட்டுவார்கள். அவசர அவசரமாகப் போகும்போது சில சங்கடங்கள் சந்திப்பான். நாய்கள் துரத்த, தப்பி ஓடி சோர்வாகப் பள்ளிக்கு வந்து சேர்வான். அந்தக் களைப்பிலேயே தேர்விலும் தோல்வி அடைந்து ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவான். சக மாணவர்களின் கிண்டலை எதிர்கொண்டு தன்னம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான் நோபிட்டா.

பயந்த சுபாவத்துடன் காணப்படும் நோபிட்டா ஒரே நொடியில் தூங்கி விடுவான். எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பிக்கும் அவன், மனதளவில் அனைவருக்கும் உதவி செய்ய நினைக்கும் நல்லவன் என்பதைப் பள்ளித் தோழி ஷிசூகா மட்டும் உணர்ந்திருப்பாள்.

ஆனால், நோபிட்டாவின் செயல்கள் இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து, ஜெய்கோவை மணந்து, தனது சந்ததியினரை வறுமையில் வாட வைப்பான் என்பதை உணரும் டோரேமான், அவனுடைய குணாதிசயங்களைச் சிறிது சிறிதாக மாற்றி, அவனுக்கு உதவும். வருங்காலத்தில் ஜப்பான் சுற்றுச்சூழல் துறையில் முக்கிய அதிகாரியாக அவனை ஆக்குவதே இந்தத் தொடரின் கதை அமைப்பு.

ஷிசூகா மினமாட்டோ

நோபிடாவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே கதாபாத்திரமான ஷிசூகா(源 静香 Minamoto Shizuka?) என்னும் சிறுமி இவள் ஒரு தூய்மை விரும்பி. சக மாணவர்கள் கிண்டல் செய்யும்போது நோபிடாவைத் தேற்றுவதையே முக்கியக் கடமையாக கொண்ட ஷிசூகாவுக்கு இனிப்பு உருளைக்கிழங்கும், வயலின் வாசிப்பதும் ரொம்பவும் பிடிக்கும் இவளது பிறந்தநாள் 8 மே.

டகேஷி கோடா (ஜியான்)

உருவத்தில் பெரியவனான டகேஷி (剛田 武 Gōda Takeshi?) (ஜியான் என்பது செல்லப் பெயர் ) ஒரு முரடன். சக மாணவர்களின் பொம்மைகளையும் புத்தகங்களையும் பறித்துக்கொள்வதுடன் அவர்களுடன் சண்டையும் போடுவான். தன்னை ஒரு சிறந்த பாடகனாகக் கருதிக் கொடூரமாகப் பாடும் இவன், பாடுவதைப் போலவே சமையலிலும் சொதப்புவான். அவனுக்கு ஜெய்கோ என்ற தங்கை உண்டு.

டோரேமி

டோரேமான் உருவாக்கப்பட்ட அதே தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட டோரேமி (Dorami ドラミ?), எதிர்காலத்தில் நோபிடாவின் பேரனான சேவாஷியிடம் இருக்கும் இயந்திரம். டோரேமானின் இரண்டு வயது இளைய சகோதரியான டோரேமி, அதிகத் திறன் கொண்ட இயந்திரம்.

டோரேமான் எலிகளைக் கண்டு பயப்படுவதைப் போல, டோரேமி கரப்பான்பூச்சிகளைக் கண்டு பயப்படும். கால இயந்திரத்தில் பயணித்து நோபிட்டாவுக்கு உதவ பல முறை டோரேமி வந்து சென்றுள்ளது.

ஜெய்கோ

டகேஷியின் சகோதரியான ஜெய்கோ(Jaiko Goda ジャイ子?) ஒரு காமிக்ஸ் ஓவியர். முன்கோபியாக இருந்தாலும் நல்ல மனம் கொண்டவளாகச் சித்தரிக்கப்பட்டிருப்பாள் ஜெய்கோ. பல சித்திரக்கதை போட்டிகளில் பங்கேற்றாலும் கதை சுமாராக இருப்பதால் வெற்றி வாய்ப்பை இழக்க, நண்பர்கள் அவளை ஊக்குவிப்பதாகக் கதை முன்னேறும்.

சலனப்பட தொலைக்காட்சித் தொடராக

இந்தக் கதைகள் முதன்முதலில் 1973இல் கார்டூன் தொடராக வெளிவந்தது. ஆனால் அது அவ்வளவு புகழ் பெறவில்லை. பிறகு 1979இல் புதியவிதமான கார்டூன் தொடராக வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றது. இத்தொடர் மார்ச்25, 2005 வரை 1787 பகுதிகளாக வந்துள்ளது.

