சிம்மவிஷ்ணு

சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான்.

மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

சிம்மவிஷ்ணு
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு
சிம்மவிஷ்ணு
மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறிப்படுகிறது.

ஆட்சிக்காலம்

சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. சமீபகால சாசன ஆராய்ச்சிகள் இக்காலம் கி.பி. 537 முதல் 570 வரையெனச் சான்றுறைக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 575 முதல் 615 வரையென ஒரு சாரர் கருதுகின்றனர்.

இராச்சிய விரிவாக்கம்

சிம்மவிஷ்ணு முடியேற்ற காலத்தில் பல்லவ இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. தென்னிந்திய தீபகர்ப்பம் ஐந்து சாம்ராச்சியங்களாய் ஆளப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகள் பல்லவர் சோழர் பாண்டியர்களாலும், கேரளம் சேரர்களாலும், கர்நாடகம் சாளுக்கியர்களாலும் ஆளப்பட்டன. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவிஷ்ணு சோழர், சேரர், பாண்டியர்களை ஒடுக்கி காஞ்சியை தலைநகராய்க் கொண்டு பல்லவ இராச்சியத்தை பரப்பினான். இதன் பின்னர் அமைந்த பல்லவ வம்சாவளியே பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர். இரு நூற்றாண்டுகள் நீடித்த, பலப்போர்களுக்கு காரணமான பல்லவ-சாளுக்கிய பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் காலத்தில்தான்.

சமயச் சார்பு

சிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தனாவான், அதனின் அவன் வைணவத்தை பின்பற்றினான் என அறியலாம். இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இவன் மகன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பின்னரே சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம்.

முடித்தொடர்ச்சி

சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான்.

ஆதாரங்கள்

  • Mahendravarman I Pallava: Artist and Patron of Mamallapuram by Marilyn Hirsh, Artibus Asiae, Vol. 48, No. 1/2. (1987), pp. 113

வெளியிணப்புகள்

Tags:

சிம்மவிஷ்ணு ஆட்சிக்காலம்சிம்மவிஷ்ணு இராச்சிய விரிவாக்கம்சிம்மவிஷ்ணு சமயச் சார்புசிம்மவிஷ்ணு முடித்தொடர்ச்சிசிம்மவிஷ்ணு ஆதாரங்கள்சிம்மவிஷ்ணு வெளியிணப்புகள்சிம்மவிஷ்ணுகளப்பிரர்காஞ்சிசமஸ்கிருதம்தொண்டை மண்டலம்பல்லவர்மகேந்திரவர்மன்மூன்றாம் சிம்மவர்மன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்ஜவகர்லால் நேருபெருஞ்சீரகம்அக்கிமின்னஞ்சல்நவக்கிரகம்எஸ். ஜெகத்ரட்சகன்அரண்மனை (திரைப்படம்)கொடைக்கானல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇஸ்ரேல்திருவள்ளுவர்தமிழிசை சௌந்தரராஜன்காற்றுகலம்பகம் (இலக்கியம்)பால் (இலக்கணம்)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபனிக்குட நீர்ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சங்க இலக்கியம்பார்க்கவகுலம்உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்சூரைமுடியரசன்முத்தொள்ளாயிரம்சுபாஷ் சந்திர போஸ்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்புதிய ஏழு உலக அதிசயங்கள்அன்புமணி ராமதாஸ்குறை ஒன்றும் இல்லை (பாடல்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகாமம்தினேஷ் கார்த்திக்நான் அடிமை இல்லை (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்இலங்கையின் மாவட்டங்கள்அணி இலக்கணம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஅறுபது ஆண்டுகள்அக்பர்சொல்தொழினுட்பம்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)சித்தார்த்வல்லினம் மிகும் இடங்கள்நகைச்சுவைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024செயற்கை நுண்ணறிவுமெய்யெழுத்துவிசயகாந்துஎயிட்சுசேலம் மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலைசென்னைஐந்து எஸ்கூகுள்திருமணம்இரண்டாம் உலகப் போர்வேலுப்பிள்ளை பிரபாகரன்கார்த்திக் (தமிழ் நடிகர்)தென்காசி மக்களவைத் தொகுதிஏற்காடுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வசுதைவ குடும்பகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)கலாநிதி வீராசாமிஆய்த எழுத்துபொது உரிமையியல் சட்டம்தாமரை (கவிஞர்)கோயம்புத்தூர்முத்துராமலிங்கத் தேவர்பாரதிதாசன்பிள்ளையார்ஏறுதழுவல்இலட்சம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்🡆 More