குறும்படம்

குறும்படம் என்பது, முழுநீளத் திரைப்படமாகக் கருதுவதற்குப் போதிய நீளம் இல்லாத திரைப்படங்களைக் குறிக்கும்.

நன்றி தெரிவிப்புப் பகுதி உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கி 40 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவாக ஓடக்கூடிய திரைப்படமே குறும்படம் எனத் திரைப்படக் கலைகள் அறிவியல்கள் கழகம் (Academy of Motion Picture Arts and Sciences) வரைவிலக்கணம் தருகின்றது. 1920 ஆம் ஆண்டுக்கும் 1970 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் குறும்படங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 35 மிமீ அளவுள்ள இரண்டு சுருள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் ஒரு வகை. மூன்று அல்லது நான்கு சுருள்களைக் கொண்ட திரைப்படங்கள் இரண்டாவது வகை.

பெரும்பாலும் குறும்படங்கள் உள்ளூர், தேசிய அல்லது அனைத்துலக திரைப்பட விழாக்களிலேயே திரையிடப்படுவதுடன், தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களினால் குறைந்த செலவில் அல்லது செலவில்லாமல் தயாரிக்கப்படுவனவாக உள்ளன. குறும்படங்களுக்கான நிதி திரைப்பட நல்கைகளூடாகவோ, இலாப நோக்கற்ற அமைப்புக்களிடமிருந்தோ, ஆதரவு அளிப்பவர்களிடமிருந்தோ, தனிப்பட்ட நிதிகளூடாகவோதான் கிடைக்கின்றன. குறும்படங்கள் பொதுவாக தொழில் அனுபவங்களைப் பெறவும், எதிர்காலத் திட்டங்களுக்கு தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்தோ, தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்தோ, திரைப்படக் கலையகங்களிடம் இருந்தோ நிதி பெறும் நோக்கத்துக்காகத் தமது திறமையைக் காட்டுவதற்காகவுமே குறும்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு

குறும்படம் 
வில்லியம் கார்வூட் ஏராளமான குறும் படங்களில் நடித்துள்ளார், பெரும்பாலானவை 20 நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடியவை

தொடக்க காலத்தில் எல்லாத் திரைப்படங்களுமே குறுகிய படங்களாகவே இருந்தன. சில ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைந்த நேரம் ஓடக்கூடியனவாகவே இருந்தன. 1910 ஆம் ஆண்டு வரை திரைப்படங்கள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நீளம் கொண்டவையாகவே இருந்தன. முதல் தொகுதித் திரைப்படங்கள் 1894 ஆம் ஆண்டில் "கைனெட்டோசுக்கோப்பு" என்னும் தோமசு எடிசனின் கருவி ஊடாகக் காட்டப்பட்டது. இது தனியாள் பார்ப்பதற்காக மட்டுமே. டி. டபிள்யூ. கிரிபித்தின் "தேசத்தின் பிறப்பு" (The Birth of a Nation) போன்ற நீளமான படங்களுடன் ஒப்பிடும்போது நீளம் குறைவான நகைச்சுவைப் படங்களே பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டளவில் ஒரு நுழைவுச் சீட்டை வாங்குவதன் மூலம் முழு நீளப்படம், இரண்டாவது நீளப் படம், குறும் நகைச்சுவைப் படம், 5 - 10 நிமிடக் கேலிச் சித்திரப் படங்கள், ச்ய்திப் படங்கள் போன்ற பல்வேறுபட்ட படங்களைப் பார்க்க முடியும்.

குறும் நகைச்சுவைப் படங்கள் குறிப்பாகப் பெயர் பெற்றிருந்தன. அவை தொடராக வெளிவந்தன. கேலிச் சித்திர அசை படங்கள் முதன்மையாகக் குறும் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. உண்மையில் எல்லா முக்கியமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும், குறும்படத் தயாரிப்புக்கான பிரிவுகளைக் கொண்டிருந்தன. குறிப்பாக ஊமைப்படக் காலத்திலும், தொடக்க பேசும் படக் காலத்திலும் பல நிறுவனங்கள் குறும்படங்களை மட்டும் அல்லது பெரும்பான்மையாகக் குறும்படங்களைத் தயாரித்தன. எடுத்துக்காட்டாக ஆல் ரோச் 1935க்குப் பின் லாரலையும் ஆடியையும் (Laurel and Hardy) முழு நேரம் முழு நீளப்படங்களுக்கு மாற்றியது.

1930களில் பெரும் பொருளாதார வீழ்ச்சியினால் பெரும்பாலான நாடுகளில் விநியோக முறை மாற்றம் அடைந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் தாமே தமது விருப்பப்படி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் நிலைக்குப் பதிலாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் முதன்மைத் திரைப்படம், துணைப்படம், கேலிச் சித்திரப்படம், மற்றும் சில உள்ளிட்ட ஒரு தொகுதியாக விற்பனை செய்யத் தொடங்கின. ஒரு நுழைவுச் சீட்டில் இரண்டு முழுநீளப் படங்களைக் காட்டும் முறை எழுச்சியுற்றபோது, இரண்டு படச் சுருள்களைக் கொண்ட குறும்படங்கள் வணிக அடிப்படையிலான படங்கள் என்னும் நிலையில் இருந்து வீழ்ச்சியடையத் தொடங்கின.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொருளாதாரம்தங்கம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்மியா காலிஃபாதரில் மிட்செல்காவிரி ஆறுவைணவ சமயம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)கேழ்வரகுபீப்பாய்எ. வ. வேலுகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்தென்னிந்தியாமயில்ஏலாதிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சாத்துகுடிபவானிசாகர் அணைஇந்து சமயம்புணர்ச்சி (இலக்கணம்)வேற்றுமையுருபுகாப்பியம்பதிற்றுப்பத்துகே. எல். ராகுல்மெய்அகமுடையார்பல்லவர்பிள்ளைத்தமிழ்மாம்பழம்புங்கைமொயீன் அலிகல்வெட்டுகருப்பு நிலாகபிலர் (சங்ககாலம்)விஜய் வர்மாசமயபுரம் மாரியம்மன் கோயில்லால் சலாம் (2024 திரைப்படம்)ஜவகர்லால் நேருஆய்த எழுத்து (திரைப்படம்)பிள்ளையார்சைவ சமயம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்தமிழ்ப் பருவப்பெயர்கள்தேர்தல் மைவினோத் காம்ப்ளிஅதியமான்காயத்திரி ரேமாவாஞ்சிநாதன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அக்பர்மண்ணீரல்கண்ணகிநிணநீர்க்கணுபதினெண்மேற்கணக்குஅணி இலக்கணம்கலம்பகம் (இலக்கியம்)தமிழர் பருவ காலங்கள்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்பஞ்சாங்கம்பி. காளியம்மாள்கிருட்டிணன்இந்திய வரலாற்றுக் காலக்கோடுஅட்டமா சித்திகள்விவேகானந்தர்நவரத்தினங்கள்வீரமாமுனிவர்பத்து தலமுன்னின்பம்கார்த்திக் (தமிழ் நடிகர்)உவமையணிஇந்திய வரலாறுகீர்த்தி சுரேஷ்சித்ரா பெளர்ணமிதமிழர்வெள்ளி (கோள்)இட்லர்தரணி🡆 More