சோளம்: தாவரத்தின் இனம்

ஏறத்தாழ 30 இனங்கள்.

சோளம்
சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
காமெனிலிட்டுகள்
வரிசை:
Poales
குடும்பம்:
போவாசியே
பேரினம்:
சோளம்

இனங்கள்

சோளம் (இலங்கையில் 'இறுங்கு') என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரலேசியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை ஆகும். இது சிறிய தானியப் பயிராகும்.

வரலாறு

இந்திய மாநிலமான தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் இது திருச்சிமாவட்டம், பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரிடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.

சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம் 
வெண்சாமரச் சோளம்
சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம் 
வெண்சாமரச் சோளப்பொரிகள்


இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம்

வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

  • ஆற்றல்-349 கி.கலோரி
  • புரதம்-10.4 கிராம்
  • கொழுப்பு-1.9 கி
  • மாவுச்சத்து - 72.6 கி
  • கால்சியம் - 25 மி.லி
  • இரும்புசத்து 4.1 மி.கி,
  • பி-கரோட்டின் – 47 மி.கி
  • தயமின் - 0.37 மி.கி
  • ரிபோப்ளோவின் 0.13 மி.லி
  • நயசின் - 3.1 மி.கி.
சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம் 

கனிமங்கள்

பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள கனிம அளவுகள்,

  • 30.00 மிகி கால்சியம்,
  • 0.00 மிகி இரும்பு,
  • 0.00 மிகி மெக்னீசியம்,
  • 49.00 மிகி பாஸ்பரஸ்,
  • 421.00 மிகி பொட்டாசியம்,
  • 4.00 மிகி சோடியம்.

வைட்டமின்கள்

பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள விட்டமின்களின் அளவுகள், - 2.00 மிகி வைட்டமின் ஏ (ரெட்டினால் அல்லது கரோட்டின்), - 0.06 மிகி வைட்டமின் பி 1 (thiamin, தையமின்) (சோளம், - 0.08 மிகி வைட்டமின் B2 அல்லது ரிபோப்லாவின் (சோளம், - 0.20 மிகி வைட்டமின் B6 அல்லது பைரிடாக்சின், - 18.00 வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் மிகி, - 0.00 மிகி வைட்டமின் ஈ அல்லது தொக்கோபெரோல்.

பழுப்பு நிற சோளம்

சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம் 
சிவப்பு சோளம்

இவ்வகை சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. இது பெரும்பாலும் தென் ஆப்ரிக்காவில் விளைவிக்கப்படுகின்றது. தற்போது இது மழை குறைவாக பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றது. இது நான்கு மீட்டர் உயரம் வரை வளரும். இப்பயிர் மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் வரை சுற்றளவு கொண்டிருக்கும். இதன் இலைகள் மருந்து, மற்றும் எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது.

சோளம் பயிரிடும் நாடுகள்

சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம் 
இந்திய சோளம்

சோளம் அனைத்து பகுதிகளிலும் விளைய ஏற்ற பயிராகும். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவினுடைய இயற்கைச் சோளமாகும். மக்காச் சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாடு ஆகும். மக்காச்சோளம் தென் அமெரிக்க நாட்டில் இருந்து வந்த பயிர் ஆகும். சிறுசோளமும், மக்காச்சோளமும் இந்தியாவின் பாரம்பரிய பயிராகும்.

2011 ல் சோளத்தின் உற்பத்தி நைஜீரியாவில் (12.6%), இந்தியாவில் (11.2%), மெக்ஸிகோவில் (11.2%) மற்றும் அமெரிக்காவில் (10.0%) ஆக இருந்தது. சோளம் ஒரு பரவலான வெப்பநிலையில், அதிக உயரத்தில் வளரும். நச்சு மண்களிலும் வளர்க்க முடியும். இது மிகவும் வறட்சியில் வளரும் பயிராகும். இது பசிபிக் பகுதிகளிலும் விளையக்கூடியது ஆகும்.

