காமினி திசாநாயக்கா

லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake, சிங்களம்: ලයනල් ගාමිණි දිසානායක; மார்ச் 20, 1942 - அக்டோபர் 24, 1994) இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பாளருமாவார்.

காமினி திசாநாயக்கா
Gamini Dissanayake
காமினி திசாநாயக்கா
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
25 ஆகத்து 1994 – 24 அக்டோபர் 1994
குடியரசுத் தலைவர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பிரதமர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் [நீர்ப்பாசன, மின்திறன், நெடுஞ்சாலைகள், நில, நில மேம்பாடு, தோட்டத்தொழில், மகாவலி மேம்பாடு அமைச்சர்
நுவரெலியா-மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச் 1942
கண்டி, இலங்கை
இறப்பு24 அக்டோபர் 1994(1994-10-24) (அகவை 52)
கொழும்பு, இலங்கை (படுகொலை)
துணைவர்சிறிமா திசாநாயக்க
பிள்ளைகள்நவீன், மயந்த, வருணி
முன்னாள் கல்லூரிகண்டி திரித்துவக் கல்லூரி,
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

தொடக்க வாழ்க்கை

இலங்கையின் மலையகத்தின் கொத்மலையில் பிறந்தார். அவரது தந்தையார் இலங்கை சுதந்திரக் கட்சியில் சாலமன் பண்டாரநாயக்காவின் அரசில் பிரதி அமைச்சராக செயற்பட்டு வந்தார். திசாநாயாக்கா கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். 1988 ஆம் ஆண்டு அதிபரின் சட்டத்தரணியாக பதவியேற்றார். 1992 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலையில் எம்.பில். பட்டப்படிப்பை முடித்தார்.

அரசியல் வாழ்க்கை

1970 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நுவரெலியா - மசுகெலியா பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இத்தேர்தலின் போது பாராளுமன்றம் சென்ற 17 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களில் காமினியும் ஒருவராவார். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சராக பதவியேற்றார். இலங்கையின் மகாவலி துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை இவர் 6 ஆண்டுகளில் முடித்தார்.

இறப்பு

டிங்கிரி பண்டா விஜயதுங்கா 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக தெரிவு செய்யப்பட்டார். அந்நேரம் இவரே பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவுமிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கூட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது இவர் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவரது மகன் நவீன் திசாநாயக்க இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசில் பிரதி அமைச்சராக பதவி வகித்தவர்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

காமினி திசாநாயக்கா தொடக்க வாழ்க்கைகாமினி திசாநாயக்கா அரசியல் வாழ்க்கைகாமினி திசாநாயக்கா இறப்புகாமினி திசாநாயக்கா மேற்கோள்கள்காமினி திசாநாயக்கா வெளியிணைப்புகள்காமினி திசாநாயக்கா19421994அக்டோபர் 24இலங்கைசிங்களம் மொழிமார்ச் 20

🔥 Trending searches on Wiki தமிழ்:

தென்காசி மக்களவைத் தொகுதிஇராமலிங்க அடிகள்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஅறுசுவைகோத்திரம்ஆத்திசூடிசின்னக்கண்ணம்மாதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தமிழ்நாடு காவல்துறைமுல்லை (திணை)பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்இடைச்சொல்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அழகர் கோவில்தமிழ் நீதி நூல்கள்பூப்புனித நீராட்டு விழாபக்கவாதம்வரலாறுஅம்பேத்கர்உயர்ந்த உள்ளம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மின்னஞ்சல்இலட்சம்ஆந்திரப் பிரதேசம்தேர்தல்கிருட்டிணன்அறிவியல் தமிழ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பர்வத மலைஎஸ். ஜெகத்ரட்சகன்பெயர்ச்சொல்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்இந்தியத் தேர்தல்கள் 2024ஆடுஜீவிதம் (திரைப்படம்)ஜெயகாந்தன்ஜி. யு. போப்எச்.ஐ.விமயக்கம் என்னகுற்றாலக் குறவஞ்சிமகாபாரதம்சுற்றுச்சூழல்பால காண்டம்விபுலாநந்தர்திதி, பஞ்சாங்கம்நந்திவர்மன் (திரைப்படம்)இந்திய சமூக ஜனநாயகக் கட்சிஉமறுப் புலவர்சிதம்பரம் நடராசர் கோயில்தாயுமானவர்உயிர்மெய் எழுத்துகள்முல்லைப்பாட்டுபுரோஜெஸ்டிரோன்தமிழ்த்தாய் வாழ்த்துஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அழகுசீரடி சாயி பாபாமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்அன்னி பெசண்ட்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்இந்திய வாக்குப் பதிவு கருவிஐயப்பன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்காளமேகம்ஆதி திராவிடர்பெரும்பாணாற்றுப்படைஆடு ஜீவிதம்தமிழ்ஒளிபாண்டியர்இராமச்சந்திரன் கோவிந்தராசுதசாவதாரம் (இந்து சமயம்)இசுலாம்கே. என். நேருபரகலா பிரபாகர்ஏப்ரல் 18தஞ்சாவூர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திலகபாமா🡆 More