சிறுத்தை

சிறுத்தை (Leopard) பூனைப் பேரினத்தின் உறுப்பினரும் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும்.

சிறுத்தை
சிறுத்தை
குரூகர் தேசியப் பூங்காவில் உள்ள ஓர் ஆப்பிரிக்க சிறுத்தை (P. p. pardus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரிய பூனை
இனம்:
P. pardus
இருசொற் பெயரீடு
Panthera pardus
(லின்னேயசு, 1758)
சிறுத்தை
சிறுத்தைகளின் பரம்பல், முன்பு (பச்சை), தற்போது (சிவப்பு), மற்றும் நிலையற்றது (மஞ்சள்)

ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது. இவை தற்போது உப சகார ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே பிரதானமாகக் காணப்படுகின்றன. மேலும் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோசீனா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறியளவில் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய மண்டையோட்டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும். தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியனவாயும் மிகவும் நெருக்கமாகவும் இருக்கும். மேலும் ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது. கருமை நிறமான சிறுத்தைகளும் ஜாகுவார்களும் கருஞ்சிறுத்தைகள் (black panthers) என அழைக்கப்படுகின்றன.

சூழலுக்குத் தக்கதான வேட்டையாடும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை, 58 kilometres per hour (36 mph)ஐ நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை, பாரமான இரையையும் தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல், மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது. சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும். இதன் வாழ்விடங்கள் மழைக்காடுகளில் இருந்து பாலைவனப் பகுதிகள் வரை வேறுபடுகின்றது.

மேற்கோள்கள்

Tags:

அச்சுறு நிலையை அண்மித்த இனம்இந்தியாஇந்தோசீனாஇந்தோனேசியாஇலங்கைசிங்கம்சீனாசைபீரியாஜாகுவார்தென்னாபிரிக்காபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்பாகிஸ்தான்புலிமலேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகருப்பசாமிகலிங்கத்துப்பரணிவயாகராதாமரைஇனியவை நாற்பதுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திய தேசிய காங்கிரசுஅளபெடைசீரடி சாயி பாபாதசாவதாரம் (இந்து சமயம்)கலாநிதி மாறன்குறவஞ்சிதைப்பொங்கல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சஞ்சு சாம்சன்மதீச பத்திரனகாதல் (திரைப்படம்)மரகத நாணயம் (திரைப்படம்)பாரிவீரன் சுந்தரலிங்கம்பத்து தலநாயன்மார் பட்டியல்இந்தியத் தேர்தல் ஆணையம்விளையாட்டுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுயலுக்கு மூணு கால்மூலம் (நோய்)சப்ஜா விதைதொலைக்காட்சிநாயன்மார்அறுபடைவீடுகள்திருப்பூர் குமரன்அனுமன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்தாவரம்மதுரைநரேந்திர மோதிதேம்பாவணிபத்துப்பாட்டுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தேவநேயப் பாவாணர்இந்திய நாடாளுமன்றம்சூரரைப் போற்று (திரைப்படம்)தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்இயேசுமுன்னின்பம்ஐங்குறுநூறுசௌந்தர்யாமுத்துராமலிங்கத் தேவர்ராஜஸ்தான் ராயல்ஸ்வன்னியர்வி. ஜெயராமன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்முல்லைப்பாட்டுஇராமச்சந்திரன் கோவிந்தராசுமுலாம் பழம்வெள்ளியங்கிரி மலைசனீஸ்வரன்தேவாங்குஉன் சமையலறையில்காற்றுகாமராசர்ஆரணி (சட்டமன்றத் தொகுதி)அம்மனின் பெயர்களின் பட்டியல்விரை வீக்கம்ஆத்திசூடிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வாக்குரிமைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மட்பாண்டம்மலைபடுகடாம்மோகன்தாசு கரம்சந்த் காந்திசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மெய்யெழுத்துகுற்றியலுகரம்🡆 More