சாகுபடி முறை

  • இருங்கு சோளத்தை ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
  • மானாவாரி நிலங்களில் சித்திரை மாதம் ஒரு உழவு செய்து மண்ணை ஆறப்போட வேண்டும்.
  • ஆடி மாதத்தில், ஒரு மழை கிடைத்தவுடன், சோளத்தை விதைத்து, நிலத்தை உழவு செய்ய வேண்டும்.
  • ஆவணி மாதத்தில் களை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.
  • சோள விளைச்சலைப் பொறுத்து, மார்கழி மாதக் கடைசிக்குள் அறுவடை செய்து விட வேண்டும்.
  • நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம்.
  • நிலத்தில் இருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்தெடுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.

சோளத்தின் பயன்கள்

சோளம் அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது. உணவுக்காக மேலைநாடுகளில் அதிக அளவில் இவை பயிரிடப்படுகின்றது. மக்காச்சோள அவல் அதிக அளவு காலை சிற்றுண்டிக்கு பயன்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் கால்நடை தீவனத்திற்காகவும் சோளம் பயன்படுகின்றன. இது கஞ்சி சர்க்கரை (சோளசர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழிற் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது ஆகும். இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும்.
  • சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன.
  • சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் பயன்படும் முக்கிய பொருளாகும்.

பயிரிடல் மற்றும் பயன்பாடு

சோளம்: வரலாறு, சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம், பழுப்பு நிற சோளம் 
ஜான்சன் புல் என்றழைக்கப்படும் சொர்கம் ஹலாபென்ஸ்

ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சொந்தமான சோர்கம் பைக்கலர் (sorghum bicolor)), தற்போது பல பயிரிடப்பட்ட வடிவங்களுடன், உலகளாவிய முக்கிய பயிர் ஆகும், இது உணவுக்காகவும் (தானியமாகவும் சோர்கம் சிரப் அல்லது சோர்கம் மொலாசஸ் வடிவிலும்), விலங்கு தீவனம், மது பானங்கள், மற்றும் உயிரி எரிபொருள்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான வகைகள் வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டவையாகும், வறண்ட பகுதிகளிலும், குறிப்பாக ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கான உணவுப்பொருட்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த வகைகள் பல வெப்ப மண்டலப் பகுதிகளில் மேய்ச்சலின் முக்கிய கூறுகளை உருவாக்குகின்றன. ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசியா ஆகியவற்றில் முக்கிய உணவுப் பயிர்கள் எஸ்.பைகோலர் ஆகும், இது உலகின் ஐந்தாவது மிக முக்கியமான தானிய பயிர் ஆகும்.

சோளத்தின் சில சிற்றினங்கள் ஆரம்ப வளர்ச்சி நிலைகளில் ஹைட்ரஜன் சயனைடு மற்றும் நைட்ரேட்டுகளின் அளவுகள் இளம் மேய்ச்சல் விலங்ககளுக்கு கொல்லும் அளவிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன.வறட்சி அல்லது வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சோளத் தாவரங்களில் சானைட் மற்றும நைட்ரேட்டுகள் காணப்படுகின்றன.

சோளத்தின் மற்றொரு வகையான ஜான்சன் புல் (Johnson Grass) சொர்கம் ஹாலப்பென்ஸ் (S. halapense) தாவரத்தை ஆக்கிரமித்தக்கொள்ளும் தாவரமாக இனமாக ஐக்கிய அமரிக்காவின் வேளான்மைத்துறை வகைப்படுத்தியுள்ளது.