உருவான கதை

கதாசிரியரும் ஓவியருமான ஃபியூஜிமோட்டோ, கதை எழுதவும் புதிய கதாபாத்திரங்களை உருவாக்கவும் தனக்கு உதவி செய்யவும் ஓர் இயந்திரம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய வீட்டருகே பூனைகள் சண்டையிடும் ஒலி கேட்டு எழுந்தார். அவருடைய மகளின் விளையாட்டுப் பொம்மை காலில் இடற, உடனே வந்த யோசனையின் விளைவாகத் தன் நண்பர் மூட்டோ அபிகோவுடன் சேர்ந்து உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரமே டோரேமான் என்ற இயந்திரப் பூனை.

டோரேமானின் கதை

இந்தக் கதை 1969-இல் எழுதப்பட்டது. எதிர்காலமான 2112-ல் சேவாஷி என்ற சிறுவன், தங்கள் குடும்பம் ஏன் வறுமையில் வாடுகிறது என்று ஆராய்ச்சி செய்கிறான். தன் தாத்தாவான நோபிட்டா நோபியின் காலத்தில் இருந்துதான் இந்த நிலை என்பதை அவன் அறிகிறான்.

எதிர்காலத்தையும் குடும்பத் தொழிலையும் கைவிட்டுவிட்ட நோபிட்டாவின் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் இயந்திரத்தை அனுப்ப நினைக்கிறான் எதிர்காலத்தில் இருக்கும் அவருடைய பேரன்.

ஆனால், வறுமையில் வாடும் அவனுடைய குடும்பத்தால், மிகவும் சொற்ப அளவிலான கைச்செலவுப் பணம் (பாக்கெட் மணி )தான் அவனுக்குக் கிடைக்கிறது. அதனால் புத்தம்புதிய, உயர் தொழில்நுட்ப இயந்திரத்தை அவனால் வாங்க முடியவில்லை. தான் சேமித்த கொஞ்சப் பணத்தில், ஒரு தொழிற்சாலையில் நிராகரிக்கப்பட்ட ஓர் இயந்திரப் பூனையை வாங்கிக் கடந்த காலத்துக்கு அனுப்புகிறான் சேவாஷி.

டோரேமான் தமிழ்

இந்தியா

2005 - ஆம் ஆண்டு டோரேமான் தமிழில் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கோள்

Tags:

டோரேமான் முதன்மைக் கதைப் பாத்திரங்கள்டோரேமான் சலனப்பட தொலைக்காட்சித் தொடராகடோரேமான் உருவான கதைடோரேமான் டோரேமானின் கதைடோரேமான் தமிழ்டோரேமான் மேற்கோள்டோரேமான்அனிமேமங்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைஔவையார் (சங்ககாலப் புலவர்)மண்ணீரல்ஆண்டாள்சினைப்பை நோய்க்குறிகேள்விஅரண்மனை (திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பறையர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிதம்பரம் மக்களவைத் தொகுதிநவக்கிரகம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்விளையாட்டுஇணையம்எலான் மசுக்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இளங்கோவடிகள்மாநிலங்களவைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ரோசுமேரிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திரா காந்திதூது (பாட்டியல்)பாதரசம்வேளாண்மைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஜவகர்லால் நேருமூலம் (நோய்)பத்து தலசுரதாமாதேசுவரன் மலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மஞ்சள் காமாலைஏலாதிஅமில மழைநந்திக் கலம்பகம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மண் பானைபெண்ணியம்இந்தியக் குடியரசுத் தலைவர்முத்துராமலிங்கத் தேவர்திரிசாபுதுச்சேரிசூழ்நிலை மண்டலம்ர. பிரக்ஞானந்தாசங்கம் (முச்சங்கம்)உயிர்மெய் எழுத்துகள்கணையம்பிள்ளைத்தமிழ்இராவண காவியம்கொன்றை வேந்தன்தேசிக விநாயகம் பிள்ளைசிலப்பதிகாரம்தாஜ் மகால்நான்மணிக்கடிகைசடுகுடுமறவர் (இனக் குழுமம்)பாரதிதாசன்விருமாண்டிகோத்திரம்தவசிஇந்திய தேசிய சின்னங்கள்சித்த மருத்துவம்சைவ சமயம்புற்றுநோய்சிங்கப்பூர்கிராம நத்தம் (நிலம்)ஆசாரக்கோவைஇந்திய அரசியலமைப்புமங்காத்தா (திரைப்படம்)முல்லை (திணை)மியா காலிஃபாதிரௌபதி முர்முசிறுநீரகம்திருச்சிராப்பள்ளிஉலகப் புத்தக நாள்மனித மூளை🡆 More