பன்மயம்

வ.எண் சோளத்தின் சிற்றின வகைகளின் தாவரவியல் பெயர் பயன்படுத்தும் நாடுகள் / விளையும் பகுதிகள்
1 சொர்கம் ஆம்ப்லம் Sorghum amplum வடமேற்கு ஆத்திரேலியா
2 சொர்கம் ஆங்குஸ்டம் Sorghum angustum குயின்சுலாந்து
3 சொர்கம் அருந்திநேசியம் Sorghum arundinaceum ஆப்பிரிக்கா, இந்திய துணைக்கண்டம்,மடகாசுகர் மற்றும் மேற்கிந்திய பெருங்கடல் தீவுகள்
4 சொர்கம் பைகலர் Sorghum bicolor சர்க்கரை, பெரும்பாலும் தனித்தனியாக சோர்கம் எனப்படும், இது துர்ரா, ஜோவாரி, அல்லது மிலோ என்றும் அழைக்கப்படுகிறது. - ஆப்பிரிக்காவின் சஹெல் பிராந்தியத்திற்கு சொந்தமானது; பல இடங்களில் இயற்கையாக விளைகிறது
5 சொர்கம் பிராச்சிபோடம் Sorghum brachypodum ஆத்திரேலியாவின் வடக்கு எல்லைகள்
6 சொர்கம் புல்போசம் Sorghum bulbosum ஆத்திரேலியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள்
7 சொர்காம் புர்மாஹிகம் Sorghum burmahicum தாய்லாந்து, மியான்மார்
8 சொர்காம் கான்ரோவெர்சம் Sorghum controversum இந்தியா
9 சொர்காம் ட்ருமொன்டீ Sorghum drummondii மேற்கு ஆப்பிரிக்காவின் சஹெல்
10 சொர்கம் இகாரிநேட்டம் Sorghum ecarinatum வடக்கு மற்றும் மேற்கு ஆத்திரேலியா
11 சொர்காம் எக்ஸ்டான்ஸ் Sorghum exstans ஆத்திரேலியாவின் வடக்கு எல்லை
12 சொர்காம் கிராண்டி (Sorghum grande) குயின்சுலாந்தின் வடக்குப்பகுதிகள்
13 சொர்காம் ஹாலிபென்ஸ் Sorghum halepense (ஜான்சன் புல்) வட ஆப்பிரிக்கா, கிழக்கு அட்லான்டிக் தீவுகள், தெற்காசியாவின் லெபனான் முதல் வியட்நாம், கிழக்கு அசியாவில் இயற்கையாக விளைகிறது, ஆத்திரேலியா, அமெரிக்கா.
14 சொர்கம் இன்டர்ஜெக்டம் Sorghum interjectum வடக்கு மற்றும் மேற்கு ஆத்திரேலியா
15 சொர்கம் இன்ட்ரன்ஸ் Sorghum intrans வடக்கு மற்றும் மேற்கு ஆத்திரேலியா
16 சொர்கம் லேக்சிபுளோரம் Sorghum laxiflorum பிலிப்பைன்சு, சுன்டா தீவுகள், நியூ கினியா, வடக்கு ஆத்திரேலியா
17 சொர்கம் லெய்யோகிளாடம் Sorghum leiocladum குயின்சுலாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா
18 சொர்கம் மேக்ரோஸ்பெர்மம் Sorghum macrospermum வடக்கு ஆத்திரேலியாவின் எல்லைகள்
19 சொர்கம் மடராங்கன்ஸ் Sorghum matarankense வடக்கு மற்றும் மேற்கு ஆத்திரேலியா
20 சொர்கம் நிடிடம் Sorghum nitidum கிழக்கு ஆசியா, இந்திய துணைக்கண்டம்,தென்கிழக்காசியா,நியூ கினியா,மைக்ரோனேசியா
21 சொர்கம் புளுமோசம் Sorghum plumosum ஆத்திரேலியா, நியூ கினியா, இந்தோனேசியா
22 சொர்கம் புரொபின்கம் Sorghum propinquum சீனா, இந்திய துணைக்கண்டம்,நியூ கினியா, கிறிஸ்துமசு தீவுகள், மைக்ரோனேசியா, குக் தீவுகள்
23 சொர்கம் பர்பரியோசிரீசியம் Sorghum purpureosericeum சஹெல், மாலி முதல் தான்சானியா, ஏமன், ஓமன், இந்தியா
24 சொர்கம் ஸ்டிப்போடியம் Sorghum stipoideum வடக்கு எல்லை மற்றும் மேற்கு ஆத்திரேலியா
25 சொர்கம் டைமொரென்ஸ் (Sorghum timorense) லெசர் சுன்டா தீவுகள் ,மலுக்கு, நியூ கினியா, வடக்கு ஆத்திரேலியா
26 சொர்கம் டிிரைக்கோகிளாடம் Sorghum trichocladum மெக்சிகோ , கௌதமாலா, ஹொண்டுராஸ்
27 சொர்கம் வெர்சிகலர் Sorghum versicolor தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா முதல் நமீபியா வரை, ஓமன்
28 சொர்கம் விர்காட்டம் Sorghum virgatum செனகல் முதல் இஸ்ரேலின் வரண்ட பகுதிகள்

ஆராய்ச்சி

சூரிய எரிசக்திக்கு மாற்றாக வேதிய எரிசக்தியை மாற்றியமைப்பதில் சோளம் மிகவும் திறன் பட பங்காற்றுகிறது, மேலும் பிற தானிய பயிர்களை ஒப்பிடும்போது சோளப்பயிர்கள் குறைவான நீரைப் பயன்படுத்துகிறது. இனிப்பு சோளத்தின் தண்டுகளில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கமானது உயிர் எரிபொருளான எத்தனால் உற்பத்திக்கு, கரியமில வாயு, சிங்கஸ் மற்றும் உயிர் எரிபொருள் தயாரிப்பிலும் பெரும் பங்காற்றுகின்றன.

மேற்கோள்கள்

தொடர்புடைய சுட்டிகள்

Tags:

சோளம் வரலாறுசோளம் சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம்சோளம் பழுப்பு நிற சோளம் பயிரிடும் நாடுகள்சோளம் சாகுபடி முறைசோளம் சோளத்தின் பயன்கள்சோளம் பயிரிடல் மற்றும் பயன்பாடுசோளம் பன்மயம்சோளம் ஆராய்ச்சிசோளம் மேற்கோள்கள்சோளம் தொடர்புடைய சுட்டிகள்சோளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்திரைப்படம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழர் விளையாட்டுகள்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்மதுரை மக்களவைத் தொகுதிமக்களாட்சிநேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்கஜினி (திரைப்படம்)வசுதைவ குடும்பகம்பீனிக்ஸ் (பறவை)சின்ன வீடுபண்பாடு108 வைணவத் திருத்தலங்கள்இந்திய நாடாளுமன்றம்அம்பிகா (நடிகை)பட்டினப் பாலைபூப்புனித நீராட்டு விழாஉருவக அணிஅயோத்தி இராமர் கோயில்மதுரைஅன்னி பெசண்ட்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சின்னக்கண்ணம்மாதமிழர் நிலத்திணைகள்உயர்ந்த உள்ளம்அரண்மனை (திரைப்படம்)தொழினுட்பம்காதல் கொண்டேன்சிறுதானியம்நரேந்திர மோதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)புனர்பூசம் (நட்சத்திரம்)இயற்கை வளம்எடப்பாடி க. பழனிசாமிநீலகிரி மக்களவைத் தொகுதிதேர்தல் பத்திரம் (இந்தியா)இரண்டாம் உலகப் போர்வீரன் சுந்தரலிங்கம்ஈரோடு மக்களவைத் தொகுதிவைப்புத்தொகை (தேர்தல்)ஆனந்த விகடன்மஞ்சள் காமாலைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கணியன் பூங்குன்றனார்ஐக்கிய நாடுகள் அவைஅயோத்தி தாசர்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)பகத் சிங்புரோஜெஸ்டிரோன்பஞ்சபூதத் தலங்கள்சித்தார்த்ஈரோடு தமிழன்பன்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுக்கூடற் பள்ளுஹாட் ஸ்டார்குற்றாலக் குறவஞ்சிதேசிய மாணவர் படை (இந்தியா)கன்னத்தில் முத்தமிட்டால்தொகாநிலைத் தொடர்யுகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வெள்ளி (கோள்)மகாவீரர் ஜெயந்திஆரணி மக்களவைத் தொகுதிதிருநங்கைதிருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)ஸ்ரீலீலாபித்தப்பைஆசிரியர்புதுமைப்பித்தன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)இராம நவமிஇந்தியக் குடியியல் பணிகள் தேர்வு2019 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியன் பிரீமியர் லீக்🡆 More